நேற்று இரவு என்னுடைய லினக்ஸ் வழங்கியில் (Fedora Core 2) தானியங்கி இற்றைப்படுத்தல் (Automatic Update through YUM) என்னுடைய தரவுத்தளப் பொதி MySqlஐ இற்றைப்படுத்தியிருக்கிறது. இதனால் ஏற்பட்ட சிறு குழப்பத்தில் நேற்று உள்ளிடப்பட்ட விஷயங்கள் காணமல் போயிருக்கின்றன. நான் கூகிள் பற்றி எழுதியிருந்த குறிப்பை மீண்டும் உள்ளிட்டிருக்கிறேன். இதன்மேல் நவன் பகவதி எழுதிய கருத்தும், தமிழ்மணம் – 100 குறிப்பின்மீது செல்வராஜ் எழுதிய கருத்தும் தொலைந்துபோயிருக்கிறது. இருவருக்கும் என் மன்னிப்புகள்.

இவற்றைத் தவிர நான் தூங்கிய நேரத்தில் ஏதாவது காணமல் போனதா என்று அறியேன். யாராவது எழுதியிருந்தால் அவர்களுக்கும் என் மன்னிப்புகள். முடிந்தால் தயவு செய்து மீண்டும் எழுதுங்கள்.