சம்பந்தமில்லாத இன்னொரு விருதுச் செய்தி; பில் கேட்ஸ்க்கு “நைட் ஆ·à®ªà¯ தி பிரிட்டிஷ் எம்பயர்” என்று சொல்லப்படும் உயரிய விருதை பிரிட்டிஷ் அரசியார் வழங்கியிருக்கிறார். பிரிட்டனின் வர்த்தகத்தை முன்னேற்றியதற்காக இந்த விருது கேட்ஸ்க்கு வழங்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னால் ரோலிங் ஸ்டோன்ஸ் ராக் குழுவின் மிக் ஜாகருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. சமீப காலத்தில் ராணியார் நைட் விருதுகளைத் தாராளமாக அள்ளி வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட போப் ஆண்டவர் துறவிப்பட்டம் வழங்குவதும் ராணியம்மா நைட் பட்டம் வழங்குவதும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்வது போல இருக்கிறது.

கடைசி நிலவரத்தின்படி போப்பாண்டவர் ராணியம்மாவை முந்தியிருக்கிறார். ராணி இன்னும் சிலரைப் பிடித்து நைட் விருது கொடுக்கலாம்.