இன்றைய பிபிஸி செய்தியின்படி ஆரேகான் மாநிலத்தில் பென்டன் கவுண்டி எல்லா திருமணங்களையும் தடை செய்திருக்கிறது. இது ஓரினர்களைப் பிரித்துக்காட்டி, அவர்களுக்குத் துரோகம் செய்யாமலிருக்க எடுக்கப்பட்ட முடிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் பென்டன் கவுண்டி ஓரினர்களின் திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்துப் பதிவு செய்யத் தொடங்கியது. தொடர்ந்து மதவாத, மற்றும் தீவிர இருபாலர் குழுவினர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட வழக்கின் எதிரொலியாக இந்த முடிவு நடந்தேறியிருக்கிறது. நாடு முழுவதிலும் ஒரினர்களின் திருமணங்களை அங்கீகரிக்கக்கூடாது என்று தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளின் முடிவு தெரியும்வரை “எந்த திருமணங்களையும்” பதிவு செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பதாக்ச் சொல்லுகிறார்கள். ஓரினர்களுக்குத் துரோகம் இழைக்காமலும், சட்டச் சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமலும் இருக்க இது உதவும் என்று சொல்கிறார்கள்.

சமத்துவம் ஒருபடி மேலே போயிருக்கிறது. வாழ்க!