சதாம் போனார், அமெரிக்கர்க

iraq_torture.pngகடந்த சில நாட்களாக மத்தியக் கிழக்கிலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையைத் தருவதாக இருக்கின்றன. முடிவில்லா நீதிக்கான யுத்தம் (Operation Infinite Justice) என்று பெயரிடப்பட்டு துவக்கப்பட்ட அமெரிக்காவின் இந்தப் போர் முடிவும் நீதியும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. நேற்று அமெரிக்கப் பொதுக்குடிமகன் ஒருவர் பகிரங்கமாக சிரச்சேதம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்லுவதை சலனப்படமாக எடுத்து இணையத்தின் வழியே பரப்பியிருக்கிறார்கள். கொல்லுவதற்கு முன்னால் அவருடைய பெயரையும், தாய் தந்தையர் பெயரையும் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் ஒற்றை வாளின் வீச்சில் நிக் பெர்க்கின் உயிர் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் புதிதில்லை. போரின் துவக்கத்தில் பாக்கிஸ்தான் எல்லைக்குள் டேனியல் பெரால் என்பவரும் இதே விதமாகக் கொல்லப்பட்டார். சாவதற்கு முன்னால் "நான் ஒரு யூதன், என் தாய் தந்தையர் யூதர்கள்" என்று வாக்குமூலம் கொடுக்கப் பணிக்கப்பட்டார் பெரால். இதே போன்ற சாவுகள் இந்தப் போரையும் தாண்டி, அதுவும் சமீப காலத்திலேயே நடந்திருக்கிறது. உதாரணமாக, செச்ன்யாவின் ருஷ்யப் போர் வீரர்கள் இதே முறையில் பகிரங்கமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட நிக் பெர்க்கின் சாவில் ஒரு கொடுரம் தேங்கி நிற்கிறது. இன்றைய சூழலில் நிக்கின் சாவு அளவுகடந்த அச்சம் தருவதாக இருக்கிறது.

ஏன்? கடந்த இரண்டு வாரங்களில் இதற்குச் சற்றும் குறையாத அட்டூழியங்கள் அமெரிக்கத் தரப்பிலிருந்து நடந்ததற்கு, நடந்து வருவதற்குச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. சதாம் உசேனின் உலகப் புகழ்பெற்ற அபு கராய்ப் சிறையில் பல இராக்கியப் போர்க்கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கைதிகள் நிர்வாணமாக்கப்பட்டு கயிற்றால் பிணைக்கப்பட்டு அமெரிக்கப் பெண்ணொருத்தியால் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். முகம் மூடப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு நிற்கும் கைதியின் முன்னால் வெற்றிக் களிப்புடன் கட்டைவிரல் உயர்த்தி நிற்கிறாள் அமெரிக்கப் பெண். இன்னும் இராக்கிய ஆண் கைதிகள் அமெரிக்கப் பெண் வீரர்களாலும், புணரமைப்புப் பணிக்கு வந்திருக்கும் ஊழியர்களாலும் பாலியல் ரீதியான சித்திரவதைக்கு ஆளக்கப்பட்டிருகிறார்கள். இந்தச் சித்திரவதைகளை டிஜிட்டல் காமெராவினால் படமெடுத்து தங்களுக்குள்ளே பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

விபரம் தெரிந்தவுடன் அமெரிக்க அதிபர் புஷ் உடனடியாக இதற்கு வருத்தம் தெரிவித்துவிடவில்லை. நெருக்கடிகளுக்கும் கேள்விகளுக்கும் ஆளனபிறகே அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். இப்படி நடந்தது தனக்குத் தெரியாது என்று சொல்கிறார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சித்திரவதைப் படங்களைப் பார்த்தே இந்தக் கொடுமைகளைத் தெரிந்துகொண்டதாக புஷ் சொல்லியிருக்கிறார். புஷ்க்கு மிகவும் நெருக்கமான டொனால்ட் ரம்ஸ்·à®ªà¯†à®²à¯à®Ÿà¯ அதிபரிடம் இதுபோன்ற போர்க்கொடுமைகள் நடப்பதாகச் சொல்லவில்லை என்கிறார்கள்.

எந்த வகையில் பார்த்தாலும் இது நிர்வாக ரீதியாகக் கவலையளிக்கிறது. ரம்ஸ்·à®ªà¯†à®²à¯à®Ÿà¯ சொல்லி அதை புஷ் கண்டுகொள்ளவில்லை என்றால் இராக்கில் ஜனநாயகத்தை நிறுவப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவின் கயவாளித்தனம் அப்பட்டமாக உறைக்கிறது. உண்மையிலேயே ரம்ஸ்·à®ªà¯†à®²à¯à®Ÿ அதை புஷ்ஷிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார் என்றால் மேலிடத்திற்குத் தெரியாமல் இந்தப் போர் வேறுவிதங்களில் திசை திரும்பியிருக்கிறது. இது நீண்ட, இலக்கற்ற போரினால் கடுப்பும் சலிப்பும் உண்டாகிப் போன அமெரிக்கர்களின் இயலாமையால் தோன்றும் விபரீதப் போக்கைக் காட்டுகிறது. கிட்டத்தட்ட வியட்நாம் போரைப் போலவே. இப்படியான நிலையில் போரைத் தொடர்வது மிகவும் ஆபத்தானது. இலக்கின்றி, வெற்றி என்பது எது என்றறியாமல் போரிடும் வீரர்கள், நாட்பட நாட்பட மூர்க்கத்தனமாக மாறிப்போவார்கள். அந்த நிலையில் போர் தர்மம் என்பதெல்லாம் காற்றில் பறந்துபோக சிரங்கு பிடித்த குரங்கு சொறிந்து கொள்வதைப் போல வீரர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்துவார்கள். அமெரிக்காவின் கரங்களில் சிரங்கு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

செப்டம்பர் பதினொன்றுக்குப் பிறகு முதல் கட்ட இலக்காக அல் கெய்டாவை ஒழிப்பது வரையறுக்கப்பட்டது. முக்கிய எதிரிகளாக ஓஸாமா பின்லேடனும், முல்லா முஹம்மது ஓமாரும் சுட்டப்பட்டனர். கிட்டத்தட்ட இதெல்லாம் மறக்கடிக்கடிக்கும் விதமாக 'முடிவற்ற நீதி'யின் கருணைக் கண்கள் இராக்கின் பக்கம் திரும்பத் தொடங்கின. சதாம் உசேன் உலகின் மாபெரும் கொடுங்கோலராக அறிவிக்கப்பட்டார். அவரை ஒழித்து இராக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தங்கள் இந்த நீதிக்கான போரின் முக்கிய உத்தி என்று சொல்லப்பட்டது. தொலைக்காட்சியில் சதாமின் பெயரை உச்சரிக்கும் பொழுதும், அவருடைய சித்திரவதைக் கூடமான அபு கராய்ப் சிறையைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் புஷ்ஷின் கண்களில் நீர் பெருகியோடியது. மிகவும் உணர்ச்சிபூர்வமாக ஏன் சதாம் கொடுங்கோலர் என்பதை புஷ் வரையறுத்தார். இன்றைக்கு சதாம் ஒரு பெருச்சாளியைப் போல பொந்திலிருந்து பிடிக்கப்பட்டு அமெரிக்காவில் இருக்கிறார். ஆனாலும் அபு கராய்ப் சிறையில் சித்திரவதைகள் தொடந்துகொண்டே இருக்கின்றன. இராக் யுத்தம் தொடங்கும் பொழுது சீட்டுக்கட்டுகளில் முக்கிய, மிக முக்கிய, அதி முக்கிய என்று வரையறுக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் படங்கள் போடப்பட்ட சீட்டுகளை அமெரிக்கா உலவவிட்டது. இப்பொழுது அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. மானாவாரியாக யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

போர் ஆரம்பிக்கும் பொழுது சொல்லப்பட்ட ஓஸாமா பின்லேடன், முல்லா முஹம்மது ஓமார் பெயர்கள் இப்பொழுது ஒரு நாளில் எத்தனைமுறை தொலைக்காட்சியில் உச்சரிக்கப்படுகிறன? ஏன், பிடிபடும்வரை உலகத்தின் இன்றைய அனைத்துக் கொடுமைகளுக்கும் கர்த்தாவாகச் சுட்டப்பட்ட சதாம் உசேன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்னைப் பொருத்தவரை இந்தப் போர்களினால் இன்றைக்கு உண்மையான ஆதாயம் பெற்றது பாக்கிஸ்தான்தான். ஒருபுறம் அல் கெய்டா தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக இடமளித்துக் கொண்டு (ஒசாமாவே பாக்கிஸ்தானில் இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்), டேனியல் பெரால் போன்ற கொலைகளின் அரங்கமாக இருந்துகொண்டு, மறுபுறத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காப் போரில் அமெரிக்காவின் மிக முக்கியமான நண்பன் என்ற பட்டயத்தையும் பெற்றுக் கொண்டு, சும்மா சொல்லக்கூடாது, முஷார·à®ªà¯ கோலோச்சிக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்த சித்திரவதை விபத்திலிருந்து வெளியே வர அமெரிக்கா நிறையவே பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். நேர்மையாக இதில் சம்மந்தப்பட்டவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரித்து அதிகபட்ச தண்டனையை உடனடியாக உறுதி செய்வது மிகவும் முக்கியம். இப்படிச் செய்வதன் மூலம் மாத்திரமே சதாமுக்கும் அமெரிக்காவுக்குமான வித்தியாசத்தை உணரச் செய்யமுடியும். ஆனால் இது நடக்கும் விதமாகத் தோன்றவில்லை. முதலில் இதைப் பற்றித் தெரிந்தவுடனேயே புஷ் மனப்பூர்வமாக வருத்தத்தை உடனடியாகச் சொல்ல முற்படவில்லை. நிர்ப்பந்தங்களுக்குப் பிறகே வருத்தம் சொல்லப்பட்டிக்கிறது. இந்த சித்திரவதைகள் நடப்பது மேலிடத்திற்குத் தெரியும் என்றுதான் பலரும் நம்புகிறார்கள். சொல்லப்போனால் சித்திரவதை செய்து கைதிகளை "நெகிழவைத்து" விசாரணையில் தகவல்பெற உதவுமாறு சிறைக்காப்பாளர்களுக்கு உத்தரவு இருந்ததாகச் சொல்கிறார்கள். இதிலும் உண்மையிருக்க அதிக சாத்தியங்கள் உண்டு. அல் கெய்டா கைதிகளைப் பிடித்து எந்தவித சர்வதேச விதிகளுக்கும் உடன்படாமல், எந்தவித மேல் முறையீட்டுக்கும் இடம் தரமால், பத்திரிக்கையாளர்களை உள்ளேவிடாமல் வைத்திருக்கும் குவாண்டனமோ பே சிறை இதற்கு நல்ல உதாரணம்.

சிறைக்கைதிகளை 'நெகிழ்த்த' குவாண்டனமோ பேயில்கூட மேலிட உத்தரவு இருக்கிறது என்று சொல்கிறார்கள். தொடர்ச்சியாக தூக்கவிடாமல் தடுத்தல், நிர்வாணப்படுத்தல், மிகக் குறுகிய இடத்தில் ஒரேவிதமான நிலையில் இருக்கச் செய்தல் என்று மனப்பிறழ்வுகளை உண்டாக்கும் சித்திரவதைகள் குவாண்டனமோ பேயில் நடப்பதாகத்தான் சொல்கிறார்கள். இராக்கில் நடந்த சித்திரவதைகள் இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் அவமதிப்பதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருப்பதாக இருக்கின்றன. பல கைதிகளை வற்புறுத்தி சுயமைதுனம் செய்யவைத்திருக்கிறார்கள். பல முறை பெண்ணொருத்தியால் பாலியல் பலவந்தத்திற்கு ஆண்கள் ஆளாகியிருக்கிறார்கள். பாலியலில் பெண்களின் மேலாதிக்கம் என்பது அராபியச் ஆணாதிக்க உணர்வுகளை அடிப்படையில் தகர்ப்பது. ஒரு பெண்ணால் தான் அடக்கியாளப்பட்டோம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவது அராபியனைக் கையாலாகாதவன் நீ என்று தெளிவாக, அறைந்து உணர்த்துவதற்கு மிகவும் வலிமையுள்ள வழி. இன்னும் சில சிறைக்கைதிகள் ஆடைகள் நீக்கப்பட்டு ஒருவர்மேல் ஒருவாரக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். சில இடங்களில் ஒரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாத்தில் ஓரினச் சேர்க்கை மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்படுகிறது. ஓரினர்களுக்கு கடவுளின் மன்னிப்பு கிடையாது என்பது சமகால இஸ்லாமியர்களின் அடிப்படை நம்பிக்கை.

கொலை செய்யப்படுவதற்கு முன்னால் நான் யூதன் என்று சொல்லக் கேட்பது யூதர்களை எந்தவிதத்தில் பாதிக்குமோ அதற்குச் சற்றும் குறைவில்லாதவிதத்தில் இந்தக் கொடுமைகள் இஸ்லாமியர்களைப் பாதிக்கும். நிக் பெர்க்கின் சாவு இதைத்தான் எதிரொலிக்கிறது. ஜார்ஜ் புஷ் "நிக் பெர்க்கின் சாவைக் கண்டு அஞ்சமாட்டோம், தொடந்து எங்கள் பணியைச் செய்து கொண்டிருப்போம்" என்று சொல்கிறார். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் பிபிஸியின் செய்தி அமெரிக்கச் சித்திரவதைகளைப் பற்றிய படங்களும் மேலதிகத் தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பழிவாங்கலும், மேலதிகப் பழிவாங்கலுமாக இது தொடர்ந்து கொண்டே போகிறது. செப்டம்பர் 11 தொடங்கி இந்தச் சுழல் முடிவில்லாததைப் போல ஆழமாகிக்கொண்டே போகிறது.

உண்மையில் பழிவாங்க எந்தவிதமான வீரமும் தேவையில்லை. பல நேரங்களில் பலத்தில் குறைந்தவர்கள் பலசாலிகளை அழித்தொழித்திருப்பதை வரலாறு நமக்குச் சுட்டுகிறது. ஆனால் பழிவாங்கும் சுழலிலிருந்து விடுபட்டு வெளியே வந்து கருணைகாட்ட, போரை நிறுத்தத்தான் அசாத்திய வீரம் தேவைப்படுகிறது. எண்ணெய்க் கறைபிடித்த அமெரிக்கர்களிடம் இதை எதிர்ப்பார்ப்பது சற்று அதிகமாகக் கூடத்தோன்றலாம்.

என்ன செய்வது, விழைந்து நிற்கத்தான் முடிகிறது.

0 Replies to “சதாம் போனார், அமெரிக்கர்க”

 1. இராக்கில் அமெரிக்காவின் நிலை என்ன? என்ன செய்ய விழைகிறார்கள் அவர்கள்? முழுப்பொறுக்கித்தனமான அமெரிக்காவின் இச்செயலை இன்னும் அமைதியாக விமர்சனம் மட்டும் செய்துகொண்டிருப்பது உலக மக்களின் அசிரத்தை அல்லது கையாலாகாத்தனத்தைத் தான் காட்டுகிறது.

 2. கடந்த இரண்டு வாரங்களில் இதற்குச் சற்றும் குறையாத அட்டூழியங்கள் அமெரிக்கத் தரப்பிலிருந்து நடந்ததற்கு, நடந்து வருவதற்குச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன.

  Is that so? I didn't know that S&M stuff was the same as beheading a guy for three minutes, slowly slicing and cutting through his neck with his eyes open and hands tied.

  ஆனாலும் அபு கராய்ப் சிறையில் சித்திரவதைகள் தொடந்துகொண்டே இருக்கின்றன.

  Appadiyaa? I've not seen any articles that said that the atrocities continue in Abu Gharib.

  நேர்மையாக இதில் சம்மந்தப்பட்டவர்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரித்து அதிகபட்ச தண்டனையை உடனடியாக உறுதி செய்வது மிகவும் முக்கியம். இப்படிச் செய்வதன் மூலம் மாத்திரமே சதாமுக்கும் அமெரிக்காவுக்குமான வித்தியாசத்தை உணரச் செய்யமுடியும்.

  Which is what will happen. And will invalidate the title of your article that equates Saddam and US. It will be good to see how many such trials were conducted and wrongs corrected in Saddam's govt.

  Shankar, if american act is porukkith thanam, what about the beheading? Can't say a word on it? 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *