இன்று மாலைச் செய்தியில் கனேடியன் டெலிவிஷன் (CTV) தமிழ்ச் சமூகத்தைப் பேட்டி கண்டது. கதவுகளைத் தட்டி அவர்கள் நிதி திரட்டுவதைப் பற்றிய இந்த செய்தியின் இறுதியில் கிடைக்கும் உதவி தவறான கைகளின் சென்று விரயமாகக் கூடும் என்ற அவர்களது கவலையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்பட்டது. சிடிவி கனடாவின் இரண்டாவது பெரிய தொலைக்காட்சியாகும்.

நிகழ்ச்சியில் தமிழ் தன்னார்வ அமைப்புகளின் முகவரியும் பணம் செலுத்த வசதியாக உள்ளூர் வங்கிக் கணக்கும் சொல்லப்பட்டது. அரசு ரீதியாக இலங்கை ஹைகமிஷனர் திருமதி கீதா டிசில்வா, தமிழ் தன்னார்வலர்கள் ஆகியோரைப் பேட்டி கண்டார்கள். புணரமைப்புச் சேவைகளில் முக்கிய அபாயங்களில் ஒன்றாக பெயர்ந்திருக்கும் கண்ணிவெடிகளைப் பற்றிச் சொன்னார்கள். இந்த நிகழ்ச்சியை இங்கே பார்க்க முடியும்.

கனடா ஏற்கனவே ஒரு விமானத்தில் உதவிப் பொருட்களை அனுப்பியிருக்கிறது. முதலில் ஒரு மில்லியன் அரசு உதவித் தொகை அறிவித்தது. அனுப்பப்படும் முன் அதை நான்கு மில்லியனாக உயர்த்தியிருக்கிறார்கள்.