இதன் முதலாம் பாகம்

கனடாவின் தற்பொழுது நான்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன (பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 12 இடங்களாவது பெற்றிருக்க வேண்டும்). இவற்றைத் தவிர அங்கீகாரமற்ற அரசியல் கட்சிகளும் உண்டு (உதாரணமாக, பசுமைக் கட்சி (Green Party). எந்தக் கட்சிச் சார்புமின்றி சுயேச்சையாகவும் போட்டியிடலாம்.

liberal.png

1. லிபரல் கட்சி (Liberal Party)

முன்னிருத்தப்படும் பிரதமர் : பால் மார்ட்டின் (Paul Martin)

paul_martin.png கனடாவின் தற்பொழுதைய ஆளூம் கட்சி; கலைக்கப்படும் பாராளூமன்றத்தில் அமோக பலம் பெற்றது. இவர்களுடைய கொள்கைகளை வலம் சாயும் மையக் கொள்கை (Right-Centerist) என்று வரையறுத்துக் கொண்டாலும், அமெரிக்காவின் அமைப்பை வைத்துப் பார்த்தால் இவர்கள் தீவிர இடதுசாரிகள். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக ஆண்டுவரும் கட்சி. ஆறு மாதம் முன்னர்வரை ழான் க்ரெட்ச்யென் (Jean Chrétien) பிரதமராக இருந்தார். அவருக்கு அசைக்கமுடியாத பலம் இருந்தது. (இவரைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு என்னுடைய பழைய வலைக்குறிப்பைப் பார்க்கவும்). பின்னர் அவரைப் பிடித்துத் தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு பால் மார்ட்டின் வந்தார். நல்ல திறமைசாலி என்றும் நல்ல வர்த்தக சாதுர்யமுள்ளவர் (அவருடைய பன்னாட்டு கப்பல் வியாபாரம் அமோகமாக இருக்கிறது) என்றும் பெயர் பெற்றவர். பத்து வருட ஆட்சியில் லிபரல்களூக்குக் கர்வம் பிடித்துவிட்டது என்று பலரும் நம்புகிறார்கள் (ஓரளவு உண்மைதான்).
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு க்யூபெக் தனிநாடு கேட்டு எழுச்சியடைந்தபொழுது க்யூபெக்கின் முதல் குடிமகன் என்று தன்னைப் பறைசாற்றிக் கொள்ளும் ழான் க்ரெட்ச்யெனுக்கு சிக்கல் தீவிரமடைந்தது. ஆனால் பலரும் வியக்கும் விதமாக இதை அவர் திறமையாகக் கையாண்டு, நேரடி வாக்கெடுப்பின்மூலம் இந்தப் பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இவருடைய ஆட்சியில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் நிதிமந்திரியாக இருந்தவர் பால் மார்ட்டின். இவரது திறமையால் கனேடிய பொருளாதாரம் உலகெங்கும் புள்ளிவணி குமிழியுடையச் சரிந்துகொண்டிருந்த வேளையிலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மருத்துவ வசதிகளை அதிகரிப்பார்கள் (கனடாவில் அரசாங்கம் அளிக்கும் மருத்துவ வசதி அமெரிக்காவைக் காட்டிலும் உயர்ந்தது, அமெரிக்காவில் நாலில் ஒருவருக்கு மருத்துவக் காப்புறுதி கிடையாது, கனடாவில் அரசாங்கமே மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது), அமெரிக்காவின் அராஜகங்களுக்குத் துணை போகமாட்டார்கள், நாடுதழுவிய குழந்தைகள் பராமரிப்பு ஒன்றுதான் இவர்களது புதிய கொள்கையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இவர்களின் சமூக நலத்திட்டங்கள் ஏற்கனவே மிக நல்லவை.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தபொழுதும், மக்கள் லிபரல் ஆட்சியில் சேர்வடைந்துவிட்டதாகத் தெரிகிறது. க்யூபெக் தனிநாடு பிரச்சனையை சமாளிக்கும்பொழுது க்ரெட்ச்யன் அம்மாநில லிபரல்களுக்கு நிறைய பணத்தை அள்ளி வீசிவிட்டதாகத் தெரியவந்திருக்கிறது. இதில் மக்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் நல்லவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருந்தாலும் கடந்த இரண்டுவருடங்களில் ழான் க்ரெட்ச்யென் – பால் மார்ட்டின் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்த சேற்றினால் லிபரல் மிகவும் களங்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டபொழுது கிட்டத்தட்ட ஐம்பது சதவீதமாக இருந்த இவர்களது ஆதரவு, தற்பொழுது முப்பத்தைந்துக்கும் கீழே இறங்கிவிட்டிருக்கிறது.
அதிகம் புலம்பெயர்ந்தவர்களைக் கொண்ட கனடாவில் லிபரல் கருத்துகளுக்கு மதிப்பு அதிகம். இவர்கள் குடிவரவை ஆதரிப்பவர்கள். கனடாவின் பன்முகத்தன்மைக்கு இவர்கள் முக்கிய காரணம். ஆனால் வாரியிறைக்கப்பட்ட சேறும் பணமும், இவர்களைக் குழியில் தள்ளியிருக்கிறது.

conservative.png

2. கன்ஸர்வேட்டிவ் கட்சி (Conservative Party)

முன்னிருத்தப்படும் பிரதமர்: ஸ்டீபன் ஹார்ப்பர் (Stephen Harper)

stephen_harper.png வலதுசாரிகள். ஆனால் பன்முகத்தன்மையும், சமூக நலத்திட்டங்களும் நிறைந்த கனடாவின் வலதுசாரிகள் அமெரிக்க இடதுசாரிகளைவிட கொஞ்சம் அதிகமாகவே வலம்விட்டு விலகியவர்கள். சென்றவருடம் முன்னேற்ற கன்ஸர்வேடிவ் கட்சி (Progressive Conservative Party), அலையன்ஸ் கட்சி என்று அழைக்கப்பட்ட கனேடிய மாற்றமைப்பு கன்ஸர்வேடிவ் கூட்டணி (Canadian Reform-conservative Alliance Party) இரண்டுமாக இணைந்து கனேடிய கன்ஸர்வேடிவ் கட்சியை உருவாக்கினார்கள். அலையன்ஸ்காரர்கள் பெரும்பாலும் மேற்கு மாநிலங்களில் (பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, ஸஸ்கட்ச்வான் போன்ற மாநிலங்களில் செல்வாக்கு பெற்றவர்கள். கனேடிய மத்திய அரசில் ஒன்டாரியோ, க்யூபெக் மாநிலத்தவரே அதிகம் இருக்கிறார்கள், கிழக்கு வாழ்கிறது, மேற்கு தேய்கிறது என்று சொல்லி முன்னுக்கு வந்தவர்கள். கனேடிய பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அறைகூவுபவர்கள் (அதாவது வெள்ளையர் பாரம்பரியம்). புலம் பெயர்ந்தவர்கள், புதுக்கனேடியர்களிடையே இனவெறியர்கள் என்று அறியப்படுபவர்கள். இரண்டு கட்சியும் ஒன்றிணைந்த நேரம் நல்ல நேரம், லிபரலில் அலுத்துபோன மக்களின் கவனம் இதன்மீது இப்பொழுது விழத்தொடங்கியிருக்கிறது. ஸ்டீபன் ஹார்ப்பரைப் பற்றி மக்களுக்கு அதிகம் தெரியாது (மறுபக்கத்தில் பால் மார்ட்டினின் தந்தை கனேடிய நிதியமைச்சராக இருந்தவர்). இருந்த பொழுதும் இப்பொழுது ஸ்டீபன் ஹார்ப்பரின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.

இவர்கள் அமெரிக்காவை அனுசரித்துப் போவார்கள் (அதாவது கனடா ஐம்பத்தொன்றாவது மாநிலமாக இருக்கும்). புஷ் (தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்தால்) இன்னொரு டோனி ப்ளேரைப் பெறுவார். க்ரெட்சயனுக்கும் பில் கிளிண்டனுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தது. இருந்தபோதும் புஷ் அமெரிக்க ஏகாதிபத்யத்தை கனடாவின் மேல் திணிக்க முயலவில்லை. திறமையான க்ரெட்ச்யெனும் அமெரிக்காவை நல்ல நண்பனாகப்பாவித்தார். ஆனால் புஷ் வந்தபிறகு கனேடிய-அமெரிக்க உறவில் சரிவு ஏற்பட்டது. (கனடாவின் இளநிலை மந்திரியான் ஒரு பெண்மணி புஷ் ஒரு மடையன் என்று பொதுப்படையாகச் சொன்னார். அமெரிக்கர்கள் பொங்கியெழுதபொழுது க்ரெட்ச்யென் “புஷ் மடையரில்லை, புஷ்ஷை மடையன் என்று சொல்லியிருக்கக் கூடாது, புஷ் ஒருக்காலும் மடையன் இல்லை” என்று பலமுறை மடையன் என்ற வார்த்தையைத் திருப்பிச் சொல்லி அதை மறைமுகமாக அமெரிக்கர்களின்மீது திருப்பியடித்தார்). இதுபோன்ற சிக்கல்களெல்லாம் வரவே வராது. கன்ஸர்வேடிவ் கட்சி கனடாவை அமெரிக்காவிடம் அடமானம் வைக்கும். பெரிய தொழில்களை இவர்கள் ஆதரிப்பார்கள் (சமூக நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்படும்), ராணுவ பலத்தைப் பெருக்குவார்கள். வருமான வரி குறைப்பு பற்றி பறைசாற்றும் ஸ்டீபன் ஹார்ப்பட் ஓருபாலர் திருமணம், கருச்சிதைவு போன்ற விஷயங்களைப் பற்றி தெளிவாகப் பேசமாட்டேன் என்கிறார்.

ndp.png

3. புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party)

முன்னிருத்தப்படும் பிரதமர்: ஜாக் லேய்ட்டன் (Jack Layton)

jack_layton.png வடஅமெரிக்காவிலேயே தீவிர இடதுசார்பு கொண்ட கட்சி. அமெரிக்காவில் இப்படியரு கட்சியை கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாது. இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஆனால், தொங்கு பாராளுமன்றம் வந்தால் இவர்களுடைய உதவி லிபரல்களுக்குத் தேவைப்படும் (கன்ஸர்வேடிவ் இவர்களை கட்டி இழுத்துக்கொண்டு போகமுடியாது). அந்த நிலையில், மிக அதிகமான அரசாங்க ஆதரவு பெற்ற மருத்துவ உதவிகள், மாநாகராட்சிகளுக்கு அதிக உதவி, பொதுப் போக்குவரத்தை அதிகரித்தல், இனவெறி குறைப்பு, ஒருபாலர் திருமணம் நாடுதழுவி சட்டமாக்கப்படுதல் (ஏற்கனவே ஒன்டாரியோ, க்யூபெக், பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்களில் இது சட்டமாக்கப்பட்டுவிட்டது), ராணுவச் சார்பைக் குறைத்தல் போன்ற இடதுசாரி கொள்கைகள் இவர்கள் ஆதரவுடன் வரும் கட்சியின் மேல் திணிக்கப்படும். பொதுவில் புதிய கனேடியர்கள், தாரள சித்தாந்தம் கொண்டவர்கள், சிறுதொழில்புரிவோர் போன்றவர்களிடம் இவர்களுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. மாநிலத் தேர்தல்களில் இவர்கள் ஓரளவு தொடர்ந்து வெற்றி கண்டுவந்தாலும், மத்தியில் இவர்கள் லிபரல், கன்ஸர்வேடிவ் இடத்தை அசைக்க முடியவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் இவர்கள் நேரடியாக மத்தியில் ஆட்சி அமைக்காத பொழுதும் இவர்களின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் என்று நம்பலாம்.

ஜாக் லேய்ட்டன் டொராண்டோ மாநகர சபையில் உறுப்பினராக இருந்தவர். நடந்துவரும் நேரடி வாதங்களில் இவர் பால் மார்ட்டின், ஸ்டீபன் ஹார்ப்பர் இரண்டுபேருக்கும் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி வருகிறார் (“Paul Marin is bad; Stephen Harper is Worse”). இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் இவரது வாதங்கள் மற்றவர்களை நிலைகுலையச் செய்வதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. ஆனால் சமயத்தில் அளவுக்கு அதிகமாகப் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது.

bloc_qubecoise.png

4. ப்ளாக் க்யூபெக்வா (Bloc Québécois)

தலைவர் : கில் துஸெப்பே (Gilles Duceppe)

gilles_duseppe.png பெயரிலேயே இருப்பதைப் போல இவர்களுக்கு எல்லாம் க்யூபெக்தான். இவர்களது கொள்கை க்யூபெக் உயரவேண்டும். அதாவது மற்றவை தாழ்ந்தாலும் பரவாயில்லை. இந்தக் கட்சி க்யூபெக் மாநிலத்தைத் தவிர வேறெங்கும் ஆட்களை நிறுத்தவில்லை (நிறுத்த முடியாது, க்யூபெக்கிற்கு அதிக பணம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு ஒன்டாரியோவிலா ஓட்டு கேட்கமுடியும்). க்யூபெக், க்யூபெக்தான் எல்லாம் என்பதுப்போக மீதமிருக்கும் நேரத்தில் இவர்கள் கொள்கையாகச் சொல்பவை லிபரல்-புதிய ஜனநாயகம் இரண்டுக்கும் இடையிலானவை.
யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் ஆதரவு கிடையாது என்கிறார் துஸெப்பே. ஆனால் மாபெரும் க்யூபெக் மாநிலத்தில் இவர்கள் நிறைய இடம் பிடிப்பார்கள். மத்தியில் கன்ஸர்வேடிவ் கட்சியும் க்யூபெக்கில் ப்ளாக் க்யூபெக்வாவும் வெற்றி பெற்றால் கனடா ஒழிந்தது.
* * *
ஆகமொத்தம் கனடாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மருத்துவ வசதி, மென்மையான மத்திய அரசு என்பவைதான் (மிகவும் கடுமையான வலதுசாரிகளான கன்ஸர்வேடிவ் அமெரிக்காவின் டெமாக்ரடிக் கட்சியைவிட இடது பக்கம் சாய்பவர்கள்). மொத்தத்தில் தேர்தல் முடிவைப் பாதிக்கப் போவது லிபரல் கட்சி செய்த ஒரு முட்டாள்தனம்தான். அதைப்பற்றி…