கிடைக்கப்
பெற்றேன்

அத்தனை வெளுப்பில் காகிதம்
எங்கே வாங்குகிறாய்?

அச்சு நேர்த்திதான்;
வெட்டியட்டிய வண்ணப்படமும்
அழகாகத்தான் இருக்கிறது

எழுத்துப் பிழை எதுவுமில்லை

கணினியில் புதிதாக
இலக்கணத் திருத்தி
இணைத்திருக்கிறாயா?

கசியும் அந்தப் பேனாவை
இன்னும் வைத்திருக்கிறாயா?