இப்பொழுதைய பாஷன்படி நானும் என் பங்கிற்கு ஒன்பது கட்டளைகள் எழுதலாம் என்று நினைத்தேன். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கு அதற்குத் திறமையில்லை என்று தோன்றியது. (ஸ்டெப் கட்டிங் காலத்தில் மயிர் வளராமல் கஷ்டப்பட்டது நினைவிற்கு வருகிறது. நமக்கு மழித்தல் சாத்தியமில்லை, நீட்டலும்தான்).

அவரசத்திற்குக் கைகொடுப்பது ஆசாரக்கோவை, இந்தக் கட்டளை விளையாட்டை கடைச்சங்கத்திலேயே விளையாடியிருக்கிறார் தலைவர் பெருவாயின் முள்ளியார். அங்கிருந்து வெட்டி ஒட்டிய 🙂 ஒன்பது கட்டளைகள்.

வெட்டி ஒட்டியதாலும், வெண்பா என்பதாலும் இதற்கு இன்னும் விசேஷம் கூடுவதாகத் தோன்றுகிறது.

Please note: All comments to this post will be consigned to /dev/null. * * *

1. எச்சிலுடன் தீண்டத் தகாதவை

எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்
உச்சந் தலையோடு இவைஎன்ப யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள்.

2. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை

தலையுரைத்த எண்ணெயால் எவ்வுறுப்பும் தீண்டார்
பிறர்உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்புக்
குறையெனினும் கொள்ளார் இரந்து.

3. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை

காலினீர் நீங்காமை உண்டிடுக பள்ளியுள்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

4. உண்ணக்கூடாத முறைகள்

கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகவுண்ணார் கட்டில்மேல் உண்ணார்
இறந்தொன்றும் தின்னற்க நின்று.

5. நீர் குடிக்கும் முறை

இருகையால் தண்ணீர் பருகார் ஒருகையால்
கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு இருகை
சொறியார் உடம்பு மடுத்து.

6. மலம் சிறுநீர் கழிக்கும் முறை

பகல்தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
பகல்பெய்யார் தீயுனுள் நீர்.

7. மலம், சிறுநீர் கழிக்கும் திசை

பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்
அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்
இந்திர தானம் பெறினும் இகழாரே
தந்திரத்து வாழ்துமென் பார்.

8. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்

தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.

9. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை

கிடந்தாரைக் கால்கழுவார் பூப்பெய்யார் சாந்தும்
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண்
நில்லார்தாம் கட்டின் மிசை.

(நன்றி: மதுரைத் திட்டம் )