இன்றைக்கு வாசித்த செய்தியன்றில் ஆந்திராவில் சிகையலங்காரத் தொழிலாளிகள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி பிரச்சாரம் செய்யப் பயன்படுகிறார்கள் என்று வந்திருக்கிறது. ஆரம்பச் சோதனை முயற்சிகள் நல்ல பலனைத் தருவதாகவும் இதை இன்னும் தீவிரப்படுத்த உத்தேசம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதேபோல் சாமியார்களையும் எய்ட்ஸ் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப் போவதாகத் தெரிகிறது.

* * *

அடுத்தமுறை சலூனுக்குப் போனால் உரையாடல் இப்படியிருக்கலாம்;

வா ஸார் குந்து! எப்டிக்கிற? வூட்லல புள்ளங்கள்லாம் எப்டிக்கிறாங்க? … கட்டிங்கா ஷேவிங்கா?

கட்டிங்தாபா.

நெமிந்து குந்து ஸார்!

பாத்தியா, ஜெயேந்திரு மாட்டிகிட்டாரு, அம்மா அமிக்கி புட்ச்சுப் போட்ச்சு!

அண்ணாத்தே, வாணாம், ஸலூன்ல பாலிடிக்ஸ் பேஸ வாணான்னு போட்ருக்கேன். லாஸ்ட் ஸன்டே பெர்ய ரவுசாயிப் போயிட்டிச்சு. ஏய் அந்த கறுப்பு ஸீப்ப எட்றா!

இன்னாபா, ஸாமியார் பத்திச் சொன்னா பால்டிக்ஸ்ன்றே!

அத்த வுடு. எப்பிடி வெட்றது, க்ளோஸா, ஸம்மர் வந்திடிச்சி. …இன்னாது, ஸீப்ப காணுமா? (காலண்டரைக் காட்டி) பேமானி, அந்த வெள்ளக்கார குட்டி அடில பார்றா, இல்லாட்டி லெஃப்ட் ட்ராயர்ல பீராஞ்சு பாரு. ஒரு வேளக்கி லாயக்கில்ல, மவனே.

ஃப்ரண்ட்ல ஸீவ்றாமாரி வய்யீ, நாளக்கி ஈவ்னிங்க் பொண்டாட்டி வளிலே ஒர் மேரேஜ் பார்ட்டி போவனும்.

ஸார்தான், ஆமா, இப்பல்லா நீனு தொரப்பாக்கம் போவுறதில்லயா?

அது இன்னாமா, பேஜாரா போய்டிச்சு. இவுளுக்கும் அவுள்க்கும் ஆவ்றதில்ல. பிஸ்னஸ்ல வர்ற பண்தப் புல்லா ரெண்டும் பிச்சிக்கிது. வூட்டுக்குப் போனா ஒய்ஃபுவேற ரவுஸ் பண்ணுது.

ஸர்தாண்ணே, …டே பன்னாட, இங்க என்னடா லுக்கு. போயி ரெண்டு சிங்கிள் வாங்கியா! பீடி வலிச்சிகினு நிக்காம ஃபைவ் மினிட்ல வந்து ஸேரு.

இப்புடி ஸெட்டப்பண்ணி ஒன்ன வச்சிக்கிட்டு தாலியறுபட்றதவுட அப்பப்ப வேவ்வேற குட்டின்னு வச்சிக்கத் தாவல.

இன்னா ஸெல்ற பா?

ஆள மாத்திகினே இருந்தா வூட்ல இருக்கெற களுதைக்கு தெர்யாதுல்ல.

அண்ணாத்தே.., கொஞ்சம் அப்பால தலிய சாச்சுக்க. ம். ஸரி. …உசாரா இரு அண்ணாத்தே. அங்கங்க எய்ட்ஸ் தாஸ்தியாகிட்டு வர்து.

அடப்போடா அதெல்லாம் வக தெரியாம கண்டதுலயும் கொண்டுபோயி வுட்றவனுக்குத்தா வரும்.

இல்லண்ணே, எதுக்கும் உஸாரா கீறது ஸ்ர்தானே, இன்னா ஸொல்றே நீ?

குஜால்ல இன்னா உஸாரு, ஜாலியா கீற ஸமயத்துல உஸாரு ஆவுறதில்ல.

இல்லாண்ணாத்தே, நா வாணான்னு ஸொல்ல, போறச்ச மற்க்காம உசாரா நிரோத்தாவது போட்க்க.

நிரோத்தாவது, மஸ்ராவது, அதெல்லாம் நம்க்கு ஸர்படாது. அது வேற லொட லொடன்னு தொங்கிகிட்டு கெடக்கும். வேல செஞ்சாமாறியே இர்க்காது.

அப்புடி ஸொல்லாத, இப்பல்லா டைட்டா போட்க்க நெறயா வந்துக்கிதுல்ல. அதுல ஒன்னு வாங்கி மாட்டிக்க, ஒன்ன நெம்பியும் அஞ்சு உசிரு கீது. நாளக்கி பின்னால ஒன்னாலங்காட்டியும் ஓ ஊட்டுக்கார பொம்பளக்கும் டிஸீஸ் பரவிடிச்சுன்னு வச்சுக்க பேமிலி ஸ்டீரீட்டுக்கு வந்துபுடும், இல்லியா. உனுக்கும் நல்லதுதான!

இன்னா ஸெல்றே நீனு? நம்ம கையிலே ஸென்டிமென்டலு பிலீம் காட்றே!

அத்தாம்பா, புச்சா நெறயா வந்துக்கீதுல்ல, வானும்னா, நா ரெண்டு தர்றேன். இந்தா.

தப்பார்றா! உனுக்கு இன்னாத்துக்கி இதெல்லா. இப்ப இங்கெ நீ இந்த பிஸ்னஸ்லாம் பண்றியா?

இல்ல அண்ணாத்தே, போன வாரம் டாக்டரு எல்லாம் வந்து என்னமாறி பார்பர்ஸ்க்கு ட்ரெயினிங் குடுத்தாங்க…

* * *

மறுபுறத்தில்…

சாமியார்கள் சிவலிங்கம், சிக்லெட், விபூதி, வைர மோதிரம் என்று அந்தந்த சிஷ்ய கோடிகளுக்கு ஏற்றபடி வரவழைத்துத் தருவதைப் போல விரைவில்…

ஸௌக்கியமா இரு, இந்தா…

ஸாமி மன்னிச்சுகுங்க. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல்ல

தெரியும். அது தெரிஞ்சுதான் நா இதைக் கொடுத்தேன். அடுத்தமுறை என்னை நினைத்துக் கொண்டு, இதைப் போட்டுக் கொண்டு கவலையில்லாமல் இரு.

பணக்கார பக்தருக்கு காமசூத்ரா, ஏழைகளுக்கு நிரோத்.