ஹைதராபாத்தின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் உற்பத்திக் கூடம் சோதனை முறையிலான எட்டு மீட்டர் நீளமுள்ள மீயொலி ராக்கெட்டை வெற்றிகரமாகச் சோதித்திருக்கிறது. இதன்மூலம் 2007 ஆம் ஆண்டு வாக்கில் ஆளற்ற, 500 கிலோவிலிருந்து 1000 கிலோ எடையுள்ள, மீயொலி விமானம் (hypersonic jet) ஒன்றை பறக்கவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள். இந்த மீயொலி விமானம் காற்றிலிருந்து ஆக்ஜிஸனை எடுத்துக் கொண்டு, திரவ ஹைட்ரஜன் எரிபொருளை எரித்து திறன் பெறுகிறது.

அதியொலி விமானங்கள் (supersonic jets) ஒலியின் வேகத்தைக் காட்டிலும் சற்றே அதிக வேகத்தில் செல்லக் கூடியவை. மீயொலி விமானங்கள் ஒலியின் வேகத்தைக் காட்டிலும் குறைந்தபட்சம் ஐந்து மடங்கு அதிக வேகத்தில் செல்பவை. இதன் தொழில்நுட்பம் பற்றி விரிவாக நாளை எழுதுகிறேன்.

இந்திய விஞ்ஞானிகளுக்கு என்னுடைய பாராட்டுக்களும், வணக்கங்களும்.