இன்றைக்கு w.bloggar என்ற கருவியைப் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தேன். இதற்குப் புதிதாக யுனிகோட் பயன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஒரளவிற்கு நல்ல html editor, எனவே, வலைக்குறிப்புகளை எழுதுவது மிகவும் எளிதாக இருக்கிறது.

இதற்கு முன்னால் என்னுடைய தளத்தில் கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழைந்து, சுவடியில் எழுதி, சுரதாவின் பொங்குதமிழ் மூலம் யுனிகோட் மாற்றப்பட்ட சமாச்சராங்களை வெட்டியெடுத்து ஒட்ட வேண்டியிருந்தது. இப்பொழுது w.bloggar மூலம் நேரடியாக எ-கலப்பை யுனிக்கோட் தமிழில் எழுத முடிகிறது. தளத்தின் முகவரி, கடவுச் சொல் இத்யாதி சமாச்சாரங்களை இதற்குள்ளே சேமித்து வைப்பதால் மிகவும் விரைவாக குறிப்புகளை உள்ளிடமுடிகிறது.


இது கூட எளிதாக இருக்கிறது. நீளமான இடுகைக்கு movabletypeக்காக “more_text” என்ற கட்டளை இருக்கிறது. இதற்கு இடையில் போடப்படுவதெல்லாம் தொடர் பக்கங்களில் வரும்.

ஒரே ஒரு மாற்றம்தான் தெரிகிறது. இதுவரை movabletypeல் நேரடியாக உள்ளிடும்போது view>encoding>Unicode(UTF-8) தேர்ந்தெடுக்கத் தேவையில்லாமல் இருந்தது. இதில் வலைத்தளத்திற்கு வருபவர்கள் யுனிக்கோடை தேர்ந்தெடுக்க வேண்டும் (கில்லாடி காசி பத்து நிமிடத்திற்குள் இதைக் கண்டுபிடித்து எழுதிவிட்டார்).

இனி ஒரே ஒரு விஷயம்தான் பாக்கி; என்னுடைய தளத்தை RSS Syndication செய்பவர்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். செல்வராஜ்/குமரகுரு/ மற்ற நண்பர்கள் இதற்கு உதவவேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் எழுதுங்கள். இல்லையென்றால் இனி எனக்கு வலைக்குறித்தல் மிகவும் எளிதாகிவிடும்.