ஜப்பானில் இருக்கும் பொழுது “பின்நவீனத்துவம் – ஜப்பானியக் கழிவறைகளின் மீதான ஒரு ஆய்வு” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். இது அமீரக இணைய நண்பர்கள் குழுவின் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது. அதன் பின்னர் கனடா வந்துவிட்டேன். இங்கு காலம் இதழுக்காக நண்பர் செல்வம் கேட்க அவருக்குக் கொடுத்திருந்த மூன்று கட்டுரைகளில் இதுவும் ஒன்று. (அவரிடம் கொடுக்கும்போதே இது அமீரகத்தில் வந்துவிட்டதா, வருமா என்று தெரியவில்லை என்று சொன்னேன்). ஆனால் மூன்றில் அவர் தெரிந்தெடுக்க கனடா வந்தபிறகு என்னுடைய முதல் படைப்பாக வெளிவந்தது. இதைப் பலரும் பாராட்டினார்கள்.

பல நாட்கள் கழித்து தன்னிகழ்வாக நண்பர் ஆசிப் மீரான் என்னுடைய புதிய முகவரியைக் கண்டுபிடித்து ஆண்டு மலரை அனுப்பினார். (எத்தனைபேர் இப்படி சிரத்தையாகச் செய்கிறார்கள்). ஆனால் இன்றுவரை ஒரே குறை, அமீரக மலரில் இந்தக் கட்டுரை குறையாகத்தான் வெளிவந்தது. காலத்தில் தொழில்நுட்பச் சாத்தியமின்மை காரணமாக நான் அளித்திருந்த படங்களைப் போடவில்லை.

எனவே இன்றைக்கு அந்தக் குறையைப் போக்கிக் கொள்ள அதை இங்கே இட்டிருக்கிறேன். (இதற்கு வந்த சுவாரசியாமான விமர்சனம் ஒன்றை பின்னர் சேர்க்கிறேன்).

கட்டுரை இங்கே