• Archive for December, 2003

    Farewell Jean Chr

    by  • December 12, 2003 • கனடா • 0 Comments

    இன்று காலை கனடாவின் இருபதாவது பிரதமர் ழான் க்ரெட்ச்யன் (Jean Chrétien) பிரதமர் பதவியிலிருந்து விலகினார் இத்துடன் அவரது நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையும் முடிந்து போகிறது. யார் இந்த ழான் க்ரெட்ச்யன்? கனடாவை விடுத்த பல நாடுகளில் அவரை யாருக்கும் தெரியாது. கனடா உலகின் ஏழு முக்கியமான நாடுகளுள் ஒன்று, அந்த ஏழு நாடுகளுள்ளும் நிலையான அரசியலமைப்பு, வளர்ந்துவரும் பொருளாதாரம், அகதிகள் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களால் முன்னால் இருக்கும் நாடு. அந்த நாட்டின் பிரதமரை [...]

    Read more →

    காமம் செப்பாது கண்டது மொழ

    by  • December 11, 2003 • இலக்கியம் • 1 Comment

    இங்கு டொராண்டோவின் இலக்கியத் தோட்டம் அமைப்பில் “காமம் செப்பாது கண்டது மொழிமோ” என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை ஒழுங்கமைத்திருந்தார்கள். கவிஞர் சேரன் நிகழ்வின் ஒருங்கமைப்பாளராக இருந்தார். அதில் இலங்கை எழுத்தாளர், விமர்சகர் திரு மு.பொ – “ஆத்மார்த்தமும் கவிதையும்” என்ற தலைப்பிலும், திரு வரன் “இன்மையில் பிரதிகள்” என்ற தலைப்பில் பின்நவீனத்துவத்தைப் பற்றியும் பேசினார்கள். மூன்றாவது ஆளாக அடியேன். கொடுத்த தலைப்பை வைத்துக் கொண்டு “மெய்காணலில் அறிவியல் வழிகள்” என்ற உபதலைப்பில் பேசினேன். அது பல நாட்கள் [...]

    Read more →

    Writer Sujatha and Open Source

    by  • December 11, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்று தமிழ் லினக்ஸ் குழுவில் வந்த நண்பர் முகுந்தராஜின் கடிதம். இந்த விஷயத்தில் நான் ஏற்கனவே திரு சுஜாதா அவர்களுக்கு எழுதினேன். அதன் விபரங்களை விரைவில் அறியத் தரலாமென்று இருக்கிறேன்.

    Read more →

    இந்தியாவின் குளிர்திரவ ர

    by  • December 8, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நேற்று இந்தியாவின் குளிர்திரவ ராக்கெட் சோதனை வெற்றி பற்றிய செய்தியத் தந்திருந்தேன். இந்தச் செய்தி தொழில்நுட்ப வட்டாரங்களில் பலவிதமாக அலசப்பட்டது. இவற்றின் சாரம் கிட்டத்தட்ட Wired News செய்தியையே ஒத்திருப்பதால் அதை முன்னிருத்தி என்னுடைய கருத்துக்கள்;

    Read more →

    இந்திய குளிர்திரவ ராக்கெ

    by  • December 7, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    டிசம்பர் 5 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ராக்கெட்டை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் மகேந்திரகிரியிலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் மொத்தம் 7.5 டன் எடையச் சுமந்து செல்லக்கூடியது. “இந்த ராக்கெட் சோதனை இந்தியா விண்வெளியில் காலடி எடுத்துவைக்க முதல்கட்டம்” என்று விண்வெளியில் பறந்த முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மா கூறியிருக்கிறார். சமீபத்தில் சீனா முதன் முறையாக சீனரை விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நிலையில், இந்த ஒற்றைச் சோதனையை வைத்துக்கொண்டு, இது இந்தியாவின் நிலாப் [...]

    Read more →

    ஜப்பானியர்களும் பெயரட்டĭ

    by  • December 5, 2003 • ஜப்பான் • 3 Comments

    என்னுடைய இரண்டாண்டு ஜப்பானிய வாழ்க்கை அவர்களது சமூகத்தைப் பற்றிய ஆச்சரியத்தைப் போக்கப் போதுமானதாக இல்லை. மிகவும் சிக்கலான சமுகம் அது; ஒரு புறம் நெருக்கமான, கிட்டதட்ட ஆண்டான்-அடிமையை ஒத்த சமூக அடுக்குகள், மறுபுறம் தொழில்நுட்பத்தில் வெறித்தனமான ஆர்வம், மென்மையான நளினமான தேநீர் விருந்தோம்பல், மறுபுறம் பெண்களைப் பொம்மைகளாகவும், போகப் பொருளாகவும் பாவிக்கும் பாங்கு. இப்படியாக ஜப்பானில் நிறைய முரண்பாடுகள். அவ்வப்பொழுது இதையெல்லாம் பற்றிய என் பார்வையை பதிவு செய்ய முயற்சிக்கிறேன். இதில் முதல் தவணையாக, ஜப்பானிய சமூகத்தில் [...]

    Read more →

    NTT DoCoMo Phones to use Linux

    by  • December 4, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஜப்பானின் நிப்பான் டெலிகிராப் & டெலிபோன் கார்பொரேஷன், என்.டி.டி தன்னுடைய அடுத்த தலைமுறை செல்பேசிகளில் லினக்ஸ் இயக்குதளத்தைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது பதிலினக்ஸ்க்கு (Embedded Linux) ஒரு முக்கியமான வெற்றி.

    Read more →

    முற்றின்பம் – ஆளில்லை

    by  • December 2, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் டாக்டர் ஸ்டூவர்ட் மெலோய் கண்டுபிடித்திருக்கும் உள்ளீடு (implant) புரட்சிகரமானதுதான். அதைக் கண்டுபித்தவுடன் அவர் உலகெங்கும் இருக்கும் பெண்களின் முக்கிய தேவையைத் தான் நிவர்த்தி செய்துவிட்டதாகவும் இதை அடைய பெண்கள் அளவற்ற ஆர்வம் காட்டப்போவதாகவும் கற்பனை செய்துகொண்டார். ஆனால் இது சோதனைக்குத் தயாராகியிருக்கும் இந்த நேரத்தில் இதை முயற்சித்துப் பார்க்க (பெரும்பாலும் முயற்சித்துப் பார்த்தல் இலவசம், சில சமயம் பணம் கூடக் கொடுப்பார்கள். இந்த மாதிரி சோதனைகளுக்குப் பலிகடா வேலையை மேலை நாடுகளில் [...]

    Read more →