• Archive for December, 2003

    திருத்தப்பட்டது

    by  • December 19, 2003 • பொது • 0 Comments

    பத்திகளுக்கிடையில் வெளியில்லாமல் போனதால் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது என்று நண்பர்கள் எழுதியிருந்தார்கள். எனவே, அதைத் திருத்தியிருக்கிறேன். கட்டுரையில் முழுவடிவமும் என்னுடைய வலைப்பக்கதிலும் போடப்பட்டிருக்கிறது . ரூமியின் கட்டுரையை முன் வைத்து நான் எழுதியதற்கு மரத்தடியில் நிறையபேர் கருத்துத் தெரிவித்திருப்பதாகச் சொன்னார்கள். ராயர் காபிகிளப் மடல்களையே ஒழுங்காகப் படிக்க, அங்கு எழுத நேரம்போதவில்லை என்ற காரணத்தால், மரத்தடியின் நான் உறுப்பினன் ஆகவில்லை. எனவே, யாராவது நண்பர்கள் மூலமாகக் கிடைத்தால்தான் உண்டு.

    Read more →

    அறிவியலில் மொழியின் தேவை

    by  • December 19, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நாகூர் ரூமியின் ‘தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும்’ முன்வைத்து. நாகூர் ரூமியின் கட்டுரை கருத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அனுமார் பற்றிய எள்ளலுடன் துவங்குகிறது. பல சமயங்களில் சொல்ல வருவதற்கு முற்றிலும் தேவையுடையதாக/தவிர்க்க முடியாததாக இருந்தாலும் படிப்பவரில் யாராவது ஒருவருடைய மனது புண்படுமா என்று இது போன்ற உணர்ச்சியெழுப்பும் வாசகங்களை எழுதையில் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திப்பது சான்றோர் மரபு. ஆனால் இப்படி எழுதினால் வாசகன் நிமிர்ந்து உட்காருவான் என்பதற்காக எழுதப்பட்டது போல இருக்கிறது. இதே கட்டுரையில் நபிகள் பெருமானைப்பற்றிய [...]

    Read more →

    Linux Kernel 2.6.0 released

    by  • December 18, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரு முக்கிய நிகழ்வுகள் 1. லினக்ஸ் புதிய கரு 2.6.0 வெளியிடப்பட்டிருக்கிறது. எல்லா பெரிய வெளியீடுகளையும் போலவே இதிலும் பல முக்கிய முன்னேற்றங்கள் உள்ளிடப்பட்டிருக்கின்றன. விபரங்கள் இங்கே. எல்லா பெரிய வெளியீடுகளையும் போலவே இதிலும் பல முக்கிய ஓட்டைகள் இருக்கும், விரைவில் ஒட்டுகளும் அடுத்த வெளியீடும் வரும். கொஞ்சம் நாள் பொறுத்திருக்க வேண்டும். குறைபாடுகளைப் பற்றி நன்றாகத் தெரிந்தபின் இதற்குத் தாவியே ஆகவேண்டும். முக்கிய காரணங்கள் இரண்டு; 1. கம்பியில்லா வலைத் [...]

    Read more →

    இந்தியாவின் கிரிக்கெட் வ

    by  • December 16, 2003 • பொது • 0 Comments

    இருபது வருடங்களுக்குப் பின் இந்தியா ஒரு டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியாவில் வென்றிருக்கிறது. பாராட்டுக்கள். ஒற்றை டெஸ்ட் பந்தய வெற்றி என்று இதைப் புறங்கையால் தள்ளிவிடலாம். (கட்டாயம் இதை வைத்துக்கொண்டு இந்தியாதான் வருங்கால கிரிக்கெட் மன்னர்கள் என்று கங்கூலி அறைகூவல் விடுத்திருப்பது சிரிப்பை வரவழைக்க வேண்டும்). ஆனால், கடைசியாக ஆஸ்திரேலியா தன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியைத் தோற்று ஏழு வருடங்கள் ஆகியிருக்கின்றன டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற வெற்றிகள் மிகவும் குறைவு. ஆஸி ஒன்றரை நாட்களில் 556 [...]

    Read more →

    இந்த வருட பொம்மை-டிஎன்ஏ வர&#

    by  • December 15, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இப்பொழுது நான் சிறு பையனாக மாறி என் பெற்றோர்களிடம் புதுவருடத்திற்கு எதாவது கேட்டு அடம்பிடிக்க முடியும் என்றால் நான் இதைத்தான் கேட்பேன் – Discovery DNA Explorer Kit . வருடம் தோறும் சந்தைக்குவரும் புதிய கருவிகளைப் பார்ப்பதில் (ஜெள்விடுவதில் என்று வாசிக்கவும்) எனக்கு அலாதி பிரியம். சில வருடங்களில் எந்தக் கருவிக்கு முதலிடம் தரலாம் என்று குழப்பம் ஏற்படும். ஆனால் இந்த முறை – டிஸ்கவரியின் மரபு வரைபடக்கருவி எளிதாக எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலாவது [...]

    Read more →

    Upgrade or Perish : Microsoft

    by  • December 13, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    மைக்ரோஸாப்டின் இன்றைய அறிக்கையின்படி அதன் பழைய இயக்குதளங்களுக்கு உதவியை நிறுத்தப்போகிறது. உதவியிழக்கும் பழைய இ.த களில் வின்டோஸ் 95, 98 ம் அடக்கம். இதைத் தவிர மைக்ரோஸாப்ட் ஆபீஸ் நிரலியின் சில பகுதிகளும் அனாதையாகக் கைவிடப்படும். இந்த முடிவு மைக்ரோஸாப்ட் திருட்டுத்தனமான தன்னுடைய ஜாவா வர்ச்சுவல் இன்ஜினைப் பயன்படுத்தக்கூடாது என்று சன் மைக்ரோசிஸ்டம்ஸ் பெற்ற நீதிமன்றத் திர்ப்பின் எதிரொலி. தொடர்ந்தும் இந்தப் பொருட்களை மைக்ரோஸாப்ட் நிர்வகிக்குமானால் அது சன்னுக்கு நிறைய பணம் காப்புரிமையாகத் தந்தாக வேண்டும். இந்தப் [...]

    Read more →

    P2P downloading is legal; It is Canada!

    by  • December 13, 2003 • கனடா • 0 Comments

    நேற்றைய அறிக்கையின்படி, நேரடி பரிமாற்ற வலைகளின் மூலம் கோப்புகளை இறக்கிக் கொள்வது சட்டப்படி குற்றமல்ல என்று விளக்கப்பட்டிருக்கிறது. இது கனடா!! இந்த விளக்கம் இசை வணிகர்களை மிகவும் புண்படச் செய்யப்போகிறது. சராசரி பயனர் இதனால் மகிழ்ச்சியடைகிறார். ஆனால் வலைகளில் பிறர் எடுத்துக் கொள்ளும்வகையில் கோப்புகளைப் போட்டுவைப்பது குற்றம்தான். க்ரெனடா, வெஸ்டர்ன் சமோவா போன்ற நாடுகளில் உட்கார்ந்துகொண்டு யாராவது போட்டுவைக்கும் எதையும் இனி கனேடியர்கள் பயப்படாமல் இறக்கிக் கொள்ளலாம். கனடாவின் மக்கள்தொகை அமெரிக்காவைவிட மிகவும் குறைவுதான். ஆனால் சராசரி [...]

    Read more →

    மின்நூல் பதிப்பும் பீலா வ

    by  • December 12, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் சாரு நிவேதிதா ( கோணல்பக்கங்கள், ஸீரோ டிகிரி, எக்ஸிஸ்டென்ஸியலிஸமும் பேன்சி பனியனும் புகழ்) உலகிலேயே முதன் முதல் தமிழ் மின்நாவலை விற்பனைக்குத் தயார்படுத்தியிருப்பதாகத் தகவல் வந்தது. இதைப்பற்றி பத்ரியும் இன்றைக்கு வலைக்குறித்திருக்கிறார். அதில் அவர் தெளிவாக இதற்குமுன் வந்திருக்கும் மின்புத்தகங்களைப்பற்றிய தகவல்களையும் தந்திருக்கிறார். (மதுரைத்திட்டத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் இரண்டும் இலவசமாக pdf கோப்புகளாகக் கிடைக்கின்றன). மின்புத்தகம் சம்பந்தமான என்னுடைய பழைய வலைப்பதிவின் தொகுப்பு ஒரே கட்டுரையாக இங்கே. [...]

    Read more →