• Archive for December, 2003

    User friendly tyrants

    by  • December 31, 2003 • பொது • 0 Comments

    சதாமின் கைது பற்றி என்னுடைய வலைக்குறிப்பைப் படித்துவிட்டு வாசன் பொங்கியெழுந்துவிட்டார். சற்று நீளமான அவருடைய விமர்சனத்துக்கு என்னுடைய பதில் இதோ; வாசன், இன்னொருமுறை என்னுடைய குறிப்பை நன்றாகப் பாருங்கள். அதில் எங்கும் நான் ‘சதாம் புண்ணியோத்தமர்’ என்று சொல்லவில்லையே. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், நான் எழுதியிருப்பதில் சதாமின் அயோக்கியத்தனமும் அடக்கம். என்னுடைய “நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்க்கத் தவறியது” ஏன்?

    Read more →

    சதாம் உசேன் கைது – என் சந்தே

    by  • December 30, 2003 • பொது • 0 Comments

    நேற்று இங்கு (டொராண்டோ) காலம் ஆசிரியர் திரு செல்வம் இல்லத்தில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு விருந்துக்குச் சென்றிருந்தேன். பெயர்தான் புத்தாண்டு விருந்து. நடந்ததென்னவோ ஒரு (இலக்கற்ற) இலக்கியக் கூட்டம்தான். வந்திருந்தவர்களில் எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், மஹாலிங்கம், பேராசிரியர் செல்வா கனகநாயகம் மூவரும் அடக்கம். இலக்கற்ற பேச்சு என்பதால் தகுதர எழுத்துக் குறியீட்டில் தொடங்கி, திவ்யப்பிரபந்தம், காநாசு, சிலுவைராஜ் சரித்திரம் என்று எல்லாவற்றையும் கதைத்தோம். இடையில் சதாம் உசேனும் வந்தார்.

    Read more →

    Wiki for Tamil Linux

    by  • December 27, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைய நாளின் பெரும்பகுதி தமிழ் லினக்ஸ் விக்கி தயாரிப்பதிலேயே கழிந்துவிட்டது. விக்கி வலையமைப்பு இணையத்தின் மாபெரும் புரட்சிகளில் ஒன்று. ஊர் கூடித் தேர் இழுக்க மின்னுலகத்தில் ஒரு வாய்ப்பு. இதன் மூலம் தமிழ் லினக்ஸ் பற்றிய தகவல்களை விரைவாக முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று நம்புகிறேன். தமிழ் லினக்ஸ் விக்கியில் நீங்களும் எழுதிப் பார்க்கலாம். போய் குடைந்துப் பாருங்களேன் . வலைக்குறிப்பு உலகில் புதிய நட்சத்திரங்கள் தோன்றியிருக்கின்றன (இகரஸ் பிரகாஷ், வழக்கறிஞர் பிரபு…) இவர்களுக்கு என் வரவேற்புகள். தமிழில் [...]

    Read more →

    Best Regional IndiBlog Award

    by  • December 26, 2003 • பொது • 0 Comments

    சில நாட்களுக்கு முன்னால் நண்பர் குமரகுரு என்னுடைய வலைப்பதிவில் இண்டிபிளாக் குழுவில் சிறந்த வட்டார வலைக்குறிப்பு விருதுக்கு என்னுடைய வலைக்குறிப்பைப் பரிந்துரைத்திருப்பதாக எழுதினார். அதுவரை எனக்கு அப்படி ஒன்று இருப்பதே தெரியாது. முதலில் மூன்று வலைக்குறிப்புகள் இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. பிறகு அவற்றில் ஒன்றை நீக்கிவிட்டார்கள் (திருமதி காமத்தின் கன்னட வலைக்குறிப்பு வாக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை, அவர் கன்னடத்தில் நேரடியாக எழுதுவதில்லை, அலகிட்ட படங்களைத்தான் வலைக்குறிப்பாக அவ்வப்பொழுது சேர்க்கிறார் என்று ஒருவர் ஆட்சேபம் தெரிவித்திருந்தார்). பிறகு வாக்களிப்பில் [...]

    Read more →

    இரட்டைக் கொலை

    by  • December 25, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    பத்ரியின் வலைக்குறிப்பில் தினமலர் கம்ப்யூட்டர் மலரில் வரும் விளக்கக் கட்டுரைகளைப் பற்றிக் குறித்திருந்தார். எல்லாவற்றையும் ஆங்கில வார்த்தைகளில் அப்படியே எழுதிவிட்டு, அங்கங்கே திறக்கவும், ஏமாற்றிவிடும் என்று மேலே கடுகு தாளித்ததைப் போல சில தமிழ் வார்த்தைகளை தூவிவிட்டு இவற்றைத் தமிழ் விளக்கங்கள் என்று சொல்லும் வியாதி எப்பொழுது விடுமோ என்று தெரியவில்லை.

    Read more →

    மைக்ரோஸாப்ட் கறவை இயந்தி

    by  • December 25, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    < ![CDATA[சமீபத்திய மைக்ரோஸாப்ட் அறிவிப்பின்படி அதனுடைய FAT கோப்பு அமைப்பிற்கு இனிமேல் பயனுரிமைக் கட்டணம் வசூலிக்கப்போகிறது . ஆதிகாலத்தில் பேசிக் என்ற மொழியில் எழுதப்பட்ட FAT கோப்புகள் சேமிக்கும் முறை மைக்ரோஸாப்டால் எம்எஸ் டாஸின் அடிப்படையில் அமைந்த வின்டோஸ் 3.11, 95, 98, எம்.ஈ போன்ற இயக்கு தளங்களில் கோப்புகளை ஒழுங்கமைக்கும் முறையாக மைக்ரோஸாப்டால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் வின்டோஸ் என்.டி போன்ற சக்தி வாய்ந்த இயக்கு தளங்கள் உருவாக, புதிதாக NTFS என்ற கோப்பு அமைப்பு தயாரிக்கப்பட்டது. [...]

    Read more →

    ஜப்பானியர்களும் தலைவணங்Ĩ

    by  • December 24, 2003 • ஜப்பான் • 1 Comment

    இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!! * * * பல நூறு ஆண்டுகளாகவே ஜப்பானில் தலைவணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. வரவேற்பு, வழியனுப்பல், மரியாதையைக் காட்டல், மன்னிப்புக் கோருதல், தன்னடக்கத்தைக் காட்டல், புரிதலை உணர்த்தல், அனுமதியைத் தெரிவித்தல், இப்படி ஒரே தலையை தாழ்த்துவதன் மூலம் எல்லாவிதமான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவது ஜப்பானியர்களின் பழக்கம். எப்பொழுது இந்தப் பழக்கம் தொடங்கியது என்று அறுதியிட முடியாது என்பது மிகவும் தெளிவான உண்மை. ஏனென்றால், இது மிருகங்களிடமும் காணப்படுகிறது. பல குரங்குகள் பலம் வாய்ந்த [...]

    Read more →

    இன்னும் கொஞ்சம் ஆட்சி மொழ

    by  • December 23, 2003 • பொது • 0 Comments

    நேற்று இராஜ்ய சபாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சட்ட எட்டாவது பிரிவின் திருத்தத்தின்படி இந்தியாவில் “ஆட்சி” மொழிகளின் எண்ணிக்கை 22 ஆக உயருகிறது . (ஏற்கனவே ரூபாய் தாளில் சிறுத்துப் போய்க்கொண்டிருக்கும் மஹாத்மாவின் உருவம் இதனால் இன்னும் கொஞ்சம் நெருக்கியடிக்கப்படும். மெதுவாக அவரை வெளியில் பிடித்துத் தள்ளிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்). புதிதாக ஆட்சி மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழிகள்; போதோ, ஸன்தாலி, மைத்தலி, டோக்ரி. கிட்டத்தட்ட முப்பத்தைந்து மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்களாம். வழக்கம்போல் இந்தி/ஆங்கிலத்தின் [...]

    Read more →

    இலவச மின்புத்தகங்கள்

    by  • December 22, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    பாம் கைக்கணினி வைத்திருப்பவர்கள் இன்று முதல் கிறிஸ்துமஸ்வரை தினமும் ஒரு இலவச மின்புத்தகத்தை இறக்கிக் கொள்ளலாம் என்று என்னுடைய நண்பன் ஒருவன் சொல்கிறான். (என்னிடம் பாம் கிடையாது, நான் நான்கு வருடங்களுக்கு முன்பு காஸியோப்பியா ஈ-100 வாங்கினேன். இப்பொழுது அதன் மின்கலம் கடைசி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், அதில் பதிலினக்ஸைப் போட்டுப் பார்க்கலாமா என்று இருக்கிறேன்). இன்றைய புத்தகம் ஒன்றும் அவ்வளவு சுவாரசியம் இல்லை (Andersen’s Fairy Tales by Hans Christian Andersen) இது [...]

    Read more →

    திரு நாகூர் ரூமியின் பதில

    by  • December 19, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    அவருடைய கட்டுரைப் பற்றி நான் எழுதியதற்கு நண்பர் ரூமியின் பதில் ராயர் காபிகிளப்பில் இன்றைக்குக் கிடைத்தது. என்னுடைய பதிலை மிகவும் இயல்பாக எடுத்துக்கொண்டு பாராட்டியிருக்கிறார். அவருடைய நேர்மையும் தெளிவும் எனக்கு அவர்மேல் மரியாதையை அதிகரிக்கின்றன. வீண்சண்டைகளும், வெட்டி விவாதங்களும் அதிகரித்துப் போன இந்த நாட்களில் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் நினைப்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள அச்சமாக இருக்கிறது. இதே அச்சம்தான் என்னை அவருடைய தமிழோவியம் கட்டுரைக்கு உடனடியாகப் பதிலெழுதாமல் தாமதிக்க வைத்தது. இன்று காலை (இதெல்லாம் [...]

    Read more →