• Archive for November, 2003

    Changes

    by  • November 16, 2003 • பொது • 0 Comments

    The last two weeks had been hectic with a lot of traveling. I made a few changes to the stylesheets and created a light theme. Still not satisfied with this look. Should also update the links and add a few more. Comments about the new look are welcome.

    Read more →

    செயற்கை வைரஸ்

    by  • November 14, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இனப்பெருக்கம் செய்துகொள்ளும் செயற்கை வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. Institute of Biological Enegry Alternatives என்ற தனியார் ஆராய்ச்சிக் கூடத்தில் இது சாத்தியமாகியிருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கூடத்தின் தலைவர் டாக்டர். கிரெய்க் வெண்டர் மரபியல் ஆராய்ச்சிகள் சம்பந்தமான பல்வேறு சர்ச்சைகளில் இடம் பெற்றவர். (அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற The Human Genome Project ஐ எதிர்த்து இவர் நிறுவனம் தனியாக மனிதனின் மரபியல் கூறுகளை வரைபடமாக்க முயன்றது).

    Read more →

    இன்னொரு லினக்ஸ் மேசைத்தள

    by  • November 11, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ரெட்ஹாட் தன்னுடைய மேசைத்தள லினக்ஸ் வெளியீடுகளை நிறுத்திவிட்டது. பெடோரா திட்டத்திற்கு தனது ஆதரவை அளித்து அதை பெடோரா-ரெட்ஹாட்டாக மாற்றிவிட்டது. இனிமேல் ரெட்ஹாட் அதிசக்தி லினக்ஸ் வெளியீடுகளை மாத்திரமே தயாரிக்கும், அதற்குப் பணம் கொடுப்பவர்களுக்கு மாத்திரமே உதவி செய்யும். இது பற்றிய எனது முந்தைய வலைக்குறிப்பு. இன்றைக்கு இன்னொரு பிரபலமான லினக்ஸ் வடிவமான டீபியன் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒருவரான ப்ரூஸ் பெரென்ஸ் பல்வேறு கணினி பெருநிறுவனங்கள் கூட்டாக இணைந்து இலவச, சிக்கலற்ற, தடையற்ற லினக்ஸ் வடிவத்தை (இதற்கு [...]

    Read more →

    கணினி வைரஸ் – 20ம் ஆண்டில்

    by  • November 10, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சும்மா இரும்புப் பெட்டியும் காந்தச் சட்டியுமாக இருந்து கொண்டிருந்த கணினிகளுக்கு உயிர் வந்து இந்த வாரத்தோடு இருபது வருஷங்கள் ஆகியிருக்கின்றன. ·à®ªà¯à®°à¯†à®Ÿà¯ கோஹன் என்பவர் வாக்ஸ் கணினிகளில் சுயபெருக்கம் செய்துகொள்ளும் நிரலியைப் பதித்த பின்பு இன்றைக்கு உலகில் 60,000 க்கும் மேற்பட்ட கணினி வைரஸ்கள் உலவி வருவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கணக்கு சொல்லுகிறார்கள். மெதுவாக அந்தக் காரியத்தைச் செய்துவிட்டு ·à®ªà®¿à®°à¯†à®Ÿà¯ இன்றைக்கு நல்ல பிள்ளையாக இணையப் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கிட்டத்தட்ட பலரும் இதைப் [...]

    Read more →

    மாலனின் ஜெ.ஜெ. சிலக்குறிப்&#

    by  • November 10, 2003 • இலக்கியம் • 0 Comments

    இந்த மாதம் திசைகளை இப்பொழுதுதான் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இணையப் பத்திரிக்கைக்கு மாத வெளியீடு மிகவும் பொருத்தமற்றது. இணையம் என்ற இந்தத் தகவல் ஊடகத்தின் வெற்றி இரகசியமே அதன் வேகம்தான். ஜெயலலிதா ஹிந்து ஊழியர்களைக் கைது செய்தால் அடுத்த நொடியில் அது படங்களுடனும் நிபுணர்களின் கருத்துக்களுடனும் இணையத்தின் வழியே என் வீட்டுக்கு கதவைத் தட்டுகிறது. இப்படியிருக்க மாதம் முழுவது மாறாமல் இருக்கப்போகும் பக்கங்களைப் படிக்க இப்பொழுது என்ன அவசரம் என்று தள்ளிப் போடத்தான் தோன்றுகிறது. இந்தச் சிக்கல் அச்சில் [...]

    Read more →

    The Hindu Staff Arrested

    by  • November 9, 2003 • பொது • 0 Comments

    ஹிந்து பத்திரைக்கை ஊழியர்கள் கைது – முன்னெப்போதுமில்லாத அளவிற்குப் பத்திரிக்கைச் சுதந்திரத்தில் அரசாங்கம் தலையிடுகிறது. அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. எதிர்த்துக் குரல் கொடுக்க வக்கில்லாமல் எல்லோரும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லோருமே உணர்ச்சியற்றுப் போய்க்கொண்டிருக்கிறோம்… எனக்கு எப்பொழுது உணர்ச்சியற்றுப் போகத்தொடங்கியது?

    Read more →

    நாவெல் சூஸி லினக்ஸை வாங்க

    by  • November 4, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சற்று முன்னர்தான். டொராண்டோ பல்கலைக்கழக நண்பர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்தார். அவசரமாகப் போய் கூகிளில் தேடினேன். இன்னும் இது கூகிள் நியூஸில் வரவில்லை. அவ்வளவு சூடான செய்தியை தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சொல்லவேண்டாமா? மேலதிக விபரங்களுக்கு நாவெலின் பத்திரிக்கைச் செய்தி சூஸியும் அப்படிதான் சொல்கிறது. இது மேசைத்தள லினக்ஸ் உலகில் ரெட்ஹாட்டை இரண்டாவது இடத்திற்குத் தள்ளிவிட்டிருக்கிறது. ஏற்கனவே ஐபிஎம்-சூஸி, ஐபிஎம்-நாவெல் உறவுகள் பலமாக இருக்கும் நிலையில் லினக்ஸ் உலகை இது மாற்றியமைக்கும். ஸ்கோ நாவெலிடமிருந்துதான் யுனிக்ஸ் இரகசியங்களுக்கு [...]

    Read more →

    தம் மக்கள்.

    by  • November 1, 2003 • இலக்கியம் • 0 Comments

    தினமும் உருப்படியாக ஏதாவது ஒன்றைப் படிக்க வேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் தின்ற சோத்துக்குப் புண்ணியமில்லை. இன்றைக்கு எனக்கு அப்படிப் புண்ணியமில்லாமல் போய்விடுமோ என்றிருந்தது. தொழில் சம்பந்தமான புத்தகங்களையோ, தாள்களையோ தொட மனசில்லை. அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் பார்வை பதியமாட்டேன் என்கிறது. பாழாய்ப்போன இணையத்தைச் சுற்றி சுற்றி வந்தாகிவிட்டது. slashdot ல் தொடங்கி தினமணிக் கதிர் வரை மேய்ந்தாகிவிட்டது. எல்லாம் குப்பை.

    Read more →