• Archive for November, 2003

    முரசொலி மாறன்

    by  • November 24, 2003 • பொது • 0 Comments

    மறைந்த திரு முரசொலி மாறனுக்கு என்னுடைய அஞ்சலி. மாறன் இந்தியாவின் மிகச்சில திறமையான அரசியல்வாதிகளுள் ஒருவர் என்பது என்னுடைய திடமான கருத்து. அவரை ஒரு அரசியல்வாதியாகப் பார்ப்பதைவிட திறமையான நிர்வாகியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், தேவே கவுடாவிலிருந்து துவங்கி வாஜ்பேயி வரை பல எதிரெதிர் மத்திய அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதும் மாறன் தி.மு.கவின் நிலைமாறுபாட்டால் அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்தார். தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் நிலைப்பாட்டைவிட தனது பதவிக்கு உத்தமராக நடந்துகொள்ள வேண்டிய [...]

    Read more →

    நூறு குறிப்புகள்

    by  • November 23, 2003 • பொது • 0 Comments

    இன்று எழுதிய ஒளிர்மீன்கள் என்னுடைய நூறாவது வலைக்குறிப்பு. இவற்றில் site updated என்பது போன்ற ஒருவரி கிறுக்கல்களை எல்லாம் ஒரங்கட்டிவிட்டால் எண்பதாவது உருப்படியாகத் தேறும். எனக்கே மலைப்பாக இருக்கிறது. சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளிவிட்டால் எளிதாக எழுத முடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜப்பானில் வசித்தபோது நிறைய எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு அது கிட்டத்தட்ட நின்றுவிட்ட நிலையில் எழுத்தாளர் நண்பர் திரு அ. முத்துலிங்கம்தான் வற்புறுத்திச் சொன்னார்; எழுத ஆசையிருப்பவர்கள் தினமும் ஒரு பக்கமாவது எழுதிக் கொண்டிருக்க வேண்டும். இதே [...]

    Read more →

    ஒளிர்மீன்கள்

    by  • November 22, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    கடந்த இரண்டு நாட்களாக வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் என்பதால் எழுத முடியவில்லை. * * * நேற்று ஹாமில்டன் நகரில் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு நண்பருக்கு என்னுடைய சிறு உதவி தேவைப்பட்டது. வேலை எதிர்பார்த்ததைவிட எளிதாக முடிந்தாலும் நேரமெடுத்தது. இடையில் கிடைத்த நேரத்தில் அந்தப் பேராசிரியருடன் உரையாட முடிந்தது. உரையாடல் சமீபத்தில் மரபு மாற்றப்பட்டு விற்பனைக்கு வந்திருக்கும் ஒளிர்மீன்கள் பற்றித் திரும்பியது. சில நாட்களுக்கு முன்னால் தைவானில் மரபு மாற்றப்பட்ட ஒளிரும் வரிமீன்கள் [...]

    Read more →

    மைக்ரோஸாப்டின் புதிய செய

    by  • November 19, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைக்கு மைக்ரோஸாப்ட் புதிய செய்திச் சேவையைத் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட கூகிள் செய்தியைப் போலவே இருக்க்கிறது. இதன் மூலம் மைக்ரோஸாப்ட் கூகிளுடன் நேரடியாக மோதத் தொடங்கியிருக்கிறது.

    Read more →

    பறக்கும் நுண்இயந்திரன்

    by  • November 18, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஜப்பானின் சீக்கோ-எப்ஸான் நிறுவனம் உலகின் முதன் முதலான பறக்கும் நுண்இயந்திரனை வடிவமைத்திருக்கிறது. உள்ளங்கையில் நிறுத்திவிடக்கூடிய இந்த இயந்திரன் அகஒலியலைகளால் எதிர் திசையில் சுழலும் இரண்டு இறக்கைச் செலுத்திகளின் இயக்கத்தால் மேலும்புகிறது. இதன் இயக்கத்தை ப்ளூடூத் மூலம் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த சாதனத்தின் ஆராய்சியில் அளவில் குறைந்த பல கட்டுப்பாட்டுக் கருவிகள் சாதிக்கப்பட்டிருக்கின்றன.

    Read more →

    Site Update

    by  • November 17, 2003 • பொது • 0 Comments

    என்னுடைய வலைத்தளத்தில் இன்னும் சில படைப்புகளை உள்ளிட்டிருக்கிறேன். பொதுப் பார்வைக்கு வந்த என்னுடைய முதல் சிறுகதை (ஆறாம்திணை), முதல் கவிதை (திண்ணை, பிறகு காலம் சிற்றிதழ்), முதல் கட்டுரை (திண்ணை) வலையேற்றப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் என்ற தமிழ்ப் பக்கங்களின் முகவரியிலிருந்து படிக்க முடியும். கருத்துகளை வரவேற்கிறேன்.

    Read more →

    ஜெயமோகன் – கருணாநிதி

    by  • November 17, 2003 • இலக்கியம் • 0 Comments

    ஜெயமோகன் – கருணாநிதி விவகாரத்தில் திசைகளில் மாலன் எழுதிய ஜெ.ஜெ.சில குறிப்புகள் என்ற கட்டுரைக்கு என்னுடைய எதிர்வினையை ஆதரிக்கிறார் நண்பர் பத்ரி. இதே விஷயத்தில் காலச்சுட்டின் கருத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். இவ்வாரத் திண்ணையில் எம்.வி. குமார் என்பவர் சொல்லியிருப்பதைப் போல இந்தக் கருத்தை ஜெயமோகன் முன்வைத்திராவிட்டால் நவீன இலக்கிய உலகில் இன்னொருவர் கட்டாயமாக இதையே சொல்லியிருக்கக் கூடும்; குறிப்பாக எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

    Read more →

    மதுரைத் திட்டம் துரிதமாக

    by  • November 17, 2003 • இலக்கியம் • 0 Comments

    இந்திய மொழிகளில் மின்னூலாக்கத் திட்டங்களில் முதன்மையானது மதுரைத் திட்டம். தற்சமயம் இரு நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் ம.தியினால் சேமிக்கப்பட்டிருக்கின்றன. நானே கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட குறுந்தகடுகளை நண்பர்களுக்கு விநியோகித்திருக்கிறேன் (வட அமெரிக்காவில் யாருக்காவது தேவைப்பட்டால் எழுதவும். அனுப்பி வைக்கிறேன்).

    Read more →

    Now this blog’s root

    by  • November 16, 2003 • பொது • 0 Comments

    நான் கடந்த நான்கு வருடங்களாக எழுதி அச்சில் வந்த/மின்பதிப்புகளில் வந்த ஆக்கங்களை எல்லாம் தொகுக்க முயற்சித்து வருகிறேன். அதற்கு வசதியாக இந்த வலைக்குறிப்பின் வேர் முகவரியில் அவற்றைத் தரவுத்தளத்தின் அடிப்படையிலான வலைத்தளமாக ஆக்கத் தொடங்கியிருக்கிறேன்.

    Read more →