• Archive for November, 2003

    அகிரா குரோஸாவா

    by  • November 30, 2003 • பொது • 0 Comments

    நேற்று அகிரா குரோஸாவா-வின் ரஷோமோன் திரைப்படத்தை இரண்டாம் முறையாக கிடடத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். அந்த வயதில் புரியாத குரோஸாவாவின் மேதமை இப்பொழுது எளிதாகப் புலப்படுகிறது. ஒரு கொலை-ஒரு கற்பழிப்பு குறித்த நான்கு பேரின் வாக்குமூலங்கள்தான் படம். ஒரு வழிப்பறியோன், கற்பழிக்கப்பட்டவள், அவள் கணவனும் கொலையுண்டவனுமானவனின் ஆவி, சம்பவத்திற்குச் சம்பந்ந்தமில்லாத, ஆனால் பார்த்ததாகச் சொல்லிக்கொள்ளும் விறகுவெட்டி, இவர்கள் நால்வரின் வாக்குமூலம் புதிரைப் போல படத்தில் துண்டு துண்டாகக் காட்டப்பட்டிருக்கிறது. பிறழாத உண்மை என்பதைப் பற்றிய கவிதை [...]

    Read more →

    No w.bloggar for sometime

    by  • November 29, 2003 • பொது • 0 Comments

    I am reverting back to the old ways (logging into my MT site and editing my entries), abandoning w.bloggar. (I reedited the last entry for clarity). There are two reasons. (1) It spoils my layout (2) There is problem in RSS syndication (UTF-8 characters are not syndicated properly). I am leaving two entries (insignificant) here [...]

    Read more →

    ஜெ.ஜெ சில குறிப்புகள் – திசை

    by  • November 29, 2003 • இலக்கியம் • 0 Comments

    இன்றைக்கு வெளியாகியிருக்கிற திசைகள் டிசம்பர் இதழில் ஆசிரியர் மாலன், என்னைப் பற்றி எழுதியிருக்கிறார். இதன் பின்புலம்: நவம்பர் திசைகள் இதழில் மாலன் ஜெ.ஜெ. சில குறிப்புகள் என்ற தலைப்பில் ஜெயலலிதாவையும், ஜெயமோகனையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அதன் மீதான எனது கருத்துக்களை என்னுடைய வலைக்குறிப்பில் பதிந்திருந்தேன். சுருக்கமாகச் சொல்லப்போனால், அவர் ஜெயமோகனைப் பற்றி விமரிசித்தது தவறு என்று கருத்து தெரிவித்திருந்தேன். சில நாட்கள் கழித்து எதிர்வினையாக மாலனிடமிருந்து எனக்குத் தனிப்பட்ட கடிதம் வந்தது. அதில் என்னுடைய விமர்சனங்களுக்கு அவர் [...]

    Read more →

    ஈழத்தமிழும் ஐயர் தமிழும்

    by  • November 28, 2003 • இலக்கியம் • 0 Comments

    இன்றைக்கு வலைப்பூக்கள் சஞ்சிகையில் ஈழத்தமிழ் புரியாமல்போதல் குறித்த விவாதங்களை வெட்டித் தொகுத்துக் கிடைக்கப் படித்தேன். இந்த விவாதங்கள் எங்கே நிகழ்ந்தன என்று தெரியவில்லை. எனவே, இவற்றின் முழுவீச்சும் தெரியாது. நான் சொல்லும் கருத்துக்களெல்லாம் வெட்டியொட்டப்பட்டவற்றின் அடிப்படையிலேயே என்பதைத் தெளிவுபடுத்திவிடுகிறேன். வாதம் இப்படியாகத் துவங்கியிருக்கிறது; ஒரு குழுமத்தில் இலங்கைத் தமிழுக்கென்று அகராதி எதுவும் இருக்கிறதா என்று ஒருவர் கேட்கப் போக “அஃதென்ன ஈழத்தமிழென்றால் இளக்காரமா அகராதி தேட, ஐயர் பாஷைமட்டும் நோக்கு புரிஞ்சுடுமோ” ரீதியாகப் பதில்கள் கிடைத்திருக்கின்றன.

    Read more →

    Using w.bloggar

    by  • November 28, 2003 • பொது • 0 Comments

    இன்றைக்கு w.bloggar என்ற கருவியைப் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்தேன். இதற்குப் புதிதாக யுனிகோட் பயன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது ஒரளவிற்கு நல்ல html editor, எனவே, வலைக்குறிப்புகளை எழுதுவது மிகவும் எளிதாக இருக்கிறது. இதற்கு முன்னால் என்னுடைய தளத்தில் கடவுச்சொல் கொடுத்து உள்ளே நுழைந்து, சுவடியில் எழுதி, சுரதாவின் பொங்குதமிழ் மூலம் யுனிகோட் மாற்றப்பட்ட சமாச்சராங்களை வெட்டியெடுத்து ஒட்ட வேண்டியிருந்தது. இப்பொழுது w.bloggar மூலம் நேரடியாக எ-கலப்பை யுனிக்கோட் தமிழில் எழுத முடிகிறது. தளத்தின் முகவரி, கடவுச் [...]

    Read more →

    என்னுடைய புதிய மேசைத்தளம

    by  • November 27, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைக்கு என்னுடைய மடிக்கணினியில் litestep என்ற மேசைத்தளத்தை நிறுவினேன். இது விண்டோஸ் எக்ஸ்பியின் வழமையான மேசைத்தளத்தைத் தூக்கியெறிந்துவிட்டு முற்றாக மேலே வந்து உட்கார்ந்து கொள்கிறது.

    Read more →

    சுஜாதாவும் யாப்பும்

    by  • November 26, 2003 • இலக்கியம் • 0 Comments

    என்னுடைய யாப்பிலக்கணப் பாடங்களை மறு வலையேற்றம் செய்தது பற்றி ராயர் காபி கிளப்பிலும் போட்டிருந்தேன். பத்ரி, எழுத்தாளர் திரு சுஜாதா “உயிர்மையில் ‘கண்ணீரில்லாமல் யாப்பு’ என்று பாடம் நடத்துகிறார். ஜெயலலிதா – நிரை-நிரை-நேர் => கருவிளங்காய்; கருணாநிதி – நிரை-நேர்-நிரை => புளிமாங்கனி என்றெல்லாம் பாடம் போகிறது”. என்று சுட்டியிருந்தார் என்னுடையது கட்டாயமாக “மடையர்களுக்கு யாப்பு” (Yappu for Dummies)சமாச்சாரமில்லை. நான் மடையனாக இருக்கலாம், ஆனால் படிப்பவர்களைக் குறைத்து எடைபோட மாட்டேன். கண்ணீரில்லாமல் யாப்பு என்ன, எதுவுமே [...]

    Read more →

    யாப்பிலக்கணம்

    by  • November 25, 2003 • இலக்கியம் • 4 Comments

    கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னால் டோக்கியோவில் வசித்தபோது மரபுக்கவிதைகளிலும் இலக்கணத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது (இப்பொழுதும் இருக்கிறது; என்னுடைய Attention Dificiency Disorder காரணமாகக் கொஞ்சம் அடித்தட்டிற்குப் போயிருக்கிறது). அப்பொழுது மன்றமையம் என்று அன்புடன் அழைக்கப்பட்ட Forumhub.com தளத்தில் இருந்த பல இலக்கியக் குழுக்களில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தேன். அப்பொழுது எங்கள் குழுக்களில் புதிதாக வருபவர்களுக்கு அடிப்படைப் பாடங்களை ஒரு இடத்தில் சேர்த்துவைத்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து இருந்தது. அங்கு இருந்தவர்களிலேயே குறைவாக இலக்கணம் தெரிந்த [...]

    Read more →

    டெல் தொலைபேசிச் சேவை

    by  • November 25, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைய செய்தியின்படி உலகின் முதன்மை கணினி வர்த்தக நிறுவனமான டெல் தனது வாடிக்கையாளர் தொலைபேசி உதவிச் சேவையை பெங்களூரிலிருந்து மீண்டும் அமெரிக்காவிற்குக் கொண்டு செல்வது என்று முடிவெடுத்துள்ளது. சேதி கேட்டவுடன் அமெரிக்கப் பங்கு சந்தையில் டெல்லின் பங்குகள் அறுபத்தாறு செண்ட் உயர்ந்திருக்கின்றன.

    Read more →