• Archive for October, 2003

    Japanese Toilets

    by  • October 9, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    ஜப்பானில் இருக்கும் பொழுது “பின்நவீனத்துவம் – ஜப்பானியக் கழிவறைகளின் மீதான ஒரு ஆய்வு” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். இது அமீரக இணைய நண்பர்கள் குழுவின் ஆண்டு மலருக்காக எழுதப்பட்டது. அதன் பின்னர் கனடா வந்துவிட்டேன். இங்கு காலம் இதழுக்காக நண்பர் செல்வம் கேட்க அவருக்குக் கொடுத்திருந்த மூன்று கட்டுரைகளில் இதுவும் ஒன்று. (அவரிடம் கொடுக்கும்போதே இது அமீரகத்தில் வந்துவிட்டதா, வருமா என்று தெரியவில்லை என்று சொன்னேன்). ஆனால் மூன்றில் அவர் தெரிந்தெடுக்க கனடா வந்தபிறகு [...]

    Read more →

    Another failure in digital copyright

    by  • October 9, 2003 • இசை • 0 Comments

    சென்ற வாரம் BMG இசை நிறுவனம் ஆன்டனி ஹாமில்டன் என்பவருடைய Comin From Where I’m From என்ற இசைக் குறுவட்டை வெளியிட்டது. இது சன்காம் என்னும் நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட MediaMax CD-3 என்ற புதிய நகல்தடுப்பு சங்கேதத்தை உள்ளடக்கியது. அதாவது இந்தக் குறுவட்டை நீங்கள் வாங்கினால், இதை மாத்திரமே பயன்படுத்தி பாடல்களைக் கேட்க முடியும். இதை வேறொரு டிஜிட்டல் வடிவில் (உதாரணமாக, எம்பி3) நகலெடுக்க முடியாது. ஆனால் சில அனுமதிகள் உண்டு;

    Read more →

    10 Scientists of Indian origin among MIT TR100 2003

    by  • October 8, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    மாசாசூஸெட்ஸ் பல்கலைக்கழகம் மூன்றாவது ஆண்டாகத் தனது TR100 பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் தலைசிறந்த நூறு இளம் அறிவியலாளர்களும் தொழில்நுட்பவியலாரும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பெற இந்த வருடத்துவக்கத்தில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியலில் இடம்பெறும் ஆராய்ச்சிகள் வருங்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என அமெரிக்காவின் முன்னனி விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாரைக் கொண்ட நடுவர் குழு தெரிவிக்கிறது.

    Read more →

    2050ல் இந்தியா.

    by  • October 7, 2003 • பொது • 0 Comments

    கோல்ட்மான் சாக்ஸ் என்னும் முன்னனி பொருளாதார நிபுணர்கள் நிறுவனம் 2050ஆம் ஆண்டில் உலகின் முக்கிய பொருளாதாரங்களாக எந்த நாடுகள் இருக்கும் என்று ஒரு சோதிடத்தை வெளியிட்டிருக்கிறது. நாளைக்குப் பங்குச் சந்தையில் யாரால் முன்னேற முடியும் என்று கணிப்பதே சிரமமாக இருக்கின்ற நிலையில் ஐம்பது வருட ஆரூடத்தை முன்வைத்திருப்பது கோல்ட்மானின் தைரியம்தான் என்று கூற வேண்டும்.

    Read more →

    Redhat – Fedora Project

    by  • October 6, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    { கடந்த சில நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்து ஒத்திப்போட்டு வந்த விஷயம் இந்த பெடோரா-ரெட்ஹாட் திட்டம். என்னுடைய நண்பர் சரவணன், “என்ன இன்னும் பெடோரா-ரெட்ஹாட் பற்றி எழுதவில்லை?” என்று கறுப்பு-வெள்ளைப் படங்களில் மோர்க்குழம்புக் குழப்பமாகப் பிரிந்து நின்று பேசுமே அந்த மனசாட்சியாக மின்னஞ்சலில் கேட்டுவிட்டார். சில சமயம் நாம் அதிகம் நேரில் பார்த்து பேசியிருக்காத ( சரவணனை ஒரு தடவைதான் பார்த்திருக்கிறேன்) நண்பர்கள் நான் இந்த விஷயங்களைப் பற்றி கட்டாயம் கருத்து வைத்திருப்பேன் என்று உறுதியாகத் [...]

    Read more →

    சாது மிரண்டால்-3

    by  • October 5, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சாது மிரண்டால்-1 சாது மிரண்டால்-2 மீண்டும் தனது அடையாளம் திருடப்பட்டதையும், அதைக் காப்பாற்றுவதாக உறுதியளித்த இணையச் சேவை வழங்குநரின் இயலாமையும் கண்டு வருத்தமடைந்தான் ஆன்டி. ஆனால் இதை எப்படியும் ஒரு கை பார்த்தே தீருவது என்று முடிவு செய்தான். “நான் கணினியை வைத்துக் கொண்டு படங்கள் வரைபவன்; கணினி வலைநுட்பன் கிடையாது. மென்மையான ஓவியனான நான் சிக்கல்கள் நிறைந்த கணினி உலகிற்குத் தள்ளப்பட்டேன். ஆனால் நான் நேசிக்கும் இணையம் என் கண்களுக்கு முன்னாலே திருடர்களுக்கும் எத்தர்களுக்கும் அடிமைப்பட்டுப் [...]

    Read more →

    மடல் இலக்கியம்.

    by  • October 4, 2003 • இலக்கியம் • 0 Comments

    மடல் இலக்கியத்தைப்பற்றி நண்பர் பத்ரி வலைக்குறித்திருக்கிறார் . தமிழ் செவ்விலக்கியத்தில் மடல் இலக்கியம் ஒரு முக்கிய கூறு. நிறைவேறாத காதலுக்கு கடைசி முயற்சியாக மடலேற்றம் நடந்திருக்கிறது. மடலேறுவேன் என்று பயமுறுத்துவது வரை அகத்திணையாகக் கருதப்படும்.

    Read more →

    சாது மிரண்டால்-2

    by  • October 3, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    சாது மிரண்டால்-1 உங்களுக்குச் சராசரியாக ஒரு நாளில் எத்தனை மின்னஞ்சல்கள் வரும், ஐந்து, பத்து, ஐம்பது. எத்தனை வருகிறதோ அதில் சராசரியாக மூன்றில் ஒரு பங்கு எரிதம் என்பது நிச்சயம் (எரிச்சல் கடிதம் – எரிதம்). நைஜீரியாவில் கொள்ளையடித்த பணத்தை எனக்கு மாற்றிவிட என்னுடைய வங்கிக் கணக்கு விபரங்களைக் கேட்டு எழுதும் மாரீஸ் ஜோசப் ஓலங்கா, அந்த சமயங்களில் அளவு குறைவால் அவதிப்படுவதை எப்படியோ தெரிந்துகொண்ட குறியளவு நீட்டிப்புச் சித்தர்கள், இல்லாத என்னுடைய கொங்கைகளை ஊதிப்பருப்பிக்க என்று [...]

    Read more →

    Obscenity, aka Artistic Self-Expression

    by  • October 2, 2003 • கலைகள் • 0 Comments

    கலை வெளிப்பாடு என்ற பெயரில் கொச்சைப்படுத்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் சாபக்கேடு. இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நண்பர் இரா. முருகன் பிரிட்டனில் தோளைத்தொடும் காதை ஒருவர் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் கடந்த ஆண்டுகளில் நான் படித்த கலைக்கேவலங்கள் நினைவில் வரத்தொடங்கின. இரண்டு சம்பவங்களில் தங்கள் இனப்பெருக்க விஷயத்தை வீதிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் கலைஞர்கள்(?).

    Read more →

    சாது மிரண்டால் -1

    by  • October 1, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    1978, ஐப்பசி மாதம் ஒரு அடைமழைக்குப் பிறகான ஒரு மாலையில், கும்பகோணம் நேடிவ் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வழக்கம் போல் சென்றது பிள்ளையார் கோவில்தெரு கிரிக்கெட் குழு. இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு நினைவில் வைத்திருந்து எழுதும்படியாக அப்படியன்றும் பிரபலமான குழு அல்ல அது. வழக்கமாக எல்லா தெருக்களிலும் இருப்பதைப் போன்ற ஒரு வெட்டிக் கூட்டம். வழக்கம்போல இது வசதியான ஒரு பையனின் அப்பாவின் அதீத கிரிக்கெட் ஆர்வத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு ஜீவித்து வந்தது. அவ்வப்போது தெரு மேட்ச் [...]

    Read more →