• Archive for October, 2003

    Coming Soon: From Internet to your Stereo.

    by  • October 21, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நேற்றுதான் பதிகணினிகளைப் பற்றியும், அந்தத் துறையில் லினக்ஸின் அதிவேக வளர்ச்சியையும் பற்றி எழுதினேன். இன்றைய தகவலின்படி நான்கு ஜப்பானிய நிறுவனங்கள் (சோனி, ஷார்ப், கென்வுட், பயோனீர்) எனிமியூசிக் என்ற இயக்குதளத்தின் அடிப்படையிலான இசைக்கருவிகளின் மாதிரிகளை வெளியிட்டுள்ளன. எப்படி சிம்பியன் செல்பேசிகளுக்காக வடிவமைக்கப்பட்ட இயக்குதளமோ, அதோ போல் எனிமியூசிக் இசைக்கருவிக்கான இயக்குதளமாம இருக்கும். இது லினக்ஸ் அடிப்படையிலானது. இல்லத்தில் பயன்படுத்தப்படும் சராசரி ஸ்டீரியோ கருவிகளில் அடுத்த வருடம் முதல் இந்த இயக்குதளத்தினாலான பதிகணினிகளுடன் விற்பனைக்கு வரும்..

    Read more →

    இயக்குதள உலகின் மன்னன்.

    by  • October 20, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைக்கு உலகிலேயே பிரபலமான இயக்குதளம் (operating system) எது என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? சராசரி பயனர் மைக்ரோஸாப்ட் வின்டோஸ் (எக்ஸ்பி, 2000, எம்.இ, 98, 95, 3.1) என்று சொல்லுவார். இன்னும் சிலபேர் யுனிக்ஸ் அல்லது லினக்ஸ் என்று பதில் சொல்வார்கள். இவை எல்லாம் தவறான விடைகள்.

    Read more →

    அண்டகோள விலாசம்.

    by  • October 19, 2003 • இலக்கியம் • 0 Comments

    நேற்றைக்கு அண்டகோள விலாசம் என்னும் புத்தகம் ஒன்றை மதுரைத் திட்டதில் உள்ளிடும் முயற்சிகளைக் தொடங்கியிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு மதுரைத் திட்டத்திற்கு நான் செய்யும் உதவி இது. டொராண்டோ பல்கலைக் கழக நூலகத்தில் கிடைத்த புத்தகம் இது. சுவாரசியமாக இருக்கிறது. நூலின் காலம் தெரியவில்லை. 1952ல் சென்னை மாகண நூலகத்தினால் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் சில வரிகள் விடுபட்டுப் போயிருக்கின்றன. நூலை எழுதியவர் வேம்பத்தூர் முத்து வேங்கடசுப்பையர் என்பவர்.

    Read more →

    நினைத்ததை முடிப்பவன் – 3

    by  • October 18, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    எண்ணங்களால் இயந்திரங்களை இயக்குதல் இப்படி குரங்கிற்குக் கணினி திரையில் உதவி செய்ய, குரங்கின் இயக்கத்தால் கணினி கற்றுக்கொள்ள ஒருவருக்கொருவர் ஒத்திசையும் இணக்கம் தோன்றுகிறது. எனவே அவைகளுக்கு (அவர்களுக்கு??) இடையே புரிதல் அதிகரிக்கிறது.

    Read more →

    நினைத்ததை முடிப்பவன் – 2

    by  • October 17, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    எண்ணங்களால் இயந்திரங்களை இயக்குதல் {முதலாவது பகுதி} டியூக் பல்கலைக் குழுவும், மாசாசூஸெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியர் மாண்டயம் சிறீனிவாசனும் இணைந்து திட்டமிட்ட அடுத்த கட்ட ஆய்வுகள் சற்றே சிக்கலானவை. இந்த முறை ஆய்வில் எலிகளுக்குப் பதிலாக குரங்கு பயன்படுத்தப்பட்டது. இதன் செல்லப்பெயர் பெல்லி. இது ஆந்தைக்குரங்குகள் என்று அழைக்கப்படும் ஒருவகைக் சாதியைச் சேர்ந்தது, இவற்றின் மூளை மண்டையின் மேல்தோலுக்குச் சற்றே கீழிருக்கும். எனவே, அறுவை செய்து உணரிகளைப் பொருத்துவது எளிதாகும்.

    Read more →

    dyne:bolic linux is great!!

    by  • October 15, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    டைன்:பாலிக் என்ற வெளியீட்டை நேற்று முதன் முறையாகச் சோதித்துப் பார்க்க முடிந்தது. லினக்ஸ் என்பது கைக்கணினிகளிலிருந்து அதிகணினிகள் (supercomputers) வரை பரவிட்ட இந்த நாட்களில் அதுவும் ஒரு கனமான பொதியாகவே பெரிதும் காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் தற்பொழுது சில குழுக்கள் தனிப்பயன்களுக்காகத் தெரிந்தெடுத்த சில நிரலிகளை மாத்திரம் உள்ளடக்கி லினக்ஸைத் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது டைன்:பாலிக்.

    Read more →

    Weblog in Tamil

    by  • October 14, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    தமிழில் வலைப்பதியும் நண்பர்களிடையே weblog, blog என்பதற்கு இணையா தமிழ்ச் சொல்லின் தேவைகுறிந்த உரையாடல் (மீண்டும்) எழுந்துள்ளது. என்னுடைய கருத்து, மீண்டும் ஒரு முறை நான் வலைக்குறிப்பு என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறேன். வலைப்பூ என்பதில் எனக்கு உடன்பாடில்லை (கவித்துவமாக இருக்கலாம், ஆனால் தொழில்நுட்பத்திற்கு இது பொருத்தமில்லை என்பது எ.தா.அ. கவித்துவம் தமிழைத் தலையெடுக்கவிடாமல் அழுத்துகிறது என்பதும் எ.தா.அ.). log என்பதற்குக் குறிப்பு என்பது சற்றேறக்குறைய பொருந்துகிறது. logbook – குறிப்பேடு, தொழில்நுட்பத்தில் தொடர்புடைய கருத்துகளுக்குத் தொடர்பான பெயர்களை [...]

    Read more →

    நினைத்ததை முடிப்பவன் -1

    by  • October 14, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நினைத்ததை முடிப்பவன் -1 எண்ணங்களால் இயந்திர இயக்குதல் முத்துப்பாண்டி சராசரிக்கும் மேற்பட்ட திறமை கொண்ட இளைஞன். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியாலும், தந்தையின் ஊக்கத்தாலும் அவன் பரம்பரையில் யாராலும் சாதிக்காத பல சாதனைகளைச் செய்து காட்டியவன். கல்லூரி வாசலில் கால்வைத்திராத பரம்பரையில் பிறந்து, பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் கணினிப் பட்டப்படிப்பில் முதலாவதாக வந்தவன். பின்னர், தில்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்ப முதுபடிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவன். ஜி.ஆர்.ஈ, டோ·à®ªà¯†à®²à¯ பரீட்சைகளில் உச்சங்களை எட்டி, கணினி [...]

    Read more →

    ஒப்பன் ஆபீஸ்க்கு மூன்று வ

    by  • October 13, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இன்றைக்கு ஓப்பன் ஆபீஸ் நிரலித் தொகுப்பின் மூன்றாவது பிறந்த தினம். அவர்கள் வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள மூன்றாவது ஆண்டு சாதனைகள் மிகவும் நிறைவு தருகின்றன. ஒரு மில்லியன் பயனர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இது மாபெரும் சாதனைதான். சந்தைப் பங்கில் ஒப்பிடுகையில் மைக்ரோஸாப்ட் ஆபீஸ் வெகுதொலைவில் முன்னனியில் இருக்கிறது. என்றாலும், மூன்றாண்டுகளில் வணிக ஆதாயங்களைப் பார்க்காமல் சந்தைப்படுத்த சம்பளம் வாங்கும் ஆளில்லாமல் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்.

    Read more →