• Archive for October, 2003

    மிலன் குந்தெரா.

    by  • October 31, 2003 • இலக்கியம் • 0 Comments

    இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நாகரெத்தினம் கிருஷ்ணா தன் பிரஞ்சு எழுத்தாளர்கள் வரிசையில் குந்தெராவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நா.கி மிலன் குந்தெரா-வை பிரஞ்சுக்காரராக சுவீகரித்துக் கொண்டுவிட்டது (அலுவலகத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் இருக்கும் என் நண்பன் மிலாஷ் குசேரா (Milos Kucera) காதில் விழுந்தால் அவரைச் சும்மா விடமாட்டான்). . (குந்தெரா செக்-கில் பிறந்தவர் என்பதைத் தவிர எங்கள் குசேராவுக்கு அவரைப்பற்றி ஒன்றும் தெரியாது). நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் பட்டியலில் குந்தெரா நிரந்தர உறுப்பினர்.

    Read more →

    Semmangudi Passes Away

    by  • October 31, 2003 • இசை • 0 Comments

    கர்னாடக இசை மேதை செம்மங்குடி சிறீனிவாச அய்யர் தனது 96ஆவது வயதில் இன்று காலை காலமானார். இந்த ஒற்றை வரியே போதும் சோகத்தைப் பிழிய. செம்மங்குடியின் மறைவில் நாம் ஒரு மேதையை இழந்திருக்கிறோம். செம்மங்குடியின் சங்கீதத் திறமையைப் பற்றி என்னைப் போன்றவர்கள் எழுதத் தகுதி கிடையாது. எனவே, அவரின் மறுபக்கத்தைப் பற்றி,

    Read more →

    இன்னொரு கொடிய வைரஸ்.

    by  • October 30, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    என்னுடைய மகனுடன் ஹாலோவின் நாளைக் கொண்டாட என்ன பயங்கர உடைகளை அவனுக்குப் போட்டுப் பள்ளிக்கு அனுப்பலாம் என்று தீர்மானித்து முடித்துவிட்டு கணினியில் சற்று முன்னர்தான் அமர்ந்தேன். பயங்கரங்களைத் தேட அதிக தொலைவு செல்ல வேண்டியதில்லை. அமெரிக்காவை ஒருமுறை பார்த்தால் போதும்.

    Read more →

    கொந்தர்களுக்கு ஒரு சின்ன

    by  • October 29, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நான் சிறுவனாக இருக்கும்போது இந்திய/தமிழக அரசியல் கட்சிகளின் சின்னங்கள் எனக்கு ஆர்வமூட்டின. சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கு (அதுவும் படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகமுள்ள இந்தியாவில்) மிகவும் முக்கியமானவை. “வாத்தியார் கழுதய நிக்கவச்சாலும் நாங்க ரெட்டெ எலேலதாங் குத்துவோம்” என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்தச் சின்னங்களை வைத்துக்கொண்டு பல வேடிக்கைகளும் உண்டு. ஆயிரம் “கைகள்” மறைத்தாலும் “ஆதவன்” மறைவதில்லை என்ற கருணாநிதியின் வார்த்தை விளையாட்டைவிட “ரெட்ட எலெய பசுவும் கன்னும் மேய்ஞ்சுடுச்சி” என்ற சராசரிக் குடிமகனின் இளக்காரம்தான் எனக்குச் [...]

    Read more →

    சிற்றலையில் இனவெறி.

    by  • October 28, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    நான் படிக்கும்பொழுது (1984ல் என்று நினைக்கிறேன்) சிற்றலையில் பன்னாட்டு வானொலிகளையும் கேட்கத் தொடங்கினேன். அப்பொழுது கும்பகோணம் போன்ற சிறிய நகரத்தில் எங்களுக்கு உலக நடப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள அது மிகவும் உதவியாக இருந்தது. முதலில் எல்லோரையும் போல BBC, Voice of America என்று தொடங்கிய ஆர்வம் விரைவில் Radio Netherlands, Radio Veritas (Phillipines) என்று விரிந்து பின்னர், இரண்டு பாண்ட் நெல்கோ டாபி ரேடியோவைப் பிளந்து அதில் இருக்கும் Tank Capacitorஐத் திருகுதல், பின்னர் [...]

    Read more →

    விதிகள் – மீறுபவர்களுக்கா

    by  • October 27, 2003 • பொது • 0 Comments

    சில நாட்களுக்கு முன்னால் இந்திய அணுசகதித் துறை (அது என்னமோ தெரியவில்லை எழுதும்போதெல்லாம், அணுசகதித் துறை என்றே விழுகிறது. என்னுடைய விசைப்பலகைக்கு அசது – இதுகூட கிட்டத்தட்ட அசடு போலத்தான் இருக்கிறது- வின் உண்மையான சொரூபம் தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்). பற்றி எழுதினேன். இன்றைக்கு நான் வேலை பார்த்தபொழுது நடந்த ஒரு சுவாரசியாமான சம்பவம் பற்றி;

    Read more →

    100th Comment

    by  • October 26, 2003 • பொது • 0 Comments

    My blog has received 100th comment (From Mr. Thangamani). There are 76 blogs here. I started this with a lot of skepticism. But sustained to come this far. One of the driving factors is the feedback. I thank everyone one who reads my blog and take time to express your opinion about my opinion on [...]

    Read more →

    வருங்காலம்

    by  • October 25, 2003 • பொது • 0 Comments

    இன்று கனடாவில் வசிக்கும் இலங்கை பட்டதாரிகள் சங்கமும், இலங்கைத் தமிழர் பெற்றோர் சங்கமும் இணைந்து நடத்திய ஒரு நாள் பட்டறையில் கலந்துகொண்டேன். இது பள்ளியை விட்டு பல்கலைக்கழகம் சேர இருக்கும் மாணவர்களுக்கான நிகழ்வு. இந்நிகழ்வில் பங்காற்றிய ஒரே இந்தியத் தமிழன் நானாகத்தான் இருந்திருப்பேன்.

    Read more →

    தேடுங்கள் தரப்படும்.

    by  • October 24, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    அமேசான்.காம் இன்றைக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது. அமேசானின் வலைத்தளத்தில் கிடைக்கும் புத்தங்களின் உள்ளே இருக்கும் வரிகளை இனிமேல் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.

    Read more →

    இரானில் இந்திய அணுசக்தி வ

    by  • October 23, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வந்த செய்தியின்படி, இந்திய அணுசக்தித்துறையில் வேலை செய்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி முனைவர் ஒய்.எஸ்.ஆர்.பிரசாத் என்பவர் தனது ஓய்விற்குப்பிறது இராக்கில் பணி மேற்கொண்டார் என்றும் இது கவலையைத் தருகின்றது என்றும் கூறுகிறார்கள்.

    Read more →