Archive for September, 2003

வார்த்தை விளையாட்டு.

நிர்வாகச் சந்திப்புகள், சந்தை அலசல், வரவுசெலவுக் கணக்கு என்று ஒவ்வொரு முறையும் சந்திப்புகளுக்கு உள்ளாகும்பொழுது “பூமியில் மானிட ஜென்மம் எடுத்த பாவம் என்ன?” என்று என்னையே நான் நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக எங்கள் மார்க்கெட்டிங்க் மீட்டிங். நான் வேலை செய்வது முற்றிலுமான ஒரு ஆராய்ச்சி நிறுவனம், இதற்கு மார்க்கெட்டிங்க் மண்ணாங்கட்டி என்ன வேண்டிக்கிடக்கிறது. மிகச் சிறிய எங்கள் அலுவலகத்தில் என்னையும் சேர்த்து ஏழு விஞ்ஞானிகள். எங்களுக்கு மேலாளராக இன்னொரு விஞ்ஞானி (இவர் ஆய்வகத்தில் உள்ளே நுழையமாட்டார்). எங்களை [...]


ஜப்பான் ஆங்கிலம்.

ஜப்பானில் வசித்த போது கண்களில் பட்ட ஆங்கில அறிவுப்புகளில் சில;
1. நான் போனவுடன் எனக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கண்டு தலை சுற்றியது. முக்கிய காரணம்,
The office secretary is your help. Please use her freely.


தமிழ் கற்றுக் கொள்ளுங்கள

குர்தாஸ், ஷிபான் வகைகளுக்கு இணையாக கிரேப் ரகங்களை அதிகம் பயன்படுத்தலாம். இது ஷிபானை விட கொஞ்சம் ‘திக்’காக இருக்கும். இதில் சில்க் மாதிரி எம்ப்ராய்டரி, மிரர் ஒர்க் பண்ணிய டாட்ஸ், சாரீஸ் வெரைட்டிகள் யூத் மத்தியில் பிரபலம்.
சம்மர் காலங்களில் ஆர்தன்ஸா காட்டன் ரகங்களையும், வின்ட்டர் சமயங்களில் சில்க், லெதர் மெட்டீரியல்களையும் பயன்படுத்தலாம்.


மின்தாள்களும் தாள்திரைகī

இன்றைக்கு Nature என்ற முன்னனி அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரை என்னைக் கவர்ந்திழுத்தது. சாதாரண காகிதத் தாளை ஒத்த அமைப்பில் கணினி (மற்றும் பிற மின்சாதனங்களுக்கான) விழியத் திரை இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது.


மைக்ரோஸாப்ட்டின் அரட்டை 

நேற்றைய இந்திய அரசாங்கத்தின் யாகூ குழுமம் தடையின் சூடு தணிவதற்குள் இன்று இணையத்தில் இன்னொரு சேவை நிறுத்தச் செய்தி வெளியாகியிருக்கிறது. வடஅமெரிக்கா, ஜப்பான் தவிர உலகெங்கிலும் தன்னுடைய (இலவச) அரட்டை சேவையை (chat) நிறுத்தப் போவதாக மைக்ரோஸாப்ட் அறிவித்துள்ளது. இலவசச் சேவை நிறுத்தம் என்பதுதான் எனக்கு முக்கியமான விஷயமாகப்படுகிறது.


யாகூ குழுமங்களை இந்திய அர

இரண்டு நாட்களுக்கு முன் சிறுவனாக இருந்தபோது என்னைத் தேடிவந்த சிஐடி போலீஸைப் பற்றி எழுதியிருந்தேன். இப்படியெல்லாம் இன்னும் நடக்கிறதா என்று ஒன்று இரண்டு நண்பர்கள் கேட்டிருந்தார்கள்.
இன்று காலை பல்வேறு யாகூ குழும நண்பர்கள் இந்தியாவில் குழுமங்களின் வலைத்தளங்களைக் காணமுடியவில்லை என்று தெரிவித்தனர். பத்திரிக்கை செய்திகளைப் பார்க்கும் பொழுது கைன்ஹ்உன் எனும் மேகாலயப் பிரிவினைவாதிகளின் குழுமம் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாகவும், இதனை இந்தியர்கள் கண்களிலிருந்து மறைக்கவே இந்த விளையாட்டு என்றும் தெரியவருகிறது. உதாரணத்திற்கு, தி ஹிந்துவில் வந்துள்ள [...]


என்னைத் தேடிய இரகசிய போலீ

{நேரடியாக விஷயத்துக்கு வந்த இரகசிய போலீஸ் என்னிடம் கேட்டது, “தம்பி நீங்க கம்யூனிஸ்டா, நக்ஸலைட் தொடர்பு உண்டா?”}
அம்மாவின் முகத்தைப் பார்க்கிறேன். அசாத்திய பீதி. வெளிறிப் போயிருக்கிறது. அம்மா நிறைய மொழிபெயர்க்கப்பட்ட வங்காளக் கதைகளைப் படித்திருக்கிறாள். அதிலெல்லாம் கிட்டத்தட்ட இப்படித்தான் வரும். கீழ் மத்தியதரக் குடும்பம், அழகான சிறுகூட்டைப் போன்ற வீடு. அந்த வீட்டில் ஒரு விடலை கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு கூடு சின்னாபின்னமாகும். அது போன்ற கதைகளை டஜன் கணக்கில் படித்திருந்ததால் போலீஸ்காரர் கேட்டவுடன், அந்தக் கதைகளில் [...]


என்னைத் தேடிய இரகசிய போலீ

{கும்பகோணத்தில் “தட் பாவம் கைன்ட் ஆ·à®ªà¯ கை யார்” என்று தற்கால (பாய்ஸ் திரைப்பட நாயகியரை ஒத்த) பெண்டிர் வர்ணிக்கத்தக்க ஒரு நான்-டிஸ்கிரிப்ட் விடலையின் வீட்டிற்கு அசந்தர்ப்பமாக வந்த சிஐடி போலீஸ்காரர் அவனைப் பார்த்து “வாங்க தம்பி, நீங்கதான் வெங்கட்ராமனா?” என்று கரிசனமாகக் கேட்டார்}
“இல்லீங்க எம் பேரு வெங்கட்ரமணன்” அடியேன்.
“டேய், துக்கிரித்தனமா எதித்துப் பேசாம அவர் கேக்கறதைச் சொல்லேண்டா. வந்ததுலேந்து ஒன்னுமே சொல்லமாட்டேங்கறார், பக் பக்ங்குகறது. என்ன பண்ணி தொலைச்சியியோ” – அடியேனின் மரபணுக்களில் தோராயமாகக் கால்பங்குக்குச் [...]


என்னைத் தேடிய இரகசிய போலீ

(சம்பவங்கள் சற்றும் கலப்பில்லாத அக்மார்க் சரித்திரப் பதிவு)

கும்மோணம் காவேரிக் கரை, டபீர் கீழத்தெரு-பிள்ளையார் கோவில் தெரு இவற்றுக்கிடையே உள்ள சந்தியைத் தவிர உள்ளூரில் அதிகம் தெரியாத, அரசாங்கப் பள்ளிக்கூடத்து வாத்தியரின் மூன்றாவது மகன், கிளாஸில் ரேங்க் தவறிப் போனால் மூலையில் உட்கார்ந்து அழும், தெரு கிரிக்கெட் டீமில் ஏழாவது டவுன் பாட்டிங், எப்பவாவது ஆ·à®ªà¯ பிரேக் பவுலிங், என்று வாழ்ந்த பத்தொன்பது வயது விடலைச் சிறுவனுக்கு, நினைவில் வைத்திருந்து எழுதத்தக்க என்ன அனுபவங்கள் நேரும்?
1. [...]


Bhupen Khakhar

The preceeding entry about Bhupen Khakhar was started about 10 days ago and completed today, thanks to ira. murugan’s posting in raayar kaapi klub.