MP3 is no sin – 2
MP3 is no sin என்று சில நாட்களுக்கு முன் குறித்திருந்தேன். அது பற்றி வந்த விமர்சனங்களில் ஒன்று, “பழைய பாடல்கள் வழக்கொழிந்து போகின்றன, அவற்றைத் தூசி தட்டியெடுத்து எம்பி3 ஆக மாற்றி வெளியிடுவது மாபெரும் சேவை என்று கூறினாய். ஆனால் அந்தப் பழையபாடல் வைத்து எம்பி3 பாவமான செயல் அல்ல என்று எப்படி நீட்டிக்கமுடியும். புதிய பாடல்களை டிஜிட்டல் வடிவில் பரப்புவதைப் பற்றிய உன் கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டது. சில விடைகள்;
1. என்னுடைய முதல் குறிப்பின் அடிப்படை நோக்கம் இதுதான். வட அமெரிக்கவின் இசைவணிகர்கள். எம்பி3 வடிவில் இசை கேட்பவர்கள் என்றாலே பாவிகள் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சிலநாட்களுக்கு முன் என் வீட்டில் நடந்த சம்பவம் இது, என்னுடைய நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள். ஒரு மாலையில் அவர்களை என் வீட்டிற்கு அழைத்தபொழுது அவர்களிடம் நான் பேச்சுவாக்கில் எம்பி3ன் பெருமைகளை விவரித்துக்கொண்டு போனேன். அதைச் சேமிக்க அதிக இடம் தேவையில்லை. வீட்டின் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இசைக்கோப்புகளை வேறொரு அறையில் இசைக்கவல்ல mp3-player சந்தையில் கிடைக்கிறது, எனவாகப் பல பெருமைகளை நான் கண்கள் விரிய சொல்வதைப் அந்தப் பெரியவர்கள் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின்னர் நான் உள்ளே சென்ற சமயம் பார்த்து, என் மனைவியடம் “உன் வீட்டுக்காரரை ஜாக்ரதையாக இருக்கச் சொல்லு, இப்பல்லாம் கம்யூட்டர்ல பாட்டு கேக்கரவங்களை போலிஸ் புடிக்குதாம். அவங்க இன்டெர்நெட் கம்பெனிகள் மூலமா வீட்ல இருக்கற கம்யூட்டர் எல்லாத்தையும் சோதனைபோட்டு பாக்கறாங்களாம். எதுக்கும் அவரை ஜாக்ரதையா இருக்கச் சொல்லு. இந்த ஊர்ல வந்து தங்கிகிட்டு எதுக்குப் பொல்லாப்பு” என்று கிசுகிசுத்திருக்கிறார் அந்த அம்மா. இப்படி பயத்தைப் பரப்புதல் மூலமாக பலரையும் தொழில்நுட்பத்தை விட்டு ஓடச்செய்து வருகிறார்கள். இதே இசைவணிகர்கள்தான் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக minidisc என்று சொல்லப்படும் இசைவடிவத்தை அமெரிக்கக் கண்டத்தை அண்டவிடாமல் காத்திருக்கிறார்கள். (இந்த minidisc வடிவம் சோனி கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எம்பி3 வடிவம் பிரபலமாவதற்கு முன்னரே டிஜிட்டல் வடிவத்தில் இசையை நகலெடுக்க மினிடிஸ்க் உதவியாக இருந்தது). Fear Psychosis எனப்படும் பீதியைப் பரப்புவதில் இசைவணிகர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள். அந்த மாயையைப் போக்கவே எம்பி3 ஒரு பாவமல்ல என்று எழுதினேன்.
தொடர்ந்து, வரும் நாட்களில்…
Popularity: 3% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.












MP3 is no sin and americans are capable of creating such a psychosis.they would prefer some compnay monopolising everythng , even if it is a music in public domain.i hope you know about the minitel in france which served their needs but had to be discarded with the advent of internet