Archive for August, 2003
தமிழர்களின் நகைச்சுவை உண
தமிழர்களின் நகைச்சுவை உணர்வு எப்பொழுதும் கேள்விக்குறியாக்கப்பட்ட விஷயமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அன்றும் இன்றும் என்றும் வார்த்தையாடல் கோமாளித்தனங்களே பெரிதும் நகைச்சுவையாக இரசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஆனந்த விகடன் பாணி நகைச்சுவை;
அவன் ஏன் பேப்பர்ல ‘ஆசிரியர்’ ன்னு பென்சிலால அழுத்தி எழுதிக்கிட்டு இருக்கான்?
To get a good impression of the teacher
–
டேய், எங்கடா போற?
மாவு அரைச்சுகிட்டு வரத்துக்கு!
அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு, ஒளிஞ்ச் போற?
எங்கம்மா நைஸா அரைச்சுகிட்டு வரச்சொன்னாங்க
—
இப்படியாக எல்லைகடந்த வார்த்தையாடல்களே நகைச்சுவை என்று பெரிதும் இரசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. [...]
MP3 கோப்புகளை அடையாளம் காணல்
அமெரிக்க பாடல் பதிவோர் குழுமம் (RIAA – தமிழிலும் ரியா என்றே வசதிக்காக எழுதலாம்), MP3 பாடல்கள் எங்கிருந்து வந்தன என்பதை அடையாளம் காட்டமுடியும் என்று சொல்லுகிறது. இது பித்தம் தலைக்கேறியவன் உளறுவதைப் போலத்தான் இருக்கிறது.
எம்பி3 பாடல்களை அலசி ஆராய்ந்து அது தனியருவர் அவருடைய சொந்த இசைத்தட்டை அவரே எம்பி3 ஆக மாற்றியதா (சட்டப்படி அனுமதிக்கப்பட குற்றமற்ற செயல்) அல்லது அவர் வேறு ஒருவரிடமிருந்து (குறிப்பாக நேரடி வலையிறக்க நிரலிமூலம் peer-to-peer p2p) சுட்டதா என்பதைத் தன்னால் [...]
பிபிஸி ஆவணங்கள் – பொதுப்பா
பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனம் (British Broadcasting Corpotion) தனது ஆவணங்களை பொதுப்பார்வைக்குத் திறக்கப் போகிறது. BBC Creative Archive என்று பெயரிடப்பட்ட இந்த சேவை இணையத்தின் வழியே பிபிஸியி ஒளி/ஒலி ஆவணங்களை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படப் போகிறது. உலகிலேயே அதிக வானொலி தொலைக்காட்சி ஆவணங்களை உள்ளடக்கிய மாபெரும் காப்பகம் அவர்களுடையது. இது பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கப்போவது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. வணிக இலாபங்கள் நோக்கங்கள் இல்லாத எந்தப் பயனுக்கும் இந்தக் காப்பகத்தை யாரும் இணையத்தின் [...]
அலைபாயும் அறுபது -2
இது என்னுடைய பழைய வலைக்குறிப்பின் எதிரொலி தொடர்பானது.
என்னுடைய குறிப்பின் அடிக்கருத்தை நண்பர் வாசு தவறவிட்டிருக்கிறார். வாசு, நீங்கள் உங்களுடைய வயது முதிர்ந்த நண்பர்கள் வட அமெரிக்காவில் இன்னும் அல்லாடிக்கொண்டிருப்பதையும் அதே போல் இந்தியப் பெற்றோர்கள் வேண்டிய எல்லாம் பெற்று நிறைவடைந்த வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருப்பதையும் சுட்டியிருக்கிறீர்கள். நன்றி, நானும் ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் என்னுடைய குறிப்பின் முக்கிய பாகம் (எனக்கு வேதனை தரும் விஷயம்) நம்மூர் இளைஞர்களும் இளைஞிகளும்(?) தங்களுடைய மிகவும் செழிப்பான, பிறருக்கும் தமக்கும் உபயோகமாக [...]
2003 தமிழ் இணைய மாநாடு – சென்னை
கடந்த வருடம் இதே சமயத்தில் சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். இவ்வருடம் பொருளாதார மற்றும் வேலை நிர்ப்பந்தங்களின் காரணமாக சென்னை மாநாடு கனவிலும் கூட சாத்தியமில்லாமல் போய்விட்டது.
நண்பர் பத்ரி சேஷாத்ரி மாநாட்டு நடப்புகளை அரங்கினுள் இருந்தபடியே தனது மடிக்கணினி மூலம் உடனடியாக வலைப்பதிகிறார். மிகவும் நல்ல முயற்சி. கடந்த மாநாட்டில் லினக்ஸ் வளர்ச்சிகள் பற்றியும், லினக்ஸ் கொண்டு தமிழக/ஈழ/மலேஷியப் பள்ளிகளில் எப்படி விலைகுறைந்த கணினி ஆய்வங்களை அமைக்கலாம் என்பது பற்றியும் இரண்டு [...]
New 20 GB MP3 player from Toshiba
எடுத்துச் செல்லத் தகுந்த கடின வட்டு அடிப்படையிலான எம்பி3 இயக்கிகளே, இசையின் எதிர்காலம் என்று தோன்றுகிறது. கடந்த வருடம் ஆப்பிள் தனது ஐபாட் இயக்கியை அறிமுகப்படுத்தி இசை உலகில் பெரும்புயலைக் கிளப்பியது. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன் அது ஐபாடில் இறக்கிக் கொள்ள வசதியாக எம்பி3 கோப்புகளை தனது இணையதளத்தின் மூலம் விற்கத் தொடங்கியது. பொதுவில் இத்தகைய கைக்கடக்கமான, தொழில்நுட்பத்தில் உயர்ந்த சாதனங்களை ஜப்பானிய நிறுவனங்கள்தான் அறிமுகப்படுத்துகின்றன. இந்த வியாபாரத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஆப்பிள் [...]
காலம் இதழ் – 18 (தொடர்ச்சி)
{இதன் முதல் பாகம்}
இந்த நேர்காணலில் பல விநோதக் கருத்துகளும் தென்படுகின்றன. உதாரணமாக,
{மேற்கோள்}
கேள்வி: உலகமயமாக்கல் என்பது தவிர்க்கமுடியாததே என சில மேலைதேய அறிஞர்கள் கருதுகிறார்கள். … இதிலே உலகமயமாக்கல் மூலம் தலித்துகள் பொருளுற்பத்தியில் நேரடியாகப் பங்கு கொண்டு ஓரளவு பொருளியல் முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்தலாம் என்றும் சில தலித் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: நான் ‘டங்கல் என்னும் நயவஞ்சகம் என்றொரு சிறு நூலை வெளியிட்டுள்ளேன். … இந்தியாவினுள்ளே கணிப்பொறி வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் [...]
காலம் – இதழ் 18
கனடாவிலிருந்து வெளிவரும் காலாண்டிதழான காலம் இதழ் 18 இவ்வாரம் படிக்கக் கிடைத்தது. இதுநாள் வரை எந்தவொரு நிலைகளையும் சாராமல் வெளிவந்து கொண்டிருந்த காலம் இவ்விதழில் சறுக்கியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இரண்டு படைப்புகளை முன் வைத்தே நான் இப்படிக் கூற வேண்டியிருக்கிறது. முதலாவது, பேராசிரியர் தொ. பரமசிவனுடனான ஷோபாசக்தியின் நேர்முகம். இரண்டாவது சிவத்தம்பி அவர்கட்குப் பணிவான வேண்டுகோள் என்று தலைப்பிடப்பட்ட வரனின் கடிதக் கட்டுரை.
பின்னது, சிவத்தம்பியின் ‘நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம் என்ற புத்தகத்தில் தவறுகள் மலிந்துள்ளதாகவும் அதனை அவர் விற்பனையிலிருந்துத் [...]
அலைபாயும் அறுபது
சென்ற சனிக்கிழமையன்று மின்சார இழப்பினால் வீட்டில் உட்கார முடியாமல் குடும்பத்தோடு டொராண்டோவிற்கு வடக்கே 100 கி.மி. தொலைவிலுள்ள சிம்கோ ஏரிக்குச் சென்றிருந்தேன். நல்ல வெயிலில் வந்திருந்தவர்கள் மின்சாரம், இணையம், மின்னஞ்சல் போன்ற கவலைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு ஏரிக்கரைக்கு வந்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் நீரில் மகனுடன் ஆடிக் கழித்தபின் உட்காரும் பொழுது அருகில் கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கும் ஒருவர் வந்தார். பார்ப்பதற்குச் சராசரி குடிமகனைப் போலிருந்த அவர், அடுத்த பதினைந்து நிமிடத்தில் கமக்கட்டில் வைத்திருந்த மாபெரும் பையைத்திறந்து [...]
நாஞ்சில் நாடனின் மண்ணுள்
சில நாட்களுக்கு முன்னால்தான் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் கவிதைத் தொகுப்பான மண்ணுள்ளிப் பாம்பு வாசித்தேன். என்பிலதனை வெயில்காயும், சதுரங்கக் குதிரை, எட்டுத்திக்கும் மதயானை போன்ற கதைகளினால் தற்கால இலக்கியத்தில் தனியிடம் பெற்றவர் நாடன்.











