Archive for July, 2003

ஸ்கோ-ஐபிஎம் லினக்ஸ் வழக்க

“என்னப்பா, blog எழுது ஆரம்பிச்சு பத்து நாளாப்போது, இன்னும் லினக்ஸ் பத்தி எழுதல நீ?”, என்று நண்பர் ஒரு அங்கலாய்த்துவிட்டார். அதனால் இதோ;
இப்பொழுது தகவல் நுட்ப வியாபார உலகம் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருப்பது ஸ்கோ நிறுவனம், ஐபிஎம் மீது தொடுத்திருக்கும் நம்பிக்கை விரோதக் குற்றச்சாட்டு. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. முதலில் ஸ்கோ என்பது யார் என்று பார்க்கலாம். ஸ்கோ யுனிக்ஸ் இயக்குதளத்திற்கு சட்டபூர்வ சொந்தக்காரர். யுனிக்ஸ்தான் முன்னோடி. பல்பயணர் (multiuser), பல்செயல்பாடு (multitasking) இயக்குதளம். இணையத்தின் ஆதாரமான [...]


A Melody Regained

cilappathikaaram (Epic of the Anklet) – kANalvari
IllangovadikaL
For no reasons, some music get etched in memory. Some melodies keep haunting every now and then, even though it is ages since last listened. One of those rare gems is a movie song “thingaL malai veNkudaiyAn”. I remember vividly that I first listened this song [...]


கனடாவின் இரத்ததானக் கொள்

சில நாட்களுக்கு முன் டொராண்டோ பல்கலையில் நடந்த இரத்ததான முகாமிற்கு தானமளிக்கச் சென்றிருந்தேன். 1990 முதல் 1996 வரை, இந்தியாவில் தொடர்ந்து வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை இரத்ததானம் செய்துவந்தேன். இதுதவிர IISc-ல் படிக்கும் பொழுது அவரசங்களுக்கு இரத்ததானிகளை ஏற்பாடு செய்து உதவும் அமைப்பில் முக்கிய அங்கத்தினனாகவும் இருந்தேன். இந்தியாவை விட்டு வெளியே வந்தபின் இரத்தமளித்ததே இல்லை. பொதுவில் யாரைச் சென்றுபார்ப்பது, முகாம் எங்கே நடக்கும் போன்ற விபரங்கள் உள்ளூர் மொழி தெரியாததால் மத்தியப் பிரதேஷிலும், [...]


ஒற்றைத் தொலையியக்கி உலகம

குருண்டிக், சோனி, பானாஸோனிக், ஷார்ப், டெக்ஸாஸ் இன்ஸ்ருமென்ட்ஸ் உள்ளிட்ட எட்டு மாபெரும் நுகர்வோர் மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து Home Audio Video Interoperability (HAVi) protocol ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளன. இது உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்கு சாதனங்கள் தயாரிப்பாளர்களால் அவர்களின் வேறுபட்ட தயாரிப்புகள் ஒன்றிணைந்து இயங்க வழிவகுக்கும். உதாரணமாக, என்னுடைய வீட்டில், தொஷீபா தொலைக்காட்சி, பானஸோனிக் இல்லரங்கு (home theatre), JVC ஒலிக்கருவி இவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு செயல்படுகின்றன. சில சமயங்களில் இவற்றுடன் [...]


புலிச்சவத்தில் கால்பதிகĮ

ஈராக் கொடுங்கோலர் சதாம் உசேனின் வாரிசுகள் அமெரிக்க வீரர்களால் வீழ்த்தப்பட்டனர். வீழ்ச்சி சாதாரணமாக ஓடி ஒளிபவர்களுக்கு நேர்வதுபோலத்தான் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு, பலத்த ஆயுதங்கள் கொண்டு அழித்தொழித்திருக்கிறார்கள்.
அழித்தொழித்த அடுத்த நிமிடமே அச்சவங்களின்மீது ஏறி நின்று நர்த்தனமாடியிருக்கிறார்கள். கொல்லப்பட்ட உதய், குவெஸேய் உசேன்களின் புகைப்படங்கள் அமெரிக்க அரசாங்க செய்தி நிறுவனத்தின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தின் தொழில்நுட்ப வேகத்துடன் அடுத்த நொடியிலேயே அவை பாக்தாத், பாக்கிஸ்தான், பஹ்ரைன், பாஸ்டன் போன்ற இடங்களில் சராசரி குடிமகன்களின் [...]


கவிஞர் மாலதி மைத்ரி

சமீபத்தில் கவிஞர் மாலதி மைத்ரியின் சங்கராபரணி எனும் கவிதைத் தொகுப்பு படிக்கக் கிடைத்தது. இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இன்னும் நிறைய எதிர்பார்க்கத் தூண்டுகிறது. தொகுதியில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் ஒன்று;
சங்கராபணி – மாலதி மைத்ரி
அதனதன் உலகம்
நினைவுகளை கொத்திக் கொத்தி
தோண்டி எடுக்கப்பட்ட புழுவாய்
மரங்கொத்தியின் அலகில்
சிக்கித் தவித்து
சிறு காற்று கிளை அசைக்க
பிடிநழுவி பட்டாம் பூச்சியாய்
திசைவிலகும் நீ
தழும்பாய் வளர்கிறது மரம்
இரை ஏமாற்றிய பசியுடன் பறவை
வானத்தை தன் சிறகுகளில்
சுருட்டி அமர்ந்திருக்கிறது
நீ எங்கு போய்விடுவாய் என்று
பறவையின் பார்வைக்கு அப்பால்
பாறைக்குள் விரிகிறது
தேரையின் இன்னும் [...]


MP3 is No Sin

உலகெங்கும் இப்பொழுது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம்; இணையத்தின் வழியே பாடல்களைப் பகிர்ந்து கொள்வது. MP3 – தொழில்நுட்பம் வளர்ந்த உடன், கிட்டத்தட்ட 460 மெகாபைட் தேவையாக இருந்த ஒரு பாடலுக்கு 4 மெகாபைட் போதுமானதாக மாறிவிட்டது. இதனுடன் கூடவே, அதிவேக வலை இணைப்புகளும் பெருகியது, குறுவட்டுகளின் விலை வீழ்ச்சியடைந்ததும் ஒருவருக்கொருவர் தங்களிடமுள்ள பாடல்களைப் பகிர்ந்து கொள்வது பெருகிவிட்டது. இதன் வேகத்தை Napster, Kazza, DC++ போன்ற நேரடிப் பரிமாறிகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன. இது இசைத்தட்டுக்கள் [...]


Tamil Unicode Test

தமிழில் எழுத முடிகிறது. இது தலையைச் சுற்றிக் காதைத் தொடும் முயற்சி. முதலில் சுவடியில் தகுதரத்தில் எழுதி, அதை வெட்டி ஜாவா யுனிகோட் மாற்றியில் ஒட்டி மாற்றினேன். பின், யுனிகோட் செய்தியை வெட்டி இங்கே ஒட்டியிருக்கிறேன். விரைவில் இதற்கு ஒரு நேரடி வழி கண்டுபிடிக்கவேண்டும். ஜாவா-வில் யுனிகோட் தமிழை நேரடியாக எழுதுவது சிரமம். (சிரமம் என்று இல்லை, அந்தச் செயலி அமைந்த முறை செவ்வனே இல்லை).
Blog-கிற்குத் தமிழில் வலைப்பூ என்று பெயரிடலாம் என்று சொல்கிறார்கள். வலை+பதிப்பு [...]