• மைக்ரோஸாப்ட் கறவை இயந்தி

    by  • December 25, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    அதனுடைய FAT கோப்பு அமைப்பிற்கு இனிமேல் பயனுரிமைக் கட்டணம் வசூலிக்கப்போகிறது . ஆதிகாலத்தில் பேசிக் என்ற மொழியில் எழுதப்பட்ட FAT கோப்புகள் சேமிக்கும் முறை மைக்ரோஸாப்டால் எம்எஸ் டாஸின் அடிப்படையில் அமைந்த வின்டோஸ் 3.11, 95, 98, எம்.ஈ போன்ற இயக்கு தளங்களில் கோப்புகளை ஒழுங்கமைக்கும் முறையாக மைக்ரோஸாப்டால் பயன்படுத்தப்பட்டது. பின்னர் வின்டோஸ் என்.டி போன்ற சக்தி வாய்ந்த இயக்கு தளங்கள் உருவாக, புதிதாக NTFS என்ற கோப்பு அமைப்பு தயாரிக்கப்பட்டது. இது என்.டியின் தொடங்கி, 2000, எக்ஸ்பி, 2003 உள்ளிட்ட இயக்குதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோஸாப்ட் எம்.ஈ-க்குப் பிறகு டாஸ் அடிப்படையிலான இயக்குதளங்களை முழுவதுமாகக் கைவிடுவதாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில் ·à®ªà¯‡à®Ÿà¯ அமைப்பு பின்-ஒப்புமைக்காக மாத்திரமே பயன்படும் என்று பலரும் நினைத்திருந்தார்கள் (மைக்ரோஸாப்ட் உட்பட). ஆனால் பெருகிவரும் மின்னணுச் சாதனங்களான டிஜிட்டல் காமெரா, எம்பி3 இயக்கிகள், யுஎஸ்பி நினைவுக் கருவிகள், எனப் பலவற்றிலும் ·à®ªà¯‡à®Ÿà¯ அமைப்பு கையாளப்பட்டது. இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு, மைக்ரோஸாப்டின் அனைத்து இயக்கு தளங்களிலும் ·à®ªà¯‡à®Ÿà¯ படிக்கும் வசதி உண்டு, தவிர மக்கின்டோஷ், லினக்ஸ், போன்ற இயக்குதளங்களிலும் ·à®ªà¯‡à®Ÿà¯ அமைப்பில் சேமிக்கப்பட்ட கோப்புகளைப் படிக்கவியலும். NTFS, ext2 (linux) போன்றவற்றில் கட்டுப்பாடுகள் அதிகம். இந்த நிலையில் ஒரு டிஜிட்டல் காமெராவை யூஎஸ்பியில் கோர்த்துவிட்டு உடனே கோப்புகளைத் திறக்க முடியாது. எனவே பலரும் FAT அமைப்பைக் கையாளத் தொடங்கினார்கள். திடீரென, மைக்ரோஸாப்ட் எங்கள் கண்டுபிடிப்பான FAT அமைப்பைப் பயன்படுத்துபவர்கள் எல்லோரும் எங்களுக்குக் காப்புரிமைத் தொகை தரவேண்டும் என்று சொல்கிறது. அவர்கள் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கேடà¯]
    ]>

    0 Responses to மைக்ரோஸாப்ட் கறவை இயந்தி

    1. முத்த&#300
      February 11, 2004 at 3:18 pm

      காய்ந்த சாணி அருமையான உதாரணம் .. பார்க்கலாம் மைக்ரோசாப்டின் ஆட்டம் எத்தனை நாள் என்று ..

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *