• தமிழ் கற்றுக் கொள்ளுங்கள

    by  • September 26, 2003 • பொது • 0 Comments

    குர்தாஸ், ஷிபான் வகைகளுக்கு இணையாக கிரேப் ரகங்களை அதிகம் பயன்படுத்தலாம். இது ஷிபானை விட கொஞ்சம் ‘திக்’காக இருக்கும். இதில் சில்க் மாதிரி எம்ப்ராய்டரி, மிரர் ஒர்க் பண்ணிய டாட்ஸ், சாரீஸ் வெரைட்டிகள் யூத் மத்தியில் பிரபலம்.

    சம்மர் காலங்களில் ஆர்தன்ஸா காட்டன் ரகங்களையும், வின்ட்டர் சமயங்களில் சில்க், லெதர் மெட்டீரியல்களையும் பயன்படுத்தலாம். மெக்ஸிகன் டாப்ஸ் வகைகள் இன்றைக்கு மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் இரண்டு, மூன்று லோயர்களில் பிரில்ஸ் வைத்த வெரைட்டிகள் அதிகம் உலாவிக்கொண்டிருக்கின்றன.

    சாரீஸ்களில் குஜராத்தி, பார்ஸி ஸ்டைல் பிரபலம்.

    —-
    இது இந்த வீக் குமுதத்தில் (தமில்நாட்ல நம்பர் ஒன் வீக்லி மாகஸைன்) பப்ளிஷ் ஆயிருக்கும் ஆர்ட்டிக்கிள்லேந்து ஒரு கட்டிங்க்.

    இதுக்கு மேல் எழுத எனக்குத் தெம்பில்லை.

    0 Responses to தமிழ் கற்றுக் கொள்ளுங்கள

    1. Ramani
      September 27, 2003 at 4:23 am

      வெங்கட்,

      நான் முதன்முதலாக தமிழ் லினக்ஸ் மொழிபெயர்ப்பு முயற்சியில் ஈடுபட்டபோது தவித்துப்போய்விட்டேன். இரண்டு மூன்று வருடங்களாக அமெரிக்காவில் வேறு இருந்ததால் தெரிந்த கொஞ்சநஞ்ச தமிழ் வாரத்தைகளும் மறந்துபோனமாதிரி இருந்தது. அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக என் மனைவியின் உதவியுடன் தேறினேன். இப்போது என்னுடைய வலைப்பூவில் (http://silandhivalai.blogspot.com) முடிந்தவரை ஆங்கிலம் கலக்காத தமிழில் எழுத முயல்கிறேன். இந்தியாவில் உள்ள என் தம்பி என் வலைப்பூவை படித்துவிட்டு என்ன இப்படி கடுமையான தமிழில் எழுதியிருக்கிறாய்? என்று கேட்கிறான்!!

      அன்புடன்,

      ரமணி

    2. வாசன்
      September 30, 2003 at 9:32 pm

      குமுதம் என்றில்லை,ஒரு காலத்தில் ஒழுங்காய் இருந்த கல்கியும் இந்த

      பண்ணித்தமிழை அவப்போது எடுத்தாள்கிறது, அல்லது வெளியிடப்படும்

      ஆக்கங்களில் இருப்பனவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

      தமிழ்நாட்டு குரங்கு கூட பண்ணித்தமிழ்தான் பேசுகிறது!

      09/21 கல்கியில்,பா.ராகவன் என்பவரின் மெல்லினம் எனும் தொடரில்

      வரும் குரங்கு பாத்திரம் சொல்கிறது..

      ” பின்னே? லார்ட் ஆஞ்சநேயா,

      எங்க பாஸ்!.”என்று பெருமையுடன் சொன்னது அந்தக் குரங்கு..”

      இராமபக்தன் எங்களுடைய தலைவர் எனச் சொன்னால் கல்கி விற்பனை

      குறைந்து போய்விடுமோ…?

    3. venkat
      October 1, 2003 at 4:58 pm

      vasan, I agree with you. These people say that they cater to the lowest common denominator and in the process, have lowered the LCD considerably :( . Only a miracle (something like a new editor for kumudam) can save this.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *