• என்னுடைய புதிய மேசைத்தளம

    by  • November 27, 2003 • அறிவியல்/நுட்பம் • 0 Comments

    litestep_thumb.png
    இன்றைக்கு என்னுடைய மடிக்கணினியில் litestep என்ற மேசைத்தளத்தை நிறுவினேன். இது விண்டோஸ் எக்ஸ்பியின் வழமையான மேசைத்தளத்தைத் தூக்கியெறிந்துவிட்டு முற்றாக மேலே வந்து உட்கார்ந்து கொள்கிறது. இதன் திரையோவியம் இங்கே. (தனி உலாவிப் பட்டியில் வரும்)

    இந்த மேசையில் எனக்குப் பிடித்த விஷயம் இதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். (வழக்கமாக கீழே இடது ஓரத்தில் குந்திக் கொள்ளும் Start பொத்தான் போய், நிரலிகளின் பட்டியல் எங்கு வேண்டுமானாலும் உடனே வரவழைத்துக் கொள்வதாக அமைந்திருக்கிறது. படத்தில் வலது பக்கம் வந்திருக்கும் பட்டியலைப் பாருங்கள்). கணக்கிலடங்காத சிறு பயன்கருவிகள் இருக்கின்றன. நாட்காட்டி, கடிகாரம், மின்னஞ்சல் நிலவரம், நுண்செயலியின் பளு, வலையோட்டம், கடினவட்டில் மீதமிருக்கும் இடம், இப்படி நிறையப் பயன்கருவிகளை எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ள முடிகிறது. வலது மூலையில் பட்டிகளுக்கு மேலாக வரும் கடிகாரம் மிகவும் அழகாக இருக்கிறது. கடிகாரத்தின் அருகில் விசையெலியைக் கொண்டு சென்றால் அதன் ஒளி மங்குகிறது. கடிகாரத்தின் ஊடே பட்டியில் இருக்கும் சமாச்சாரஙக்ளை கிளிக் செய்ய முடியும். இன்றைக்கு என்னுடைய அலுவலகம் முழுவதும் இதைப் பற்றித்தான் பேச்சு.

    என்ன இருந்தாலும் இது நான் பயன்படுத்தும் லினக்ஸ் கேடிஈ மேசைத்தளத்திற்கு அருகில் வரமுடியாது. இப்பொழுது சோதனையில் இருக்கும் பல நிரலிகள் லினக்ஸ் மேசைத்தளத்தை மிகவும் அழகாக ஆக்குகின்றன. இவற்றைப்பற்றி வரும் நாட்களில் எழுதுகிறேன்.

    சொல்ல மறந்து போனேனே, litestep க்னூ தளையறு மென்கலன் அனுமதியுடன் இலவசமாகக் கிடைக்கிறது.

    0 Responses to என்னுடைய புதிய மேசைத்தளம

    1. Kumaraguru
      November 28, 2003 at 1:20 am

      Have you tried XPde on linux? I didn’t find it interesting.

      I don’t know if i am qualified to say this..

      “மடிக்கணினி” seems to be a literal translation of LapTop. I believe the emphasis should be on the ‘mobile’ nature of the laptop rather than where they keep it(I’ve seen people placing their laptops on table for most of the time). It’s my humble opinion that ‘திரை பிம்பம்’ would be better than ‘திரையோவியம்’ for screenshot.

      I noted from the screenshot that you are using Merriam Webster Dictionary IE toolbar. There is a free desktop dictionary program called wordweb ( http://wordweb.info/free/ ) based on WordNet ( http://www.muselog.net/archives/000081.html )

    2. காசி
      November 28, 2003 at 9:08 am

      குமரகுரு,

      உங்கள் கருத்தைக் கொள்கை அளவில் நானும் ஒப்புக்கொள்கிறேன். அதாவது, சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பு செய்யாமல் பயன்கருதி செய்யவேண்டும் என்பதை. ஆனாலும், இங்கு மடிக்கணினி என்று சொல்லித்தான் ஆகவேண்டும். Mobile என்னும்போது Palm/iPAQ போன்ற கைக்கணினியும் அடங்கும். (எனக்கு தமிழில் பெயர் தெரியாத) Tablet PCயும் அடங்குமே! இவற்றை ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுத்த ‘மடி’ பயனாகிறது. மேலும், மடி ஒரு அருமையான சொல். ‘தொடை’ என்றெல்லாம் வைத்திருந்தால் இவ்வளவு நன்றாயிராது. இது எ.தா.அ.

      மேலும் ஒன்று. window என்பதற்கு பலரும் பலதை பயன் படுத்துவது போலத் தெரிகிறது. இந்தக் குறிப்பிலேயே வெங்கட் ‘பட்டி’ என்று சொல்கிறார். எனக்கு இது அவ்வளவு நிறைவாயில்லை. வேறு எங்கோ ‘சட்டம்’ என்று பார்த்ததாய் ஞாபகம். ‘சன்னல்’ நேரான, சொல்லுக்குசொல் மொழிபெயர்ப்பாயிருந்தாலும், அதுதான் சரியெனப் படுகிறது. தபால் அலுவலகம் போன்ற ஒரு அலுவலகத்தில் உள்ள ஒரே அறைக்குள் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட அலுவலர் சேவை அளிப்பர். பல சன்னல்கள் கொண்ட அந்த அறையில் இந்த சன்னல் ‘பதிவு அஞ்சல்கள்’, இன்னொன்று ‘தபால் தலைகள்’, வேறொன்று ‘சேமிப்பு கணக்கு’ என் பல சன்னல்களில் பல சேவைகள் கிட்டும். கணினியின் மேசைத் தளமும் அப்படித்தானே. இங்கு ஒவ்வொரு சன்னலில் நமக்கு ஒவ்வொரு வேலை நடக்கிறது. அப்படியானால் அதை ‘சன்னல்’ என்று சொல்வது சரிதானே.

      உங்கள் ‘திரைப் பிம்பம்’ திரையோவியத்தைவிட நன்றாகப் பொருந்துவதாக எனக்குப் படுகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *