• இஸ்ரேலின் புதிய நிறவெறிச

    by  • August 1, 2003 • பொது • 0 Comments

    இஸ்ரேல் பாரளுமன்றத்தில் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் இஸ்ரேலியரை மணந்துகொள்ளும் பாலஸ்தீனியருக்கு இஸ்ரேல் நாட்டில் இனிமேல் குடியுரிமை தரப்படமாட்டது. மிகவும் பிற்போக்கான இந்தச் சட்டம் முற்றிலும் மனித உரிமைகளுக்கு எதிரானது என்பதில் ஐயமில்லை. இதுநாள்வரை இஸ்ரேலியரை மணம் முடிக்கும் பாலஸ்தீனியர் வசிப்புரிமையை பெற்று இணைந்து வாழ்ந்து வந்தனர். இனி அது சாத்தியமில்லாமல் போயிருக்கிறது. இனிமேல் காஸாப்பகுதி அல்லது மேற்குக்கரை வாசியரான அராபியர்கள் ஒரு இஸ்ரேலியரை மணந்து கொண்டால் கணவன்-மனைவியர் பிரிந்தே வாழவேண்டும். அது மாத்திரமல்லாது அவர்கள் குழந்தைகளும் 12 வயதுக்கு வரும்பொழுது இஸ்ரேலியக் குடியுரிமையை இழந்து நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும்.

    கடந்த சிலவருடங்களாக இஸ்ரேல்-அராபியர் என அழைக்கப்படும் யூதரை மணந்துகொண்ட அராபியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களது வீதம் யூதர்களின் மக்கள்தொகை வளர்ச்சி வீதத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இது நாளடைவில் யூதர்களை இஸ்ரேல் நாட்டில் சிறுபான்மையினர் ஆக்கிவிடும் என்பது இஸ்ரேல் அரசாங்கத்தின் கவலை. இதைத் தடுக்கவே இந்தச் சட்டம் என அரசாங்கம் கூறுகிறது.

    இதைக்காட்டிலும் மோசமான நிறவெறிக் கொள்கை சமீபத்தில் ஏதுமில்லை. கருப்பர்களுக்கு உரிமை மறுத்த தென்னாப்பிர்க்காவின் பிற்போக்குக் கொள்கையை ஒத்தது இது. இது இந்த நூற்றாண்டிலும் அரசு ரீதியான நிறவெறிக் கொள்கைகள் இன்னும் முற்றாக ஒழிந்துவிடவில்லை என் நிரூபிக்கிறது.

    உலகின் பெரும்பான்மைப் போக்குகளையும் தன்னாட்டின் சிறுபான்மைக் குடியினரையும் முற்றிலும் மதிக்காத அரசு இஸ்ரேல்-தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சில சமயம் anti-semitism எனப்படும் யூத எதிர்ப்புக் கொள்கைகளை தங்களுடைய நடவடிக்கைகளால் யூதர்களே முற்றாக நியாயப்படுத்துகிறார்கள் என்பதில் நம்பிக்கை வலுத்து வருகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *