• இன்னும் கொஞ்சம் ஆட்சி மொழ

    by  • December 23, 2003 • பொது • 0 Comments

    நேற்று இராஜ்ய சபாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சட்ட எட்டாவது பிரிவின் திருத்தத்தின்படி இந்தியாவில் “ஆட்சி” மொழிகளின் எண்ணிக்கை 22 ஆக உயருகிறது . (ஏற்கனவே ரூபாய் தாளில் சிறுத்துப் போய்க்கொண்டிருக்கும் மஹாத்மாவின் உருவம் இதனால் இன்னும் கொஞ்சம் நெருக்கியடிக்கப்படும். மெதுவாக அவரை வெளியில் பிடித்துத் தள்ளிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்).

    புதிதாக ஆட்சி மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழிகள்; போதோ, ஸன்தாலி, மைத்தலி, டோக்ரி. கிட்டத்தட்ட முப்பத்தைந்து மொழிகள் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார்களாம். வழக்கம்போல் இந்தி/ஆங்கிலத்தின் இடத்தைப் பற்றிய பேச்சுக்கள் எழும்பியிருக்கின்றன. இந்த நேரத்தில் இந்த ஆட்சி மொழி பற்றிய கருத்துக்கள்/சந்தேகங்கள்; 1. எனக்குத் தெரிந்த வகையில் அரசியல் சட்ட எட்டாவது பிரிவு இதுவரை இருந்த பதினெட்டு மொழிகளையும் சரிசமமாகத்தான் வரையறுக்கிறது. அதாவது இந்திக்கோ, ஆங்கிலத்திற்கோ எந்த விசேடத் தகுதியும் சட்டபூர்வமாக வரையறுக்கப்படவில்லை. ஆங்கிலேயரின் எச்சமாக ஆங்கிலமும், வடக்கின் உச்சமாக இந்தியும் கோலோச்சி வருகின்றன. என்னிடம் பலர் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என்று வாதிட்டிருக்கிறார்கள் (பல அணுசகதித் துறை விஞ்ஞானிகள்). அப்படி ஏதாவது அரசியல் சட்ட உரிமை இந்திக்கு இருக்கிறாதா என்பதை யாராவது தெளிவுபடுத்துங்களேன் (வழக்கறிஞர் ஐயா, சம்மன் இதோ, விளக்கம் சொல்லுங்களேன்).

    2. இந்தத் திருத்தத்தின் மூலம் நிஜமாகவே காந்திக்குப் பக்கத்தில் மைத்திலியும் ஸந்தாலியும் வருவார்களா? மைத்திலிக்கும் தேவநாகரி வரிவடிவத்திற்கும் என்ன வித்தியாசம்?

    3. மைத்திலி என்ன புண்ணியம் செய்தது? துளு என்ன பாவம் செய்தது (வடக்கிலும் தெற்கிலும் இருப்பதைத் தவிர)? ஏன் துளு இல்லை?

    4. இந்தியா சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் இதுவரை “ஆட்சி மொழிகளில்” அரசியல் சாசனம் ஆவணப்படுத்தப்படவில்லை. சட்டம் தெரிய வேண்டுமென்றால் ஆங்கிலமோ, இந்தியோ தெரிந்தாக வேண்டும். அரசியல் சாசனம் என்பது ஒரு நாட்டின் அடிப்படை ஆவணம், ஒவ்வொரு குடிமகனும் ஓதி உணர்ந்து, அவனுக்குரிய கடமைகளையும் உரிமைகளையும் தெளிய வேண்டும். இப்படி இருட்டடிப்புச் செய்வது அடிப்படை குடிமையுரிமையைப் பறிக்கும் காரியமல்லவா? இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அரசியல் சட்ட மொழிமாற்றம் எளிதான காரியம் அல்லவா? ஏன் இதை இந்திய அரசு செய்யக்கூடாது?

    (பி.எஸ்.ஸி படிக்கும் போது ஒருமுறை அமெரிக்காவில் தேர்தல் வர, நான் வாய்ஸ் ஆ·à®ªà¯ அமெரிக்காவிற்கு மாநிலவாரி முன்னோட்டத் தேர்தல்களைப் பற்றி சில சந்தேகங்களைக் கேட்டிருந்தேன். அதற்காக அவர்கள் அமெரிக்கக் குடிமையுரிமைச் சட்டப் புத்தகத்தையே அனுப்பினார்கள். தொடர்ந்து வானொலியில் என்னுடைய கேள்வியை ஒலிபரப்பி, சட்டப்புத்தகத்தில் 63-ஆம் பக்கம், 78-ஆம் பக்கம் என்று பார்க்கச் சொன்னார்கள்). இந்தியர்களுக்கு ஏன் அரசியல் சட்டம் எட்டாக் கனியாக இருக்கிறது?

    5. ஆட்சி மொழியில் பதவியேற்புப் பிரமாணத்தை மொழியலாமல்லவா? பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஒருவர் தமிழில் பதவியேற்க முடியுமா? இப்படி யாராவது தங்கள் குடிமையுரிமையை நிலை நாட்டியிருக்கிறார்களா?

    6. என்னுடைய கருத்தில் இப்படி பல மொழிகளை உள்ளே நுழைப்பது “ஆட்சி மொழி” என்னும் தகுதியை நீர்த்துப் போகவைக்கும் உத்தி. இதனால், தமிழும், ஸந்தாலியும் சமம் என்று சொல்லி இந்தி இவைகளைவிட ஒருபடி மேலானது என்று உறுதிப்படுத்தும் சூழ்ச்சி. தொடர்ந்து, இருக்கும் முப்பது ஆட்சி மொழிகளில் பதினெட்டு இந்தியின் குடும்பம் எனவே, ஆங்கிலத்தை அழிப்போம் என்று நீட்டிப்பார்கள்.

    7. முப்பத்தைந்து மொழிகள் இடம் கேட்டால் அதில் நான்கை மட்டும் ஒத்துக் கொண்டிருக்கிறோம் என்று அத்வானி சொல்கிறார். அந்த நான்கிற்கும் எந்தத் தகுதியின் அடிப்படையில் இந்தச் சலுகை? ஏன் இப்படி அப்போதைக்கப்போது என்று செய்யவேண்டும். ஆட்சி மொழி எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரு குழுவைத்து திறந்த வழியில் விவாதித்து முடிவெடுக்கலாம்தானே?

    8. இந்த இடத்தில் அமெரிக்காவின் நிலையும் கொஞ்சம் இடிக்கிறது. கனடாவில் இருக்கும் பிரெஞ்சுக் குடிகளின் வீதத்தைவிட அமெரிக்காவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களின் வீதம் அதிகம். ஆனால் அமெரிக்கர்களுக்கு அதை ஒத்துக் கொள்ளும் பெருந்தன்மை கிடையாது.

    முதலில் மொழிவாரி மாநிலங்கள் என்று பிரித்தார்கள். பின்னர் மாநிலவாரி மொழிகளுக்கு இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது பிரிவில் ஆட்சி மொழி அங்கீகாரம் கொடுத்தார்கள். இப்பொழுது போதோ, ஸந்தாலி என்று சங்கப்பலகை விரிந்துகொண்டு போகிறது. இது நல்லதிற்கில்லை என்று தோன்றுகிறது.

    என்னுடைய இந்த சந்தேகங்களில் பல தவறாக இருக்கலாம் (உதாரணமாக, தமிழில் பிரமாணம் எடுத்துக் கொள்ளுதல்). விளக்கம் சொன்னால் நன்றியுடையவனாக இருப்பேன்.

    0 Responses to இன்னும் கொஞ்சம் ஆட்சி மொழ

    1. Kumaraguru
      December 23, 2003 at 10:09 pm

      சொல்ல மறந்து விட்டேன்…

      You won the ‘Best regional Indiblog’ category of the IndiBloggies (http://indibloggies.blogspot.com/)

      Even here they are playing politics with languages. There is only one hindi blogger and he was straight away awarded in a separate category(‘Best Hindi blog’) without a poll. All other bloggers blogging in languages other than Hindi and English had to compete in the ‘Best Regional blog category’. Fortunately, both the nominations for this category were Tamil Blogs (yours and Badri’s). You won by one vote! (19:18) Congrats!

    2. Thangamani
      December 24, 2003 at 7:51 am

      இந்தியாவை ஒற்றைப் பேரரசாகவும் அதன் மாமன்னர்களாக தங்களயும் கருதும் வடநாட்டு அரசியல் அநாகரிகத்தின் கனவுதான், ஒரே ஆட்சி மொழி, மைய்யப்படுத்தப்பட்ட அதிகார நடுவனரசு எல்லாம். கூட்டாட்சி என்பது உண்மையானால் இவைகள் அர்த்தமிழந்துவிடும். தொடர்புக்காக பொது மொழி என்பது கதை; பொய். அப்படி எந்த மொழியும் இல்லாமலேயே இந்தியத் துணைக்கண்ட மக்கள் 2000 வருடங்களாக தொடர்பு கொண்டுதான் வருகிறார்கள். இனியும் இருப்பார்கள்

    3. prabhu
      December 25, 2003 at 11:14 pm

      Vankat, I understand you have addressed that summon to me. You could have easily searched Indian Constitution before writing this. Please follow this link http://www.helplinelaw.com/bareact/index.php?dsp=constitution and check Part XVII and Article 343. In this index box, the provisions of the Constitution have been wrongly referred as Sections. The Constitutional provisions have to be referred as Articles. I understand, you may correct the error in your assumption. Besides, Tamil translation of the Constitution of India may be available. Since, in Law even the words such as “as” “may” “shall” etc assume significance in its interpretation….it is difficult task to rely on translations. I may add, it is definitely not an impossible task.

    4. prabhu
      December 25, 2003 at 11:45 pm

      Now for the rest of your doubts. Constitution (3rd Schedule. You have translated as ‘pirivu’. It has to be trnslated as ‘attavanai’) provides only the form of the oath. It is also common sense that if a person who does not know either Hindi or English becomes a Minister he can take oath only in the language he knows. I have not heard about any Constitutional Crisis over this. However, I ll check through the precedents and inform you if you are interested. Secondly, those languages, included in the Eight Schedule are referred as Schedule(d) Languages and it is totally wrong to refer them as Official Languages. The authoritative Hindi version of Constitution has been available from 1988. Other language translations are not official. These Schedule(d) Languages enjoy no special status.

    5. IndiBlogger
      January 22, 2004 at 12:55 am

      Kumar: We don’t think there was any politics in the choice of language. Hindi is the National language and hence was given a separate category (moreover we personally knew that there was atleast a blog in Hindi which we didn’t about other Indian languages) and since we did not expect too many of blogs in other languages we did not go for individual language categories.

      Moreover, if you had seen the process we had asked for public participation right from the stage of conceiving the whole award thing. Why didn’t you suggest a Tamil/Telugu or any other dravidian language categroy when we asked for public opinion on the award categories?

      We did our best in our individual capacity (remember that we also have a full-time job to earn our living and this was a voluntary effort) but we spared no effort to make it a community effort. Please don’t cite “politics” as the reason for the lapses. This was the first such effort and for failure or success, the onus lies on the the whole IndiBlogger community.

    6. krishnan
      May 29, 2004 at 2:26 am

      Can anybody explain the meaning of classical language as spelled in UPA minimum programme and what will be the advantage to those who knows that language, by having this status?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *