• அகிரா குரோஸாவா

    by  • November 30, 2003 • பொது • 0 Comments

    நேற்று அகிரா குரோஸாவா-வின் ரஷோமோன் திரைப்படத்தை இரண்டாம் முறையாக கிடடத்தட்ட பத்துவருட இடைவெளிக்குப் பிறகு பார்த்தேன். அந்த வயதில் புரியாத குரோஸாவாவின் மேதமை இப்பொழுது எளிதாகப் புலப்படுகிறது. ஒரு கொலை-ஒரு கற்பழிப்பு குறித்த நான்கு பேரின் வாக்குமூலங்கள்தான் படம். ஒரு வழிப்பறியோன், கற்பழிக்கப்பட்டவள், அவள் கணவனும் கொலையுண்டவனுமானவனின் ஆவி, சம்பவத்திற்குச் சம்பந்ந்தமில்லாத, ஆனால் பார்த்ததாகச் சொல்லிக்கொள்ளும் விறகுவெட்டி, இவர்கள் நால்வரின் வாக்குமூலம் புதிரைப் போல படத்தில் துண்டு துண்டாகக் காட்டப்பட்டிருக்கிறது. பிறழாத உண்மை என்பதைப் பற்றிய கவிதை இந்தப் படம். கவிதைதான், சொல்லப்பட்டிருக்கும் விதத்திலும், செதுக்கியிருக்கும் நுட்பத்திலும் பார்வையாளரை படத்தில் ஒன்றச் செய்யும் நேர்த்தியிலும் ஐம்பது வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு இன்றும் ஈடில்லை. சம்பவங்களை வாக்குமூலங்களின் மூலம் துறத்தாமல், பிறழாத உண்மை என்பது என்ன? பார்வையாளனின் பங்கு உண்மையில் எத்தனை வீதம் போன்ற சிக்கல்களை அவர் அனுகியிருக்கும் விதம் பற்றியும், காட்சியமைப்பு, இசை இவற்றுக்காகவும் இன்று இரவு காசெட்டைத் திரும்பக் கொடுக்குமுன் ஒரு முறை பார்த்தாக வேண்டும்.

    குரோஸாவா படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன்.(வாரம் தோறும்), இது இரண்டாவது வாரம். சென்ற வாரத்தில் சிச்சினின்னோ ஸாமுராய் (செவன் சாமுராய் – ஆங்கிலத்தில்) பார்த்தேன். வெஸ்டர்ன் படங்கள் முதல் ஸ்டார் வார்ஸ் வரை குரோஸாவா எப்படி எளிதாகத் தன் ஆளுமையினால் பாதித்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக இந்த வரிசையில் இகிரு பார்க்கலாமென்று இருக்கிறேன்.

    0 Responses to அகிரா குரோஸாவா

    1. bb
      December 8, 2003 at 4:01 pm

      My writeup on Rashomon a while back:

      முதன் முதலில், பத்தாம் வகுப்பு படிக்கும்போது ராஷமோன் படத்தைப் பார்த்தேன். படு திராவையாக இருந்தது. என்னடா இது, ஒரே காட்சியை திரும்ப திரும்ப எடுத்து உயிரை எடுக்கறானே என்று இருந்தது. அப்போதெல்லாம் குரோசாவா என்றால் “எனக்குப் பிடித்த வெஸ்டர்ன் படங்களை ஜப்பானிய படங்களாக எடுத்தவர்” என்று தான் தெரிந்திருந்தது. எல்லாரும் குரோசாவா-வையும் ரே-யையும் ·à®ªà¯†à®²à®¿à®©à®¿à®¯à¯ˆà®¯à¯à®®à¯ ஒன்றாகப் பார்க்கும்போது, எவனாவது Fistful of Dollars-ஐ சிறந்த படமாக ஒப்புக்கொள்வானா என்றே தோன்றும்.

      பல வருடங்களுக்குப் பிறகு, இங்கு வந்து, கல்லூரியில் படத்தைப் பார்க்கும்போது தான் அதன் முழு வீச்சும் தெரிந்தது. அதைப் பற்றி நிறைய படித்ததாலும் அதன் டிவிடி-ஐ திரும்ப திரும்ப பார்க்கத் தோன்றியது.

      ராஷமோன் பற்றி சிறு குறிப்புகள்:

      1. இந்தப் படம் கண்டிப்பாக டிவிடி-யில் பார்க்க வேண்டிய ஒன்று. காட்சிகளின் நேர்த்தி, சூரிய வெளிச்சம், இலைகளின் நிழல், விடாது பெய்யும் மழை, இவற்றை கையாண்டிருக்கும் ஆளுமை ஆகியவை ரசிக்க வேண்டியவை. ராபெர்ட் ஆல்ட்மன் தரும் முகவுரை பார்க்க வேண்டிய ஒன்று. Kazuo Miyagawa-வின் பேட்டியும் இதில் உண்டு. படத்தை குரோசாவா-வைப் பற்றி நிறைய எழுதியிருக்கும் Donald Ritchie-யின் வர்ணனையுடன் பார்க்கலாம் (Scorcese செய்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்! ).

      2. படத்தில் ஒரு சம்பவம் (ஒருவன் கொலை செய்யப்படுகிறான், அவன் மனைவியின் கண் முன்னால், மனைவியைப் பறிக்க வந்த திருடன் ஒருவனும் இருக்கிறான்), நான்கு தடவை திரும்பத் திரும்பக் கூறப் பட்டிருக்கிறது. Flash back முறையில் இப்படியும் கதை சொல்லலாம் என்று நிரூபித்த முதல் படம் இது.

      3. நால்வரின் கதையும் மாறுபட்டு இருக்கிறது. இதை தருக்க ரீதியாக யோசித்து, எது நடந்தது, எது நடக்கவில்லை என்று முடிவுக்கு வருவது தேவையில்லாத ஒன்று. அது படத்தின் நோக்கமும் இல்லை.

      4. எத்தனையோ படங்கள் ராஷமோனின் யுத்தியை கையாண்டிருக்கின்றன. Usual Suspects-வும் Memento-வும் பார்க்கும்போது ராஷமோனின் ஞாபகம் வரவேண்டும்.

      5. படத்தில் இப்போது நிகழ்வதையும் முன்னால் நிகழ்ந்தவைகளையும் பிரித்துக் காட்ட மழை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. முன்னால் நடக்கும் சம்பவத்தின் போது சூரியன் பிரகாசமாக எரிகிறது. காமெரா நேராக சூரியனைப் பார்க்கிறது (உலக சினிமாவில் முதன் முறையாக).

      அடர்த்தியான காடுகளில் நீண்ட நேரம் காமெரா ஊடுருவிச் செல்கிறது. மி·à®ªà¯à®©à¯‡ (திருடன்) கதாநாயகியைப் பார்க்கும்போது, அவன் உடலில் இலைகளின் நிழலும், காற்றின் அசைவும் தெரிகிறது.

      முதலாவதாக, சம்பவத்தைச் சொல்லும் விறகு வெட்டி, காட்டில் செல்லும் போது காமெரா அவனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் செல்கிறது, நம்மையும் எங்கோ ஒரு தெரியாத இடத்துக்கு இட்டுச் செல்வதைப் போல.

      சம்பவத்தை விவரிக்கும்போது, பேசுபவர்கள் கதைப்படி ஒரு நீதிபதியிடம் பேசுவது போல் இருந்தாலும், நம்மைப் பார்த்துத் தான் பேசுகிறார்கள். நீதிபதியைக் காட்டுவதே இல்லை. நம்மிடம் அவர்கள் தங்களின் பார்வையைக் கூறி, நம்மை முடிவெடுக்க வைக்கிறார்கள்.

      6. மி·à®ªà¯à®©à¯‡-வின் உடலில் உள்ள வேர்வையும், மிடுக்கும் நம்மால் உணர முடிகிறது. அவனை ஒரு வெறி பிடித்த மனிதனாகவும், சில சமயங்களில் கூத்தாடும் குரங்கு போலவும் காட்டி, அந்தப் பாத்திரத்தைப் பற்றி ஒரு சரியான கணிப்பு ஏற்படாத வண்ணம் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் intrigue-க்கு அது முக்கியமாக அமைகிறது.

      7. அகாடெமி விருதுகளில் சிறந்த ·à®ªà®¾à®°à®¿à®©à¯ படத்துக்கான விருது உருவானதே இந்தப் படத்தினால் தான்.

      இவ்வளவு சொன்னாலும், குரோசாவாவின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை “ரான்”, “டெர்ஸ¤ உஸாலா”. இவை இரண்டும் பலரால் கவனிக்கப் படாத முத்துக்கள். இயக்குனராகவும் கதை புனைபவராகவும் குரோசாவா தன்னுடைய உச்சத்தை அடைந்தப் படங்கள் இவை (ஒரு தற்கொலை முயற்சிக்குப் பிறகு).

      -bb.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *