epson_robot.jpgஜப்பானின் சீக்கோ-எப்ஸான் நிறுவனம் உலகின் முதன் முதலான பறக்கும் நுண்இயந்திரனை வடிவமைத்திருக்கிறது. உள்ளங்கையில் நிறுத்திவிடக்கூடிய இந்த இயந்திரன் அகஒலியலைகளால் எதிர் திசையில் சுழலும் இரண்டு இறக்கைச் செலுத்திகளின் இயக்கத்தால் மேலும்புகிறது. இதன் இயக்கத்தை ப்ளூடூத் மூலம் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த சாதனத்தின் ஆராய்சியில் அளவில் குறைந்த பல கட்டுப்பாட்டுக் கருவிகள் சாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆராய்ச்சியின் மூலம் தரையில் இயங்கிக் கொண்டிருந்த இயந்திரன்கள் வானத்திலும் இயங்குமுகமாக மாற்றப்பட்டிருக்கின்றன. மூப்பரிமாண இயக்கம் சாத்தியமாகியிருக்கிறது. இதற்கு அளவிட முடியாத உபயோகங்கள் இருக்கின்றன. உதாரணமாக, தீப்பிடித்து எரியும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சன்னல் வழியாக இந்த இயந்திரனை உள்ளே அனுப்பி தளத்தில் யாராவது இருக்கிறார்களா என்று காமெரா மூலம் அறியமுடியும். இதைப் போல சுரங்கங்களிலும். மேகத்துக்குள் இந்த இயந்திரனை அனுப்பி அதன் ஈரப்பதம், அடர்த்தி முதலிய காரணிகளை நேரடியாக அளக்கமுடியும்.

சமீப காலமாக நுண்இயந்திரன்களில் ஆர்வம அதிகரித்து வருகிறது. நுண்மின்னியக்கக் கருவிகள் (Micro ElectroMechanical Devices – MEMS) என்ற துறை தற்பொழுது அதிவேகமாக வளர்ந்து வருகிறது.