சில நாட்களுக்கு முன்னால்தான் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் கவிதைத் தொகுப்பான மண்ணுள்ளிப் பாம்பு வாசித்தேன். என்பிலதனை வெயில்காயும், சதுரங்கக் குதிரை, எட்டுத்திக்கும் மதயானை போன்ற கதைகளினால் தற்கால இலக்கியத்தில் தனியிடம் பெற்றவர் நாடன். கவிதைத் தொகுப்பு மிகுந்த ஆயாசத்தைக் கொடுத்தது. முன்னுரையில் “ஏன்டா, இதை வெளியிடுகிறோம்?” என்று அவரே சலித்துக் கொண்டிருக்கிறார். அப்படியேதான் எனக்கும் தோன்றுகிறது. மிகவும், மிகவும் சாதாரணமான விடலைத்தனமான வரிகள்

சூரத்திலிருந்து
பஞ்சத்தால் துரத்தப்பட்ட
மக்களால்
1793-ல் போடப்பட்ட
அந்தப் பாலம்
இன்னும் பஞ்சமும்தான்

(விருட்சம் 1990).

1990-ல் கூட இப்படிப்பட்ட வரிகளை எழுதி கவிதை என்றால் என்னுடைய நண்பர்கள் கல்லால் அடித்திருப்பார்கள்.

இரவில் வாங்கினோம்
இன்னும்
விடியவேயில்லை

என்பது முதல் முறையாக வந்தபொழுது நன்றாக இருந்தது. ஆனால் இந்தத் தொகுதி முழுவதும் அதே இரகம்தான்

அருள் ஞானப் பழம் கூட
அழுகக்
கூடும்
(விருட்சம் 1990)

என்பது அடுத்த பக்கத்தில்.

ம்ம்… ஏன்தான் இதை வெளியிட்டாரோ?

(மண்ணுளிப் பாம்பு, நாஞ்சில் நாடன், முதற்பதிப்பு 2001, விஜயா பதிப்பகம், கோயமுத்தூர், பக்கங்கள்-64 விலை: ரூ 30)