அமேசான்.காம் இன்றைக்குப் புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்போல் தோன்றுகிறது. அமேசானின் வலைத்தளத்தில் கிடைக்கும் புத்தங்களின் உள்ளே இருக்கும் வரிகளை இனிமேல் தேடிக் கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக, நீங்கள் “கல்பொரு சிறுநுரை” என்ற வார்த்தையை உள்ளிட்டுத் தேடினால் (உதாரணத்திற்குத்தான், தமிழில் இணையத்தில் கிடைக்கும் தகவல்களையே தேடமுடியவில்லை, புத்தகங்களில் எப்படித் தேடுவது?) குறுந்தொகையின் எந்தெந்தப் பதிப்புகளெல்லாம் அமேசானில் கிடைக்கின்றனவோ அவற்றின் பட்டியல் பதிலாக வரும், கூடவே குறுந்தொகை விளக்கவுரைகள், (உதாரணமாக, ஜெயமோகனின் சங்கச்சித்திரங்கள்), பிற ஆய்வுப்பதிப்புகளும் புத்தகமாக அங்கு விற்கப்பட்டால் உங்களுக்குப் பட்டியல் கிடைக்கும். இதைத் தவிர, கிடைக்கும் புத்தகங்களுக்குள்ளே எங்கெல்லாம் அந்த வார்த்தை/தொடர் வருகின்றனவோ அந்தப் பட்டியலும் கிடைக்கும்.

தொடர்ந்து, … என்ன? அமேசானின் உலகப்புகழ் பெற்ற ‘ஒற்றைகிளிக்’ மூலம் நீங்கள் உடனடியாக புத்தகத்தை வாங்கமுடியும். (இந்த ஒற்றைகிளிக் என்ற கால்காசு பெறாத சமாச்சாரத்திற்கு அவர்கள் காப்புரிமை பெற்றிருக்கிறார்கள், இது மென்கலன்/விற்பனை உத்திகளுக்குக் காப்புரிமை பெறுவதில் இருக்கும் அபத்ததின் உச்சம்). அமேசான் இந்த புத்தகத் தேடலுக்கும் காப்புரிமை பெற்றிருப்பார்கள்/பெறுவார்கள் என்று நம்பலாம்.

* * *
There are several tales/beliefs in the hacker folklore. One of the oldest is about reading the manuals. A true hacker seldom reads a (printed) manual. If you ask them they may reply “you can’t grep a dead tree”. Now, at last, there seems to be a mechanism for grep-ing a dead tree!!

(For the unix-uninitiated grep is a command in unix that is used for searching regular expressions).