தமிழர்களின் நகைச்சுவை உணர்வு எப்பொழுதும் கேள்விக்குறியாக்கப்பட்ட விஷயமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அன்றும் இன்றும் என்றும் வார்த்தையாடல் கோமாளித்தனங்களே பெரிதும் நகைச்சுவையாக இரசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஆனந்த விகடன் பாணி நகைச்சுவை;

அவன் ஏன் பேப்பர்ல ‘ஆசிரியர்’ ன்னு பென்சிலால அழுத்தி எழுதிக்கிட்டு இருக்கான்?

To get a good impression of the teacher


டேய், எங்கடா போற?

மாவு அரைச்சுகிட்டு வரத்துக்கு!

அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு, ஒளிஞ்ச் போற?

எங்கம்மா நைஸா அரைச்சுகிட்டு வரச்சொன்னாங்க

இப்படியாக எல்லைகடந்த வார்த்தையாடல்களே நகைச்சுவை என்று பெரிதும் இரசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தத் தொடரில் வரும் நாட்களில் பல்வேறு ‘பிராண்ட்’ நகைச்சுவைகளை பட்டியலிட உத்தேசம்.

சமீபத்தில் இரசித்த நகைச்சுவை ஒன்று;

{யார்முல்கா – yarmulka – யூதர்கள் மதக்கட்டாயத்தின்படி தலையில் அணிந்துகொள்ள வேண்டிய உச்சந்தலைக்கு மாத்திரமான குல்லா வகை}

தலையில் யார்முல்கா இல்லாமல் வந்த யூத இளைஞனைப் பார்த்து ரபை (யூத குரு) சொன்னார்:

“யேய், தலையில் யார்முல்கா இல்லாமல் வருவது தெய்வகுற்றம், வேசியுடன் படுப்பதைப் போன்றது, தெரியுமா?”

“இல்லை, உங்களுக்குத் தெரியவில்லை. நான் இரண்டையும் முயற்சி செய்திருக்கிறேன். அவற்றை எந்த வழியிலும் ஒப்பிடமுடியாது”