ஜப்பானில் வசித்த போது கண்களில் பட்ட ஆங்கில அறிவுப்புகளில் சில;

1. நான் போனவுடன் எனக்குக் கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கண்டு தலை சுற்றியது. முக்கிய காரணம்,

The office secretary is your help. Please use her freely. 2. ஆராய்ச்சிக் கூடத்தில் வருகையாளர்கள் தங்கும் வீடுகளில் அடுத்தடுத்த இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும், இவற்றுக்கு இடையே அஸ்பெஸ்டாஸினாலான ஒரு சிறிய தடுப்புதான். இதற்குக் காரணம், அடிக்கடி நிலநடுக்கம் வரும் ஜப்பான் நாட்டில் எதற்கும் தயாராக இருப்பார்கள். இரண்டு வீடுகளுக்கும் பொதுவாக பால்கனியில் ஒரே நூலேணி இருக்கும். நிலநடுக்கத்தின்போது அவசரமாகத் தப்பிக்க வேண்டுமென்றால் நூலேணி வழியாகக் கீழே இறங்கிக் கொள்ளலாம். இதுபோன்ற தடுப்புச் சுவரில் எழுதப்பட்ட ஆங்கில் வாசகம்

In case of emergency, please break your neighbour and allow him to use yours.

3. வசதியான ஓட்டல் அறை ஒன்றில் குளிர்சாதனத்தின் அடியில் எழுதப்பட்டிருந்த உதவி வாசகம்

This machine heats, it colds, please control yourself.

(இரண்டு நாட்கள் அந்த அறையில் தங்கிவிட்டு திரும்பும் பொழுது இரயில் நிலையத்தில்தான் அந்த வாசகத்தின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. அதாவது, அந்த இயந்திரம் தானியங்கி இயந்திரம் அல்ல; அதன் வெப்ப அளவை நாமாக் கட்டுப்படுத்த வேண்டும்).

4. ஒரு எச்சரிக்கை வாசகம்

While talking with the phone please be kind to them. Avoid bad language and do not hurt them.

45 அங்காடி பிளாஸ்டிக் பையில் காணப்பட்ட இன்னொரு எச்சரிக்கை

Please be careful; do not choke your children because of this bag

இவற்றைத் தவிர அங்கிருந்த நாட்களில் சில சுவாரசியமான வாசங்களை நான் படமெடுத்திருக்கிறேன். சில சுவாரசியமான கடிதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். அவற்றை அலகிட்டு இன்னொருநாள் வலையேற்றுகிறேன்.