{நேரடியாக விஷயத்துக்கு வந்த இரகசிய போலீஸ் என்னிடம் கேட்டது, “தம்பி நீங்க கம்யூனிஸ்டா, நக்ஸலைட் தொடர்பு உண்டா?”}
அம்மாவின் முகத்தைப் பார்க்கிறேன். அசாத்திய பீதி. வெளிறிப் போயிருக்கிறது. அம்மா நிறைய மொழிபெயர்க்கப்பட்ட வங்காளக் கதைகளைப் படித்திருக்கிறாள். அதிலெல்லாம் கிட்டத்தட்ட இப்படித்தான் வரும். கீழ் மத்தியதரக் குடும்பம், அழகான சிறுகூட்டைப் போன்ற வீடு. அந்த வீட்டில் ஒரு விடலை கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டு கூடு சின்னாபின்னமாகும். அது போன்ற கதைகளை டஜன் கணக்கில் படித்திருந்ததால் போலீஸ்காரர் கேட்டவுடன், அந்தக் கதைகளில் ஓடிப்போகும் சிறுவனுக்குரிய சர்வ லட்சனங்களும் எனக்குப் பொருத்திப் போகிறது (அப்படியாகச் சொன்னது அம்மாதான், இரண்டு மூன்று நாட்கள் கழித்து).
“இல்லை சார்” – ஒற்றையாகப் பதில் என் வாயிலிருந்து வெளிவருகிறது. கேட்பவருக்குக் கட்டாயம் நம்பிக்கையைத் தராது அது.
“தம்பி, ஒன்னும் சீரியஸ் இல்லிங்க. பயப்படாம பதில் சொல்லுங்க”
“இல்ல சார், எனக்குக் கம்யூனிசம் எல்லாம் பத்தி ஒன்னும் தெரியாது சார்”
“உங்களுக்கு ஈஸ்டு ஜெர்மனிலேந்து நிறையா கம்யூனிஸ்ட் புத்தகம் வந்ததே”
பார்த்திருக்கிறார். எனக்கு வரும் எல்லா கடிதங்களையும் பற்றி மனிதனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவரிடம் எந்த விதமான பொய்யும் எடுபடாது. எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிடுவதுதான் நல்லது.
“ஆமாம் சார், ஈஸ்டு ஜெர்மனிலேந்து கம்யூனிசம் பத்தி புத்தகமெல்லாம அனுப்பினாங்க. அதெல்லாம் பெட்டில இருக்கு சார், நான் ஒரு வரிகூட படிச்சதில்ல”
“என்ன மாதிரி புத்தகம்னு சொல்லுப்பா, எழுதிக்கிறேன்”
“சார் நெறைய இருக்கு சார், எடுத்துக் காட்டிடட்டுமா?”
“இல்ல தம்பி, ஒன்னு ரெண்டு பேர் சொல்லுங்க போதும்”
சொல்வதை அப்படியே நம்புவாரா அல்லது இந்த மாதிரி நம்மிடம் சொல்வது பயத்தைக் குறைத்து உண்மையைக் கறக்கவா என்று தெரியவில்லை. ஆனால் முன்னரே எடுத்த ‘இவரிடம் பொய் சொல்வதில்லை’ முடிவில் சற்றும் குறைக்கப்போவதில்லை. சொல்கிறேன். எங்கெல்ஸ் வாழ்க்கை வரலாறு, எரிச் ஹானேக்கரின் முடிக்கப்படாத சரித்திரம், போஸ்ட்டாம் நகரின் புனரமைப்பில் கம்யூனிஸ்ட்களினின் வெற்றி, இப்படியாகக் கி.ஜெர்மனியிலிருந்து அனுப்பப்பட்டு கன்னி கழியாத புத்தகங்களின் பெயரைச் சொல்லுகிறேன்.
புத்தகத்தைத் தவிர வேறு என்னென்ன வந்தது பெர்லினிலிருந்து என்று கேட்கிறார். “நெறைய நியூஸ் பேப்பர் மாதிரி வரும் சார், அதுல சில சமயம் மையத்துல ஓட்டை போட்டிருக்கும்” என்கிறேன். காட்டுங்கள் தம்பி என்கிறார். கடைசியாக வந்து திறக்கப்படாமல் ஓட்டையிடப்பட்டு கிடக்கும் கவரை (மேலே சணல் கயிறால் கட்டப்பட்டிருக்கிறது).
“இது எங்க டிபார்ட்மென்ட்தான் தம்பி, உள்ள பேப்பரைத் தவிர எதுவும் இல்லை என்று நிச்சயஞ் செய்ய நடுவுல ஆணியால ஓட்டபோட்டுப் பாப்போம்”.
அடப்பாவிகளா, ஒரு தடவை போட்டியில் பரிசாக வாங்கிய கிட்டத்தட்ட இருநூறு டாலர் மதிப்புள்ள World Radio & TV Handbook ஐச் சின்னாபின்னமாக ஓட்டைபோட்டது நியாயமா என்று கேட்கத் தோன்றுகிறது.
தொடர்ந்து கேள்விகள் இதே ரீதியில் செல்கிறன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். சீனாவிலிருந்து ஏன் கொடி வந்தது என்று கேட்கிறார். யாருக்குத் தெரியும், சீனாவிலிருந்து கொடி வந்தது, அமெரிக்காக்காரங்க குச்சில குத்திவைச்ச கொடியை அனுப்பினார்கள், எல்லாம் பத்திரமாக வந்தன. செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து சாடி (ப்ராடிஸ்லோவா கண்ணாடி, உலகப்புகழ் பெற்றது) இருப்பதாக வந்த பார்சல் பிரிக்கப்பட்டு உள்ளே ஏதுமில்லாமல் இருந்தது.
ஒரு மணி நேரக் கேள்விகளுக்குப் பிறகு, சில கடிதங்களைப் பார்த்த பிறகு மனிதர் திருப்தியடைகிறார். வருவது சோவியத்தின் கம்யூனிசப் பத்திரங்கள் மாத்திரமல்ல, அமெரிக்காவின் The Declaration of Independence, WYFR அனுப்பும் பைபிள் பிரசூரங்கள் கூடவும்தான் என்று. எல்லாவற்றுக்கும் ஒரே கதிதான் இதுபோன்ற புத்தங்கள் பரணுக்குச் சென்றுவிடுகின்றன, பிரிக்கப்படாமலேயே. பிற பயன்படுத்தப்படுகின்றன. QSL கார்டுகள் மாத்திரம் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன, சக பைத்தியங்களிடம் காலரை உயர்த்த.
மெதுவாக மீசையில்லாத போலீஸ் நண்பராகிறார். தான் வந்த காரணத்தைச் சொல்கிறார். பொதுவில் சினாவிலிருந்தும், கிழக்கு ஜெர்மனிலிருந்தும் வரும் தடியான பார்சல்கள் பற்றிய சந்தேகம். சந்தேகம் என்றும் சொல்லிவிட முடியாது ஏனென்றால் எல்லாம் திறந்து பார்த்துத் தான் அனுப்பப்படுகின்றன (உள்ளே கொஞ்சம் விலையுள்ள, பயனுள்ள சமாச்சாரம்கூட இல்லாவிட்டால்). சந்தேகம் வலுத்ததற்குக் காரணம் கிட்டத்தட்ட ஆறு அகலமுள்ள கிழக்கு ஜெர்மனியில் தேசியக்கொடி எனக்கு வந்ததே. அந்தக் கொடி நானும் என் நண்பர்களும் கும்பகோணத்தில் நடத்துவதாக இருந்த சிற்றலை வானொலி நேயர் விழா பற்றி அவர்களுக்குக் எழுதப்போக நேர்ந்தது. கடைசியில் அந்த விழா நடக்கவே இல்லை. கொடி என்னுடைய அம்மாவின் ஒரே பட்டுபுடவையைச் சுற்றிவைக்கப் பயன்பட்டது.
நண்பரானவுடன்தான் தொந்தரவு அதிகமாயிற்று. வீட்டிற்குத் தெரியாத பல விஷயங்களைக் கக்கவைக்கிறார். “ரேடியோ கேட்க நேரம் எங்கிருந்து கிடைக்கிறது?” படிப்பதாகச் சொல்லி மொட்டை மாடிக்குச் செல்லும் நேரத்தில் மூன்றில் இரண்டு பங்கு அப்படித்தான் செலவழிகிறது. “இப்படி ரேடியோ ஸ்டேஷனுக்கு எழுத ஸ்டாம்பு செலவிற்கு என்ன செய்கிறாய்?” (வீட்டில் பாக்கெட்மணி கிடையாது). பல ரேடியோ ஸ்டேஷன்களுக்கு உள்ளூர் எம்பசிக்கு எழுதினால் போதும். சிலவற்றுக்கு நேரடியாக எழுத வேண்டும். அப்படி எழுத ஏழு ரூபாய் ஐம்பது காசு ஏர்மெயில் கவர் வேண்டும். என்ன செய்வது? பெங்களூரில் இருக்கும் ஒரு பைபிள் பயிற்சிப் பள்ளியில் சேர்வது. மொத்தம் பதினைந்து பாடங்கள். முதல் பாடத்திற்கான பதிலை பெங்களூருக்கு நம் செலவில் இன்லான்ட் லெட்டரில் எழுத வேண்டும். தொடர்ந்து பதினான்கு பாடங்கள் வாரந்தோறும் பெங்களூரிலிருந்து வரும், கூடவே நியூஸிலாந்தில் இருக்கும் என்னுடைய தனிப்பயிற்சியாளருக்கு எழுத அவர் முகவரியிட்ட ஏர் மெயில் கவர். இதில் ஒன்றைக்கூட பயிற்சியாளருக்கு அனுப்பிவிடக்கூடாது. அவருக்கு நாம் மாணவராக இருக்கும் விஷயமே தெரியாது, அவருக்கு நான் அனுப்புவதாக நம்பிக்கொண்டு பெங்களூர் ஏர்மெயில் தானம் செய்யும். அவையெல்லாம் மேலே வேறு முகவரி ஒட்டப்பட்டு இக்வடார், தென்னாப்பிரிக்கா போன்ற இந்திய தூதரகம் இல்லாத நாடுகளுக்கும், இவாஞ்சலிக்கல் ஒலிபரப்புக் கேந்திரங்களுக்கும் செல்லும். (இதைச் சொன்னதற்காகப் பின்னாளில் பாட்டியிடம் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். பாட்டி எனக்காக வேளாங்கன்னி போவதாக வேண்டிக்கொண்டாள்). என்னுடைய பதினாலும் தீர்ந்தவுடன், பம்பாயில் இருக்கும் என் அண்ணன் அவனுக்கே தெரியாமல் பைபிள் கற்றுக் கொள்ளத் தொடங்குவான்.
எல்லாம் முடிந்தது. நாற்காலியை விட்டு எழுந்து ஐந்து நிமிடமாக மனிதர் எதையெதையோ பேசிக்கொண்டு நிற்கிறார். தன்னுடைய பையனை உதவாக்கரை என்று திட்டுகிறார் (படிக்கிற காலத்தில் காதுக்குள் டிரான்சிஸ்டரைத் தொங்கவிட்டுக் கொண்டு திரிவதாக என் அப்பாவும் திட்டுவார்). என் அம்மாவிடம் என்னை ஏகமாகப் பாராட்டுகிறார், ஆனால் வீட்டை விட்டுப் போவதாகத் தெரியவில்லை. தயங்கித் தயங்கி என்னிடம் மெதுவாக “தம்பி அந்த முக்கோணமா போட்டு நிறைய துணிக்கொடி வைச்சிருக்கீங்கள்ல அதுல ஒன்னு தரீங்களா, என் பையனுக்கு” என்று கேட்கிறார். நான் சந்சோஷமாக “Radio Station Peace & Progress, Moscow” என்று கோவணத்துணி கணக்காக நீண்ட ஒரு பென்னன்டை (முழுக்க முழுக்க கம்யூனிசச் சிகப்பு) அவருக்குக் கவரில் போட்டுத் தருகிறேன். என் அம்மாவிடம் இன்னும் இரண்டு நிமிடங்கள் என்னைப் புகழ்ந்துவிட்டு திருப்தியுடன் நடையைக் கட்டுகிறார்.
“ஜெர்மன்காரன் என்ன செய்யறான் இப்பன்னு தெரிஞ்சுக்கறது, இந்தியாவுக்கு நல்லதோல்லியோ. அதனாலத்தான் நம்ப ரமணன்டேந்து அவாளப்பத்தி தெரிஞ்சுக்க சிஐடியை அனுப்பியிருக்கா. இந்தப் புள்ளயாண்டானுக்குத்தான் உலகச் சமாச்சாரமெல்லாம் அத்துப்படியோல்யோ” என்று பால் டிப்போ அசோக்கிடம் கூறிக்கொண்டே வீட்டுக்குச் செல்கிறார் மிருதங்கம் கணேசய்யர்.
வெங்கட், கதை முடிவில் தலையைச் சொறிந்து கொண்டு காவலர்,கையூட்டு கேட்கப் போகிறார் என நினைத்திருந்தேன்.கொடி ஒன்று
கேட்டது பரவாயில்லை.
பெங்களூர் பள்ளியில் கிருத்துவ பாடம் பற்றி எழுதியிருந்தீர்கள்.
அடியேனுக்கும்,உயிர் நண்பன் பாலுவுக்கும் ( கும்மோணத்தான் / சங்கர மடத்தில் அவன் தாத்தா கணக்குப்பிள்ளையாய் இருந்தார் )
செலவுக்கு காசு என்பதெல்லாம் வீட்டில் கொடுத்ததில்லை.கேட்காதவைகளை முதுகில் கொடுப்பார்கள்.கடைசி எழுபதுகளில்
‘காழி திரையரங்குகளில் காலைக்காட்சி போட ஆரம்பித்திருந்தான்கள். “ஃபோர் ஸ்டார்” அரங்கில் – “தரைக்கு” 35 பைசா.
இதற்கு கூட வழியிருந்ததில்லை.
தந்தி நாளிகையை ‘சம்மந்தம் முடி திருத்தகத்தில்’ படித்த பாலுவுக்கு அதில் கண்ட ஒரு செய்தி பிடித்துப்போனது.
” தேவமகனை பற்றி அறிந்து கொண்டு,உண்மை கடவுளை அறிந்து கொள்ள விரும்புவோர்” விஜயவாடா முகவரி ஒன்றுக்கு
எழுதிப்போட்டால்,கிருத்துவ உண்மை விளம்பும் நூல்களும்,பிரசார தூண்டுகளுக்கும் அனுப்பப்படும் என்றது அச்செய்தி.
நான்,பாலு மற்றும் உப்பிலி ஆளுக்கொரு அஞ்சலை நிறைய பொய்க்காரணங்களை வைத்து எழுதிப் போட்டோ ம்.
2வாரம் கழித்து வந்தன பொதிகள்.
” சும்மா சொல்லக்கூடாது,கிறிஸ்டியன்கள்னா,கிறிஸ்டியன்கள்தான்.. என்னமா வெண்ணை காகித்தில் போட்டிருக்கான்
பாரு,,.அரை கிலோ பிரிட்டானியா பிஸ்கட்டை நல்லா பொட்டலம் கட்டலாம் இந்த பேப்பர்ல..நம்ம ஆளுங்களும்தான் இருக்கானுங்க,
தோணிபுரம் தலவரலாற சாணி காகிதத்தில் போடறானுங்க.”.இது மளிகைக்கடை காத்து ( காத்தவராயன் )
சொன்னது..
தேறிய 2, 2 1/2 கிலோவில்,காத்து தயவில், அடுத்த வீட்டு பெண்,லோரல் ஹார்டி படம் ஒன்று எனப் பார்த்தோம்.
ரேடியோ எண்ணையில் (?) செய்த முறுக்குகள் ஐந்தாறு வாங்கவும் கொஞ்சம் காசு மீதி இருந்தது.
உங்களுடைய இந்த அனுபவம் வித்தியாசமானது. இப்போது கூட இந்தியாவில் இந்தமாதிரி கெடுபிடிகள் உண்டா என்று தெரிந்துகொள்ளத்தோன்றுகிறது.
வாà®à®©à¯,
வாà®à®©à¯ à®à®¤à¯ à®®à¯à®´à¯à®à¯à® à®®à¯à®´à¯à®à¯à® à®à®©à¯ à®à¯à®¨à¯à®¤ ஠னà¯à®ªà®µà®®à¯, à®à®¤à¯à®¯à®²à¯à®²:)
à®à®©à®à¯à®à¯ மி஠஠ரà¯à®à®¿à®²à¯à®¯à¯ à®à®°à¯à®à¯à®à®¿à®±à¯à®°à¯à®à®³à¯. à®à®à¯à®à®³à¯ ஠னà¯à®ªà®µà®à¯à®à®³à®¿à®²à¯ பலவà¯à®®à¯ à®à®©à®à¯à®à¯à®®à¯ நà¯à®°à¯à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®©. (à®à¯à®à¯à®à®¾à®´à®¿à®à¯à®à¯à®®à¯ à®à¯à®®à¯à®®à¯à®£à®¤à¯à®¤à¯à®à¯à®à¯à®®à¯ தà¯à®°à®®à®¾ à®à®©à¯à®©?). யà¯à®à¯à®µà¯à®¤à¯ தவிர à®à®©à¯à®©à¯à®®à¯ à®à®¿à®² à®à®°à®à®à®¿à®¯à®à¯à®à®³à¯à®®à¯ à®à®£à¯à®à¯ ஠வறà¯à®±à¯ வரà¯à®®à¯ நாà®à¯à®à®³à®¿à®²à¯ à®à®´à¯à®¤à¯à®à®¿à®±à¯à®©à¯.
à®°à¯à®à®¿à®¯à¯ à®à®£à¯à®£à¯à®¯à¯ à®®à¯à®±à¯à®à¯à®à¯à®µà®¿à®©à¯ à®à®©à¯à®©à¯à®°à¯ à®°à®à®à®¿à®¯à®®à¯ தà¯à®°à®¿à®¯à¯à®®à®¾? à®à®à¯à®à®³à¯ à®à®°à®¿à®²à¯ ஠தறà¯à®à¯à®ªà¯ பழà¯à®¯ à®à¯à®¤à¯à®¤à¯ à®®à¯à®±à¯à®à¯à®à¯ à®à®©à¯à®±à¯ பà¯à®¯à®°à¯. à® ·à®¤à®¾à®µà®¤à¯, à®®à¯à®¨à¯à®¤à¯à®ªà¯à®© பழà¯à®¯ à®à¯à®±à¯à®±à¯ à®à®±à®µà¯à®¤à¯à®¤à¯ à® à®°à¯à®¤à¯à®¤à¯ பிழியபà¯à®ªà®à¯à®®à¯ à®®à¯à®±à¯à®à¯à®à¯ ஠தà¯. à®®à¯à®±à¯à®à¯à®à¯ à®à®°à®à®°à®ªà¯à®ªà®¾à® à®à®°à¯à®à¯à® ஠ரிà®à®¿ மாவ௠தà¯à®µà¯, ஠த௠à®à®®à®¯à®®à¯ ஠த௠à®à®à¯à®à¯ à®®à¯à®à¯à®à¯ à®à®©à¯à®±à¯ பà¯à®à®¾à®®à®²à¯ à®®à¯à®©à¯à®®à¯à®¯à®¾à® à®à®°à¯கà¯à® பயற௠வà®à¯à®à®³à¯ (à®à®³à¯à®¤à¯à®¤à®®à¯à®ªà®°à¯à®ªà¯à®ªà¯, à®à¯à®±à®¿à®ªà¯à®ªà®¾à®) தà¯à®µà¯. à®à®°à®£à¯à®à®¾à®µà®¤à¯ à®à®®à®¾à®à¯à®à®¾à®°à®®à¯ வில௠஠திà®à®®à®¾à®©à®¤à¯. ஠தà¯à®à¯ à®à®°à®¿à®à®à¯à® ஠ரிà®à®¿ மாவ௠à®à®±à¯à®±à¯ நà¯à®¤à®¿à®à¯à®à®µà®¿à®à¯à®à®¾à®²à¯ ஠த௠மà¯à®©à¯à®®à¯à®¯à®¾à®à¯à®®à¯. à®à®©à®µà¯, à®à®à¯à®à®³à¯ நணà¯à®ªà®°à¯à®à®³à¯ வà®à¯à®à®¾à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ ஠தறà¯à®à¯ பழà¯à®¯ à®à¯à®¤à¯à®¤à¯ à®®à¯à®±à¯à®à¯à®à¯ à®à®©à¯à®±à¯ பà¯à®¯à®°à¯.:)
஠னà¯à®ªà¯à®à®©à¯
வà¯à®à¯à®à®à¯
இரமணி,
இப்பொழுது DXing என்று சொல்லப்படும் பொழுதுபோக்கு பெரிதும் அழிந்துவிட்டது. காரணம் இணையம். ஆனால் மடத்தனமான கட்டுப்பாடுகளும், கிறுக்குத்தனமான போலீஸ் நடவடிக்கைகளும் ஒருபோதும் அழியாது.
வெங்கட்,
சின்னச்சின்ன விஷயத்தைக்கூட விடாமல் ஞாபகம் வைத்து எழுதுவது மிகவும் சுவையாக இருக்கிறது. இன்னும் உங்கள் சுய சரிதை அத்தியாயங்களை எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்,
-காசி
removed by admin