பாம் கைக்கணினி வைத்திருப்பவர்கள் இன்று முதல் கிறிஸ்துமஸ்வரை தினமும் ஒரு இலவச மின்புத்தகத்தை இறக்கிக் கொள்ளலாம் என்று என்னுடைய நண்பன் ஒருவன் சொல்கிறான். (என்னிடம் பாம் கிடையாது, நான் நான்கு வருடங்களுக்கு முன்பு காஸியோப்பியா ஈ-100 வாங்கினேன். இப்பொழுது அதன் மின்கலம் கடைசி மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், அதில் பதிலினக்ஸைப் போட்டுப் பார்க்கலாமா என்று இருக்கிறேன்).

இன்றைய புத்தகம் ஒன்றும் அவ்வளவு சுவாரசியம் இல்லை (Andersen’s Fairy Tales by Hans Christian Andersen) இது என்னிடம் பல நாட்களாக மின்புத்தக வடிவில் இருக்கிறது (என்னுடைய மகன் விக்ரமுக்கு மிகவும் பிடித்த புத்தகம்). இருந்தாலும் நேர்த்தியான வடிவில் இலவசமாகக் கிடைத்தால் – முயன்று பார்த்துச் சொல்லுங்களேன்.
மின் புத்தகம் பற்றிய இன்னொரு தகவல் – சில நாட்களுக்கு முன்பு open e-book தரக்குழு பற்றி எழுதியிருந்தேன். இந்தக் குழுவில் முக்கிய உறுப்பினர்கள் மைக்ரோஸாப்ட், அடோபி மற்றும் பாம். இவர்கள் மூவரும் தத்தம் காப்புரிமை பெற்ற மின்புத்தக வடிவத்தையே முன்னிருத்துவதால்தான் மின்புத்தகச் சந்தை விரிவடையாமல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். < a href=http://www.hindustantimes.com/2003/Oct/16/181_411776,00030010.htm> மேலதிகத் தகவல். HTML, XML போல திறந்த வடிவப் பொதுத் தரங்கள் வந்தால்தான் மின்புத்தக உலகு விரிவடையும். இதில் மைக்ரோஸாப்ட்டின் அராஜகம் சொல்லி மாளாது.